June 09, 2018

விஜேதாசவை ஒட்டுமொத்த முஸ்லிம்களும், எதிர்க்க வேண்டும் - ஹரீஸ் போர்க் கொடி

விரிவுரையாளர்களுக்கு பாலியல் இலஞ்சம் கொடுத்தே தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவிகள் சித்தியடைகிறார்கள் என அமைச்சர் விஜேதாச ராஜபக்ச பாராளுமன்றத்தில் கூறிய கூற்றை பிரதி அமைச்சர் ஹரீஸ் வண்மையாக கண்டிப்பதாக தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.  

உயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ நேற்று (8) வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாராளுமன்ற அமர்வின்போது தெரிவித்த மேற்படி கூற்றுத் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் மேற்கண்டவாறு தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

நான் கல்முனையில் இருந்தபடியினால் குறித்த பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள முடியாமல் போனதனால் அவ்விடத்தில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட முடியாமல்போனது. துறைசார்ந்த பொறுப்புவாய்;த அமைச்சராக இருந்துகொண்டு இந்நாட்டின் அடையாளச் சின்னமான தேசிய பல்கலைக்கழகத்தின் புகழுக்கு களங்கத்தையும் அப்பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள் மற்றும் மாணவிகளின் நற்பெயருக்கு அபகீர்த்தியையும் ஏற்படுத்தும்வகையில் குறித்த அமைச்சர் உரையாற்றியமை மிகுந்த வேதனையளிக்கின்றது. 

துறைசார்ந்த அமைச்சர்கள் தமக்கு கீழுள்ள நிறுவனங்களின் அபிவிருத்தியை உச்ச நிலைக்கு கொண்டு சென்று அதன் புகழை உயர்த்துவதற்கு பாங்காற்றுவதனையே உலகலாவிய ரீதியில் பாத்திருக்கின்றோம் ஆனால் இலங்கையில் அதற்கு மாற்றமாக நடைபெறுகின்றது. உண்மை நிலையினை கண்டறிந்து அந்நிறுவனத்தின் புகழை உயர்த்துவதற்கு முயற்சிசெய்யாது ஏளனமாக தன்னுடைய நிறுவனத்தைக் கொச்சைப்படுத்தி அந்நிறுவனத்தின் செயற்பாட்டை நலிவடையச் செய்யும்வகையில் துறைசார்ந்த அமைச்சர் பேசியிருப்பது இனவாத கண்ணோட்டத்துடன் என்பது வெளிப்படையாகின்றது.

மேலும் குறித்த பல்கலைக்கழகத்தின் அமைவிடம் முஸ்லிம் சமூகத்தைப் பெரும்பாண்மையாக கொண்ட பிரதேசமாக காணப்படுவதனால் அமைச்சருக்கு ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சி மற்றும் எரிச்சலின் வெளிப்பாடாகவே நான் இதனைப் பார்க்கின்றேன். எனவே இந்த அமைச்சரின் கூற்றை ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் எதிர்க்க வேண்டியுள்ளது, அடுத்த பாராளுமன்ற அமர்வில் இந்த விடயத்தைக் கொண்டுவருவதோடு பிரதமரின் கவனத்திற்கும் கொண்டுசெல்ல இருக்கின்றேன். 

படித்த நாகரிகமுள்ள எந்த ஒரு சமூகமும் இவ்வாறான கூற்றுக்களை அங்கிகரிக்க மாட்டாது என்பதை உறுதியாக நம்புகின்றேன். எனவே ஒட்டுமொத்த கல்வியியலாளர்களும் இக்கூற்றைக் கண்டிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுப்பதாக பிரதி அமைச்சர் ஹரீஸ் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.   

(அகமட் எஸ். முகைடீன்)

12 கருத்துரைகள்:

ரணிலின் கீழ் இருக்கும்போது ஒருவாறு ரணில் இந்த நபரின் வாயை ஓரளவு கட்டிப்போட்டார்.இப்போது பெரியவரின் கீழ் கத்தத் தொடங்கியுள்ளான். கடைசியில் எல்லோரும் சீசீ என்றாலும் தொலையமாட்டான் போல் தெரிகிறது.

