Header Ads



மேலதிக தேர்தல்கள் ஆணையாளர், மொகமட்டின் விளக்கம்

ஓர் அபிப்பிராயத்தை அல்லது கருத்தை உருவாக்குவதுதான் ஜனநாயகம்; கருத்தைத் திணிப்பது ஜனநாயகமாகாது! அவ்வாறு ஜனநாயகத்தில் உள்ள பலவீனங்களைப் பற்றிப் பேசுவதுதான் தேர்தல்! மக்கள் ஜனநாயகத்தின் மாண்பை வெளிப்படுத்துவதற்குத் தேர்தல் நடத்தப்படுகிறது. அதற்கு வாக்குரிமை அத்தியாவசியம்.

இந்த அத்தியாவசியமான உரிமையைச் சிலர் உதாசீனம் செய்கின்றனர். நாட்டின் பிரஜையாக இருப்பதற்கும் வாக்காளராக இருப்பதற்கும் வேறுபாடு இருக்கிறது. பிரஜாவுரிமை உள்ளவர் என்ற அந்தஸ்தைப் பெற்றுத்தருவதே வாக்குரிமைதான். முழுமையான பிரஜை என்ற உணர்வைத் தருவது வாக்குரிமை.

இந்த வாக்குரிமையை உறுதிப்படுத்திக்ெகாள்வதற்கு ஒவ்வோர் ஆண்டும் நாட்டு மக்களுக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது. முன்பெல்லாம் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்குரிமையைப் பதிவுசெய்துகொண்டிருப்பார். கடிதமூலம் தொடர்புகொள்ளும்வரை குறித்த ஒருவரின் பெயர் ஒன்றுக்கு மேற்பட்ட முகவரிகளில் பதியப்பட்டிருக்கும். ஆனால், தற்போது நடைமுறையில் இருக்கும் வாக்காளர் பெயர்ப்பட்டியல் திருத்தச் செயற்பாட்டின் மூலம், அந்தக் குழப்பம் தவிர்க்கப்படுகிறது.

"என்னுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதுதானே" என்று நினைத்துப் புதிதாகப் பதிவதற்கு அல்லது புதுப்பித்துக்ெகாள்வதற்குக் கரிசனைகொள்ளாமல் ஒருவர் இருப்பாரேயானால், அவருடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுவிடும். முன்னரைப்போல் கடிதம் அனுப்பிக்ெகாண்டிருக்காது தேர்தல்கள் செயலகம்.

வாக்காளர் பட்டியலைப் புதுப்பிப்பதற்கு ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் முதலாந்திகதி முதல் 30ஆம் திகதி கிராம சேவை அலுவலர் ஊடாக நடவடிக்ைக எடுக்கப்படுகிறது. அவர்கள் வீடு வீடாகச் சென்று படிவங்களைக் கையளித்துப் பிரதான குடியிருப்பாளர் மூலம் நிரப்பப்பட்ட படிவங்களை மீளப்பெற்றுச் செல்வார்கள். இந்தப் பணியைப் பெரும்பாலும் மே மாதம் 15ஆம் திகதியே ஆரம்பித்துவிடுவோம் என்கிறார் தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக தேர்தல்கள் (சட்டம், விசாரணை) ஆணையாளர் எம்.எம்.மொகமட்.

"வாக்காளர் பட்டியலைப் புதுப்பிக்கும்போது, ஏற்கனவே பெயரைப் பதிவு செய்து கொண்டுள்ளவர்கள்; புதிதாகப் பெயரைப் பதிவுசெய்ய விரும்பும் பதினெட்டு வயது பூர்த்தியடைந்துள்ள இலங்கைப் பிரஜைகள் அனைவரும், ஜூன் மாதம் முதலாந்திகதியன்று ஏதேனும் ஒரு முகவரியில் சாதாரண வதிவாளராக இருக்கும்பட்சத்தில், அவர்கள் தம்மை வாக்காளர் பட்டியலில் பதிந்துகொள்ள முடியும்" என்கிறார் மேலதிக ஆணையாளர்.

"வாக்காளர் பட்டியலில் பெயரைப் பதிவு செய்து கொள்வதற்கு என்னென்ன தகுதிகள் வேண்டும்?"

