Header Ads



பிறை கண்டது பொய், சதி என அவதூறு பரப்பியவர்களுக்கு அதிர்ச்சிகரமான தகவல்


14.06.2018 வியாழன் ரமழான் 28 பிறை காண்பது அசாத்தியம் அன்றைய தினம் பிறை கண்டது என்பது திட்டமிடட சதி, என்றெல்லாம் கதை பரப்பியவர்களுக்கு இன்னுமொரு அதிர்ச்சிகரமான செய்தி.

இலங்கை வானவியல் ஆராய்ச்சியில் மிக நவீன தொழிலநுட்பங்களை கொண்ட Arthur C Clarke Institute இல்

14.06.2018 ரமழான் 28 வியாழன் மாலை இலங்கையில்  பிறை தென்பட்டதா?

அப்படி தெரிந்திருந்தாலும் அந்தப் பிறை வெற்றுக் கண்களுக்கு தென்படும் சாத்தியம் இருந்ததா என்று அவர்களிடம் சில தகவல்களை கேட்டிருந்தோம்.

அதற்கு எமக்கு  அவர்களிடமிருந்து கிடைத்த பதிலை (E-Mail) நாம் கீழே இணைத்துள்ளோம்.

அக்கடிதத்தில் முக்கியமான  இந்ததகவல்களை அவர்கள் எமக்கு தந்தார்கள்.

👇👇👇👇
Email 

Please find the information you have requested from me on your telephone conversation with me in the morning.

Date: 2018-Jun-14 
Position of Moon at :18:30
Elevation Angle above western Horizon: 7 Degrees
Direction:  20 Degrees from West to North
Fraction of the illumination: 0.7%

Moon can be visible to naked eye

Regards

Principal Research Scientist
Arthur C Clarke Institute

இந்த தகவலை தந்தது இந்த நாட்டின் வானவியல் விஞ்ஞானிகள்.

இக்கடிதத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது 14.06.2018 (வியாழன்) ரமழான் 28 இல் பிறையை வெற்றுக்கண்களால் பார்க்க முடியும் என்று.

அது மட்டுமல்ல சில சர்வதேச தென்னாசிய நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள்
அன்றைய தினம் வெற்றுக்கண்களுக்கு பிறை தெரியாது என்று சொல்லியிருக்கறார்களா என்று கேட்டோம்

அவர் எமக்கு பதிலளித்த போது,
நாம் அனுப்பியிருக்கும் இந்த தகவல்கள் 14.05.2018 எமது கருவிகளில் பதியப்பட்ட உத்தியோகபூர்வ தகவல்கள்.

இந்த தகவலை நீங்கள் வானவியல் கற்ற எவரிடம் கொடுததாலும் இப்படியான நிலையில் வெற்றுக்கண்களால் பிறை பார்க்க முடியும் என்று சொல்வார்கள்  என்று பதிலளித்தார்கள்.

அன்றைய தினம் பிறை காண்பது அசாத்தியம், அன்றைய தினம் பிறை கண்டது பொய் அன்றைய தினம் பிறை கண்டது சதி என்று செய்தி பரப்புபவர்கள்.

நீங்கள் உண்மையை பரப்பி கொண்டிருக்கிறீர்களா அல்லது அல்லாஹ் மீது சத்தியம் செய்த பிறையை வெற்றுக்கண்களால் கண்ட அல்லாஹ்வின் அடியார்கள் பலரை பொய்ப்பித்து பாவத்தின் மேல் பாவத்தை தேடிக்கொண்டிருக்கிறீர்களா  என்பதனை கீழ் உள்ள முகவரிக்கு நேரடியாக சென்று அல்லது கீழ் உள்ள இலக்கத்துக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

நாம் மீண்டும் சொல்கிறோம் ரமழான் 28 இல் பிறை காண்பது சாத்தியமே இல்லை என்று உலக விஞ்ஞானிகள் சொன்னதாக சொன்னீர்களே,

குறைந்தது அந்த விஞ்ஞானிகளின் பெயரையாவது சொல்லுங்கள்
நாம் எங்காவது அவர்களின் ஈமெயிலை பெற்று அவர்களிடம் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டுப் பார்க்கிறோம். நீங்கள் தெளிவு பெற்றது போல நாங்களும் தெளிவு பெறுகிறோம்.

