Header Ads



தொப்பி அணிந்து, தாடி வைத்திருந்தவர் குர்ஆன் சுவரொட்டியை கிழித்து வீசினார்

இஸ்லாமிய வரலாற்றில் பரம விரோதிகளாக இருந்த பலரை இஸ்லாத்தின் பால் புனித குர்ஆன் இழுத் தெடுத்தது. அது மட்டுமல்லாது இன்றும் பலரை நல்லவர்களாக மாற்றிக் கொண்டே வருகிறது என்று அஷ்ஷேஹ் ஹூஸ்னி முபாரக் (இஸ்லாஹி) தெரிவித்தார்.(2.6.2018)

மடவளை பஸார் தாருல் அசனாத் மண்டபத்தில் இடம் பெற்ற சொற்பொழிவு நிகழ்வு ஒன்றிலே அவர் இதனைத் தெரிவித்தார். 'மாறியது உலகம், மாற்றியது குர்ஆன்' என்ற தலைப்பில் அவர் உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது –

திருக்குர்ஆனின் சிறப்புக்கள் எண்ணிடங்காது. அவற்றை அடுக்கிக்கொண்டே போகமுடியும். இறைவனிடமிருந்து உலகிற்கு நற்செய்திகளைக் கொண்டு வந்த பல்லாயிரக்கணக்கான மலக்குளில் ஜிப்ரீல் (அலை) என்ற மலக்கு முதன்மை பெருகிறார். ஏனைய மலக்குளைவிட அவர் உயர் அஸ்தத்தில் இறைவன் வைப்பதற்கு அவர் உலகிற்குச் சுமந்து வந்த திருக்குர்ஆன் ஒரு காரணமாகும்.  

அது மட்டுமல்ல அந்தக் குர்ஆன் இறங்கப்பட்ட மாதமான றமலான் மாதத்தை இறைவன் கன்னியப் படுத்திவைத்துள்ளான். அதனாலே முஸ்லிம்கள் அம் மாத்தித்ல் பசித்திருந்து, விழித்திருந்து, தனித்திருந்து, நற்காரியங்கள் செய்து வருகினறனர். தமது ஆசா பாசங்கள் அனைத்தையும் இறைவனுக்காக அர்பணித்து அதனைத் துறந்து தியாகத்திலும், தியானத்திலும் ஈடுபடுகின்றனர். அதிலும் குர்ஆன் அருளப் பட்ட தினமான 'லைலதுல் கத்ர்' தினம் இன்னும் கன்னியம் மிக்கதாக மாற்றப்பட்டுள்ளது. அது ஆயிரம் மாதங்களைவிட சிறந்த ஒரு இரவாக அதனை முஸ்லிம்கள் ஏற்றுள்ளனர். இத்துனை சிறப்புக் பொருந்திய திருக்குர்ஆன் மேற்கொண்ட ஆயிரமாயிரம் மாற்றங்களில் ஒருசில பலராலும் இன்று வரை பேசப்பட்டு வருகிறது. அதில் ஒன்றுதான் அன்று முஸ்லிம்களின் பரமவிரோதியாக இருந்த பிற்காலத்தில் இஸ்லாத்தை தழுவிய உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களது தலையை வெட்டி வரப ;புறப்பட்டவர். அவர் காதில் விழுந்த இறை வசனங்கள் அவரை இஸ்லாத்தின் பால் திசை திருப்பியது. 

அதேபோல் புலைல் என்ற மாபெரும் திருட்டுக் கும்பலின் தலைவராக இருந்தவரை குர்ஆன்வசனங்கள் மாற்றியது. அவரை சிந்திக்க வைத்தது. பின்னர் 8 வருடகாலம் ஹரம் சரீபில் இமாமாக இருக்கும் அளவு உயர்ச்சி பெற்றார். அந்தளவு மனமாற்றத்தை ஏற்படுத்தியது. 

அதேபோல் ஒரு மனிதனில் இறையச்சத்தை அதிகரிக்க நோன்பு உதவுகிறது. மறுபுறம் இறையச்சத்திற்கு குர்ஆன் வழிகாட்டுகிறது. உமர் (ரலி) போன்ற மாவீரர்களைவீழ்த்தி நலிவடையச் செய்த குர்ஆன் எம்மில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்றால் அதில் ஏதோ தவறு நடந்துள்ளது எனலாம். அதாவது பொருளுணராத காரணத்தால் பயன் இல்லாமற் போனது என்றே கூறவேண்டும். பொருள் தெரியாது வெறுமனே குர்ஆனை வாசிப்பது எம்மில் மாற்றத்தை ஏற்படுத்தாமைக்கு காரணமாகும். நாம் நல்ல நோக்குடன் அதனை ஓதாதவரை அது எம்மை நல்லவராக மாற்றுமா எனக் கேட்கவேண்டியுள்ளது. அதாவது குர்ஆன் எம்மில் மாற்றத்தை  ஏற்படுத்தவில்லை என்றால் நாம் நயவஞ்சகனத்தனமாக குர்ஆனை ஓதுகிறோமா? எனச் சிந்திக்க வேண்டியுள்ளது.  

