Header Ads



எனக்கு உதவ மாட்டார்களா..?


அபூர்வ நோயால் தனது கால்களை இழந்த ஒரு சிரிய அகதிச் சிறுமி செயற்கைக் கால்கள் வாங்க வசதியில்லாததால் காலி டின்களையே செயற்கைக் கால்களாக பயன்படுத்தி பள்ளிக்கு செல்லும் பரிதாப செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

Maya Meri (8) என்னும் அந்த சிறுமிக்கு இருக்கும் ஒரே ஆசை தனது தோழிகளுடன் நடப்பதும் விளையாடுவதும்தான்.

மழை வந்தால் சேறும் சகதியுமாகிவிடும் ஒரு கூடாரத்தில் தான் Maya Meriயும் அவளது குடும்பத்தினரும் வசிக்கிறார்கள்.

இந்த நிலையில் அவளுக்கு செயற்கைக் கால்கள் வாங்குவது குறித்து அவர்களால் நினைத்துக்கூட பார்க்க இயலாது.

Maya Meriயின் தந்தை காலி டின்களைக் கொண்டு செய்து கொடுத்துள்ள “செயற்கைக் கால்களின்” உதவியுடன் அவள் தினமும் 300 மீற்றர்கள் நடந்து பள்ளிக்கு செல்கிறாள்.

சில நேரங்களில் களைத்துப் போகும்போது அவள் தனது கைகளைப் பயன்படுத்தி தவழ்ந்து செல்கிறாள்.

இதில் பிரச்சினை என்ன என்றால், அவளது கைகளிலும் பிரச்சினை உள்ளதுதான். யாராவது தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் தனக்கு உதவ மாட்டார்களா, மீண்டும் நடக்க முடியுமா என Maya Meri காத்திருக்கிறாள்.


6 comments:

  1. How could I help her? No contact details or address

    ReplyDelete
  2. Please refer this photo and the history to this link, they may help her to get two prosthetic devices.
    https://www.transparenthands.org/contact-us/
    https://www.usaid.gov/partnership-opportunities/ngo
    https://www.ri.org/
    Please send this photo and news about this poor girl, so that they may help her God willing.

    ReplyDelete
  3. try to bring this girl to our country, I will take care of her pls.

    ReplyDelete
  4. How can I help this little? Please give me any nog to reach her

    ReplyDelete
  5. PLEASE TRY TO GET DETAILS
    I CAN HELP THIS CHILD

    ReplyDelete

Powered by Blogger.