இல்லையேல் நீங்கள் சொன்னவை பொய் பிறைகண்டவர்கள் மீது  நீங்கள் பரப்பியது அவதூறு என்று ஒப்புக்கொண்டு, பிறைகண்டதாக சொன்னவர்களிடம்  சென்று மன்னிப்பு கேளுங்கள்.

அப்படி கேட்காதவரை நீங்கள் எத்தனை ரமழான்களை அடைந்த போதும் எந்தப் பயனுமிருக்காது.

பாதிக்கப்பட்டவன் மன்னிக்காமல் அல்லாஹ் மன்னிக்கமாட்டான்

Visit or Mail us – (Postal Address)
Arthur C Clarke Institute for Modern Technologies,
Katubedda, Moratuwa, 10400, Sri Lanka

Email us : info@accmt.ac.lk

Call us (General) : : 
Telephone : 
+94-11-2650569, 
+94-11-2650838

Fax : +94-11-2650462


9 comments:

  1. Salaam
    email is clear about moon sighting. But it is not telling that a lunar month ends up from 28. A lunar months should be 29 or 30.
    Don't mix it up.

    ReplyDelete
  2. முக்கியமான சில தகவல்கள் சாமர்த்தியமாக தவிர்க்கப் பட்டுள்ளன..
    1. பிறை எவ்வளவு நேரம் வெற்றுக் கண்ணுக்கு புலப்படும் படி தோற்றமளித்தது.
    2- பிறை கண்டதாக சொல்பவர்களும் இதே திசையில் தான் கண்டதாக சொன்னார்களா?
    3- சாட்சிகள் பிறை சாய்ந்திருந்த திசையை பிழையாக சொன்னதாக ஜம்இய்யா தரப்பில் சொல்லப் படுகிறதே..
    அது பற்றிய தகவலையும் இங்கே காணோமே?

    ReplyDelete
  3. Mr Ahmed Uthumansha
    wa.salaam
    Just remember we started fasting on 2nd day of ramazan, unfortunately we couldn'd sight 1st day hilaal (crescent) to our naked eyes because of rain island wide.So there was chance to sight the crescent on thursday evening

    ReplyDelete
  4. Where were you when they decided the month of shabaan
    Completed on 30.on that day allso moon can see with the
    naked eye.then why you not apposed?
    if you want international moon say it directly!
    Don't say bla bla!

    ReplyDelete
  5. Mohammad sadham,
    I agree with you. May be the author of this article forgot to mention this in his article when he talking about 28 days.

    ReplyDelete
  6. உங்கள் கேள்விகளே
    உங்களின் பிறை தொடர்பிலான
    அறிவீனத்தை காட்டுகிறது.

    சூரியன் மறைந்ததிலிருந்து
    சந்திரன் மறையும் வரை பிறையை பார்க்கலாம்.

    யாரும் இன்னும் பிறை காண்பது சாத்தியமேயில்ல
    என்று
    யாரும் சொல்லவில்லை

    பிறை கமிட்டி தலைவர்
    25ஆம் நோன்பில் சொன்னது போல

    ReplyDelete
  7. Mohammad sadham,
    I agree with you. May be the author of this article forgot to mention this in his article when he talking about 28 days.

    ReplyDelete
  8. கேள்வியை விளங்கும் அளவுக்கு ஞானம் இல்லாதவர் பிறை பற்றிய விடயங்களை எப்படி விளங்குவார்...
    அதெல்லாம் பெரிய்ய விஷயம்பா!!!

    ReplyDelete
  9. Still; even if the moon sighted on the 28th, none wants to accept Wahhaabi/Salafi witnesses. None is ready to join hands with them due to thier radial Islamic ideologies. This is the 'Yathaartham' behind this issue. All thier efforts are beyond recognition. All brothers, plz understand.

    ReplyDelete

Powered by Blogger.