"மூன்று விடயங்களைக் கவனிக்க வேண்டும், ஒன்று இலங்கைப் பிரஜையாக இருக்க வேண்டும், இரண்டாவது பதினெட்டு வயதைப் பூர்த்திசெய்திருக்க வேண்டும், மூன்றாவது குறித்த முகவரியில் சாதாரண வதிவாளராக இருத்தல் வேண்டும்"

"அதென்ன சாதாரண வதிவாளர்?"
"சொந்த வீட்டில் குடியிருப்பவர் நிரந்தர வதிவாளர்; தற்காலிகமாகக் குடியிருப்பவர் சாதாரண வதிவாளர். அதாவது, ஒருவர் ஜூன் முதலாந்திகதியன்று எந்த முகவரியில் குடியிருக்கிறாரோ அவர், அந்த முகவரியில் தம்மைப் பதிவு செய்து கொள்ள முடியும். தவிரவும், அந்த வீட்டில் உள்ள பதினெட்டு வயதைப் பூர்த்தி செய்தவர்கள், திருமணம் முடித்து வந்தவர்கள், அல்லது உறவினர்களுடன் தங்கியிருப்பவர்கள் எல்லோரும் தம்மை வாக்காளராகப் பதிவுசெய்துகொள்ளலாம். ஓர் முக்கிய விடயம் என்னவென்றால், குறித்த ஒரு முகவரியில் வதியும் ஒருவர் கணக்ெகடுப்பின்போது நேரடியாகப் பிரசன்னமாகியிருக்க வேண்டிய அவசியம் கிடையாது. பிரதான குடியிருப்பாளர் அவரின் பெயரைப் பதிவுசெய்து கொடுக்க முடியும். தொழில் நிமித்தமாகவோ, கல்வி விடயமாகவோ ஒருவர் அந்தச் சமயத்தில் வீட்டில் இல்லாதிருக்கலாம். அவரையும் பதிவு செய்ய வேண்டும்!"

"வெளிநாட்டில் தொழில்புரிபவர் இங்கு தமது பெயரைப் பதிவுசெய்துகொள்ள முடியுமா?

"நிச்சயமாக. தொழிலுக்காகவோ அல்லது கல்விக்காகவோ வெளிநாட்டிற்குச் சென்றிருந்தாலும் அல்லது குடும்பத்துடன் சென்றிருந்தாலும் வாக்காளர் பட்டியலில் பெயர்களைப் பதியலாம். குடும்பத்தவர்களுடன் வெளிநாடு சென்றிருந்தால், உறவினர்கள் மூலம் விடுக்கப்படும் உரிமைக்ேகாரிக்ைக மூலம் பதிவுசெய்துகொள்ள முடியும்."

"சாதாரண வதிவாளர்களிடம் கிராம சேவை அலுவலர்கள் ஆவணங்களைக் கோருவதாகத் தொடர்ச்சியாக ஒரு முறைப்பாடு இருக்கிறதே!?"

"உண்மைதான், வாக்காளர் பட்டியலில் பெயர்களைப் பதிவுசெய்வதற்கு எந்த ஆவணமும் அவசியமில்லை. அதனை வழங்குமாறு வற்புறுத்தவும் முடியாது. சிலவேளை, குடியிருப்பாளரின் முகவரி மாறியிருக்குமாயின், முன்னைய பதிவு மேற்கொள்ளப்பட்டிருந்த முகவரி, கிராம சேவை அலுவலர் பிரிவு ஆகியவற்றைச் சரியாகத் தெரிந்துகொள்வதற்காக, முன்னைய கிராம சேவை அலுவலரின் கடிதத்தைக் கோருவார்கள். சரியான தகவலை வழங்க முடியுமாயின் கடிதம் அவசியமிராது. அப்படி வற்புறுத்திக்கோரப்பட்டால், மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளரைச் சந்தித்து முறைப்பாடு செய்ய முடியும்"
"இந்தச் சாதாரண வதிவாளர்களை வாக்காளர்களாகப் பதிவுசெய்ய வீட்டுரிமையாளர்கள் அனுமதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. அதற்கு என்ன செய்யலாம்?"

"அவ்வாறு மறுக்க முடியாது. சிலவேளை, வீட்டுரிமையாளர் மறுக்கும் பட்சத்தில், கிராம சேவை அலுவலர் வழங்குகின்ற படிவங்கள் சாதாரண வதிவாளருக்குக் கிடைக்காமல் போகலாம். அவ்வாறு நடக்குமென்றால், ஓகஸ்ட் மாதம் உரிமைக் ேகாரிக்ைகயைச் சமர்ப்பிக்கலாம்."

"வர்த்தக நிலையங்களில் பணிபுரிகிறவர்கள் வாக்காளர் பட்டியலில் தமது பெயர்களைப் பதிவுசெய்துகொள்ள முடியுமா?"

"வியாபார நிலையத்தை வதிவு முகவரியாகக் கொண்டிருந்தால், பதிவுசெய்ய முடியும். வர்த்தக நிலையத்தில் ஒரு பகுதியில் வியாபாரம் நடக்கும் அதேநேரம், குடியிருப்பையும் கொண்டிருந்தால், நிச்சயமாகப் பதிய முடியும். வெளியூர்களில் இருந்து வந்து பணிபுரிபவர்களுக்குக் கடைகளில் ஒரு பகுதியில் தங்குவதற்கும் இடம் கொடுத்திருப்பார்கள், அப்போதும் பதியலாம். ஆனால், காலையில் திறந்து மாலையில் மூடப்படும் வர்த்தக நிலையத்தின் முகவரியில் வாக்காளராகப் பதிய முடியாது. அதேவேளை, ஓர் அலுவலகத்திலோ அல்லது வர்த்தக நிறுவனத்திலோ பணிபுரியும் ஒருவர், வேறோர் இடத்தில் வாடகை அறையில் தங்கியிருப்பாராயின், அவர் தமது ஊரில் உள்ள சொந்த முகவரியில் தமது பெயரைப் பதிவு செய்துகொள்ள வேண்டும்."