ஹக்கீம் அவர்கள் ஏன் இதட்கு எதிராக குரல் எழுப்பவில்லை ?

Wijedasa was uprooted from his previous position Minister of Law and Order due to his involvement with many incidents against minority community and also not adhereing to the party policies. However he was reinstated again by PM-RW as Minister of Higher Education recently. Do you think Mr. Harris, PM will listen to your complain? I doubt because they are all in one pool. You have to bring it to the mass to be vigilant on the next election not to give any chance for these type of racist people to come to parliament.

have listen his speech completely what he had said do not do politics here vijayathasa completely mentioned his name Alif and He want to tell situation of the university. Alif ask with two girl to support in sex to approve the TCC do you know that? inquiry going on girl provide the Voice Record of the Alif dont talk dont apply your politics

vijedasa was uprooted another side, what are you going to tell about this Alif sexual matter do you knew how many student runaway from his sexual harassment?

ராஜபக்ச ஆட்சியை நோக்கி முஸ்லிம்கள் நகர ஜனாதிபதியால் இவன் இயக்கப்படலாம். உண்மையில் முதுகெலும்பில்லாத ரணிலிற்கு கொஞ்சமாவது அதிகாரமிருந்தால் இவன் அரசியல் வாழ்க்கையை முடித்துக்கட்ட வேண்டும்

Do not look into this problem differently .Give due weight to Higher education ministers statement . SEUSL a national university located in Oluwil . If a very serious problem like this brought by a not other than higher education minister don't look political side.
There was some problem in some other state university students involving drugs .
In state universities to maintain discipline
academic standards problems similar this bring to the notice of concerned have to be taken seriou action .
Pay attention only to what he has said true or not .


தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்களிடம் அரசாங்கம் விசாரணை செய்து சம்பந்தபட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.

அமைச்சரின் கூற்றை தெளிவாக விளங்கிய பின்னரே அறிக்கைகள் மன்னர்கள் அறிக்கை விட வேண்டும்.
அமைச்சர் அங்குள்ள பெண்களை ஒரு சில விரிவுரையாளர்களிடமிருந்து பாதுகாக்கும் நோக்கில் இதைக் கூறினார்

Please listen to the complete speech before jumping. these problems are happening everywhere he said.You politicians want to hide all those facts seeking support from the voters. There is investigations going for along time and there is a mafia and did you all look into that. Whoever has done mistakes should be punished.

மத்திய வங்கியைச் சூறையாடுவதில் ஐ.தே.க.முன்னணியினர் செய்த அட்டகாசம் தான் இவன் சனாதிபதி மூலம் பதவிக்கு வரக்காரணம். இவன் ஒரு இனவாதி என்பது மட்டும் தௌிவாகத் தெரிகிறது.

நிறையப் பேர் விரிவுரையாளரைப் பற்றி தெரியாததால்தான் விஜேதாசவின் கருத்தை முன்னைய அனுபவங்களை வைத்து இனவாதமாக பேசுவதாக கூறுகின்றனர்,ஆனால் இங்கே கருத்துரைத்திருக்கும் அங்கே கல்விகற்ற அவ்விரிவுரையாளரை அறிந்த ஆப்தீனின் கருத்து நிலையே சரியானது. அவ்விரிவுரையாளருக்கு பல்கழைக்கழகத்தில் விசாரணை நடைபெற்றதாக தகவல் .அது விஜேதாசவுக்கு எட்டி இருக்கிறது,அதுதான் அவருக்கு சந்தர்ப்பம் ஒன்று வந்த போது அவரை முழு நாடே அறியும்படி செய்து எச்சரிக்கைவிட்டிருக்கிறார். இதை நாம் இனவாத பேச்சாக பார்க்கவேண்டியதில்லை. களைபிடுங்குவதற்கான அல்லது அது போன்று நடப்பவர்களுக்கான எச்சரிக்கையாகவே பார்க்க வேண்டும்.

Post a Comment