Header Ads



பிறை பற்றிய ஆலோசனை சபை, இவ்வாரம் கூடுகிறது

பிறையைத் தீர்­மா­னிக்கும் விடயம் தொடர்பில் கடந்த வாரம் நிய­மிக்­கப்­பட்ட ஏழு பேர் அடங்­கிய ஆலோ­சனை சபை இவ்­வாரம் தனது முதல் அமர்­வினை நடத்­த­வுள்­ள­தா­கவும் இவ் அமர்­வின்­போது ஆலோ­சனை சபை­யினால் மேலும் 15 பேர் பிறை விவ­காரம் தொடர்பில் செயற்­ப­டு­வ­தற்கு நிய­மிக்­கப்­ப­ட­வுள்­ள­தா­கவும் ஆலோ­சனை சபையின் உறுப்­பி­னரும் வக்பு சபையின் தலை­வ­ரு­மான சட்­டத்­த­ரணி எஸ்.எம்.எம்.யாசீன்தெரி­வித்தார்.

பிறை விவ­காரம் தொடர்பில் நிய­மிக்­கப்­பட்­டுள்ள ஆலோ­சனை சபையின் செயற்­பா­டுகள் தொடர்பில் வின­வி­ய­போதே ஆலோ­சனை சபையின் உறுப்­பினர் எஸ்.எம்.எம்.யாசீன் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் இது தொடர்பில் விளக்­க­ம­ளிக்­கையில்; நிய­மிக்­கப்­ப­ட­வுள்ள 15 பேரும் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல்  உலமா சபை, கொழும்பு பெரிய பள்­ளி­வாசல், முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் என்­ப­ன­வற்றைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­துவார். திணைக்­க­ளத்தின் சார்பில் நிய­மனம் பெற­வுள்ள ஐவரும் திணைக்­க­ளத்­துக்கு வெளி­யே­யி­ருந்து நிபு­ணத்­துவம் பெற்றோர் தெரிவு செய்­யப்­ப­டு­வார்கள்.

குறிப்­பிட்ட 15 பேருக்கும் அவர்கள் பிறை தொடர்­பாக எதிர்­கா­லத்தில் மேற்­கொள்ள வேண்­டிய நடை­மு­றைகள் பற்­றிய விளக்­கங்­களை ஆலோ­சனை சபை வழங்­க­வுள்­ளது. பிறையைத் தீர்­மா­னிக்கும் விட­யத்தில் எவ்­வாறு பிறையைத் தீர்­மா­னிக்கும் குழு செயற்­படும் என்­பது தொடர்பில் மக்­க­ளுக்குத் தெளி­வு­களும் வழங்­கப்­ப­ட­வுள்­ளன.

ஆலோ­ச­னைக்­குழு தற்­போ­தைய பிறைக்­கு­ழு­வுடன் இணைக்கப்படவுள்ள 15 பேருக்கும் தொடர்ந்தும் ஆலோசனைகளை வழங்கிக் கொண்டிருக்கும். பிறைக்குழுவை நிறுவனப்படுத்திக் கொண்டிருக்கும் என்றார்.

1 comment:

  1. If there are problems on sighting of the moon even after forming this group then we should find out the culprits who create division in the community.

    ReplyDelete

Powered by Blogger.