"இரட்டைப் பிரஜாவுரிமை பெற்றவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயரைப் பதிவு செய்யலாமா?"

"ஜூன் மாதம் முதலாம் திகதி அவர் இரட்டைப் பிரஜாவுரிமையைப் பெற்றுக்ெகாண்டிருந்தால், பதிய முடியும். அதற்குப் பின்னர் அவருக்குப் பிரஜாவுரிமை கிடைக்கும் என்றால், அந்த வருடத்தில் பதிய முடியாது. அவ்வாறு பதிவுசெய்து கொண்டவர்கள் வாக்கு அளிக்கலாமேயொழிய தேர்தலில் போட்டியிட்டு வாக்கு கேட்க முடியாது"

"சரி, மீளாய்வு செய்யப்பட்ட பட்டியல்களைச் சரிபார்த்துச் சீர்செய்து கொள்வது எவ்வாறு?"

"2017ஆம் ஆண்டுக்கான தற்போதைய பட்டியலில் பெயர் உள்ளவர்கள் பற்றிய மீளாய்வு செய்யப்படுவதுடன், அதில், பெயர் உள்ளடக்க முடியாதவர்கள் இருப்பின் (இறந்திருப்பின்) அது வேறாகப் பட்டியலிடப்படும். கணக்ெகடுப்பு நடத்தப்பட்டதும் பெயர்பட்டியல்கள் 'அ' பட்டியல், 'ஆ' பட்டியல் என இரு பிரிவுகளாகக் காட்சிப்படுத்தப்படும். 'அ' பட்டியிலில் நீக்கப்பட்டவர்களின் பெயர்களும் 'ஆ' பட்டியலில் புதிதாகச் சேர்க்கப்பட்டவர்களின் பெயர்களும் குறிக்கப்படும். இந்தப் பட்டியல்கள் கிராமசேவை அலுவலர் அலுவலகம், தபாலகம், தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகம், பிரதேசச் செயலகம், மாவட்ட தேர்தல் அலுவலகம் ஆகியவற்றில் ஓகஸ்ட் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை காட்சிப்படுத்தப்படும்.
அதனைச் சரிபார்த்து, பெயர் நீக்கப்பட்ட பட்டியலில் இருந்தாலும் அல்லது உள்வாங்க முடியாத ஒருவரின் பெயர் 'ஆ' பட்டியலில் காணப்பட்டாலும் ஆட்சேபனை தெரிவிக்க முடியும்."

"வாக்காளராக இருப்பதன் மூலம் ஒருவருக்கு ஏதாவது சிறப்பு அந்தஸ்து இருப்பதாகக் கருத முடியுமா?"

"ஏனில்லை? வாக்காளராக இருப்பதன் மூலம் எத்தனையோ விடயங்களை நிறைவேற்றிக்கொள்ள முடியுமே. பிள்ளைகளைப் பாடசாலையில் சேர்ப்பதற்கு, மூன்றாம் ஆண்டு உயர்தரம் கற்றவர், பல்கலைக்கழகத்தில் அனுமதியைப் பெறுவதற்கு, அவரை எந்த மாவட்டத்தில் உள்வாங்குவது என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துக்ெகாள்வதற்கு, கல்வியியல் கல்லூரிகளில், தாதியர் பயிற்சிக் கல்லூரிகளில் இணைந்துகொள்வதற்கு எனப் பல்வேறு விடயங்களில் தமது வதிவிடத்தை உறுதிசெய்துகொள்வதற்கு இந்த வாக்காளர் பட்டியல் உதவுகிறது. இந்த முக்கியத்தை உணர்த்துவதற்காக ஜூன் முதலாந்திகதியை வாக்காளர் தினமாக அனுஷ்டிக்கின்றோம். '

உண்மையான ஜனநாயகம் வாக்குரிமையில் தங்கியிருக்கின்றது' என்ற தொனிப்பொருளில் முதலாவது நிகழ்ச்சி கேகாலையில் தொடங்கப்பட்டது. ஒவ்வொரு மாகாணத்திலும் ஒரு மாவட்டத்தைத் தெரிவு செய்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகிறோம்" வாக்குரிமையைப் பாதுகாத்துக்ெகாள்வதால் உங்களுக்ேக கௌரவம் என்கிறார் மேலதிக ஆணையாளர் கௌரவமாக!

விசு கருணாநிதி

No comments

Powered by Blogger.