திருக்குர்ஆனின் கருத்துணர்ந்து ஓதுவதும் கருத்துணராது ஓதுவதும் இரண்டும் வேறுபட்டதாகும். உதாரணமாக கருத்துணர்ந்து ஓதாமல் வெறுமனே ஓதுவோமானால் அதற்கும் நன்மை உண்டு.  இருப்பினும் அது அழகிய ஒரு மலரைப் போன்றது. மலர் பார்வைக்கு அழகாக இருக்கும் சுவைத்தால் கசப்பாக இருக்கும். அழகானது என்பதற்கு அது சுவையாகாது. அதே நேரம் பொருள் உணர்ந்து ஓதுவது ஒரு கனிந்த ஆரஞ்சுப் பழத்தைப் போன்றது. அதில் அழகுள்ளது. மணம் உள்ளது. சுவை உள்ளது. குனம் உள்ளது. போசாக்குடையது. இதுபோல்தான் வேறுபாடுகள் உள்ளன. 

மாபெரும் வீரரான உமர் (ரலி) அவர்களது காதில் குர்ஆன் வசனம் விழுந்தால் அவர் பெட்டிப் பாம்பாக அடங்கி விடுவார். நாம் என்ன செய்கிறோம் என்பதே எமக்குத் தெரியாது. அண்மையில் நான் கண்ட ஒரு சம்பவத்தைக் குறிப்பிடலாம். குறிப்பிட்ட அமைப்பு ஒன்று குர்ஆனைப் பற்றியும் அதனை ஓதி பயனடைவது பற்றியும் ஒரு விளம்பரத்தை வெளியிட்டிருந்தது. அச் சுவரொட்டியில் 'குர்ஆன் வசனங்களைப்பற்றி ஏன் சிந்திக்க வில்லை. உங்கள் உள்ளங்களுக்கு பூட்டுப் போடப்பட்டுள்ளதா?' என்ற கருத்துள்ள குர்ஆன் வசனத்தின் மொழி பெயர்ப்பு போடப்பட்டிருந்தது. அதனை தொப்பி அணிந்து தாடி வைத்த தோற்றத்தில் முஸ்லிம்மாக உள்ள ஒருவர் கிழித் தெரிந்தார். அச்சுவரொட்டியை ஒட்டிய அமைப்பு தனிப்பட்ட முறையில் அவருக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக குர்ஆன் வசனத்தை கிழித் தெரிய முடியாது. அப்படியாயின் குர்ஆன் அவரது உள்ளத்தில் மாற்றத்தை எற்படுத்தவில்லை என்பதேகருத்தாகும். இப்படி பலரைக் காண்கிறோம். உண்மையாக குர்ஆனை விளங்கி அதன் படி நடக்க முயற்சிக்கா விட்டால் அதில் பயன்னில்லை. குர்ஆன் குறிப்பிடும் விதத்தில் அவர்களது உள்ளஙகளுக்கு பூட்டுப் போடப்பட்டுள்ளதாகவே கருத வேண்டியுள்ளது என்றார்.  

1 comment:

  1. I don't think that what he did was wrong or right but it is the pity that now al-Quran and it's verses were commercialized, it's sacred is gone and used as novels.Distributing as normal book.To understand the Quran fully there must be interpretation or the reason of for what purpose and at what time those ayah was brought down. when There were some incident happened and beyond the comprehension of Prophet(PBUH) and sahabas most ayah was brought down to clear or to allay the fear or doubt and convince the deep meaning which is not normal man could understand.

    So mere direct translation is not sufficient and the people who are blinded by worldly affairs and corrupt minded are not suitable to do simply because of their Arabic Knowledge.Now it is shame that Muslims fighting each other on the basis of different interpretation and sectarianism is simply because they did not understand the proper meaning of "THOUHEED" and very basic of "KALIMAH" which has deep meaning rather than it's direct meaning.

    I discussed this with some Ustads regarding this and they agreed after my explanation.So problem is that Islam is commercialized and attempt to impose on others and displaying as it is commodity items.
    So that what bearded man did was not to insult may be in good intention.So In Islam reward is not for the action but for intention.

    ReplyDelete

Powered by Blogger.