Header Ads



ராஜினாமா செய்கிறார் மஸ்தான்

வடக்கு அபிவிருத்தி, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் இந்துமத விவகாரப் பிரதியமைச்சராக, கடந்த செவ்வாயன்று (12) சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட காதர் மஸ்தான், தான் வகிக்கும் இந்துமத விவகாரப் பிரதியமைச்சர் பதவியிலிருந்து இராஜினாமா செய்யத் தீர்மானித்துள்ளார்.

இது தொடர்பில், இன்று (14) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துக் கலந்துரையாடிய பின்னர், அவர் இந்தப் பதவியிலிருந்து இராஜினாமா செய்வாரெனத், தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிய இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்களை நியமிக்கும் போது, இந்துமத விவகாரப் பிரதியமைச்சராக, காதர் மஸ்தான் எம்.பி நியமிக்கப்பட்டார். இதனால், தமிழ் அரசியலில் ஏற்பட்ட கடும் எதிர்ப்புகள் மற்றும் கருத்துகளைத் தொடர்ந்து, அவர் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளாரெனத் தெரிவிக்கப்படுகின்றது.

தனக்கு வழங்கப்பட்டுள்ள இந்துமத விவகாரப் பிரதியமைச்சுப் பதவியை இராஜினாமான செய்துவிட்டு, வடக்கு அபிவிருத்தி, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் ஆகியவற்றுக்கான பிரதியமைச்சுக்கு, மீண்டும் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாகத் தகவல்கள் ​தெரிவிக்கின்றன.

7 comments:

  1. Correct decision appreciated

    ReplyDelete
  2. இத முதல்ல செய்ய இருந்திச்சே

    ReplyDelete
  3. Mastan you don't deserve to be a Minister of a religion and Racist community.
    Your decision is appreciated

    ReplyDelete
  4. சுய புத்தி இல்லாதவர், மற்றவங்க சொன்னதற்கப்புறம் முடிவெடுப்பது ஏற்பட்ட கலங்கத்தை மீட்டிடுமா?

    ReplyDelete
  5. Scientific approach by Yahapalanaya has failed agian.

    ReplyDelete

Powered by Blogger.