Header Ads



ஒலுவில் பல்கலைக்கழக மாணவிகள், பாலியல் லஞ்சம் கொடுக்காமல் சித்தியடைய முடியாது - விஜேதாச

ஒலுவில் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் பெண் பிள்ளைகள் பாலியல் லஞ்சம் கொடுக்காதுபோனால் சில பாடங்களுக்கான பரீட்சையில் சித்தியடைய முடியாத ஒரு நிலைமை காணப்படுவதாக உயர் கல்வி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றுகின்றபோது அமைச்சர் இதனைக் கூறினார்.

ஒலுவில் பல்கலைக்கழகத்திலுள்ள குறிப்பிட்ட ஒரு விரிவுரையாளருக்கு, பாலியல் லஞ்சம் கொடுக்காவிடின் அவரது பாடத்தில் யாரும் சித்தியடைய முடியாது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதுதான் இன்று அந்தப் பல்கலைக்கழகத்தின் நிலைமை எனவும் அமைச்சர் மேலும் கூறினார்.

உயர் கல்வி அமைச்சர் ஒருவர் பொறுப்பு மிக்க ஒரு சபையில் குறிப்பிட்ட ஒரு சிலர் மேற்கொண்ட முறைப்பாட்டை அடிப்படையாக வைத்து முழுப் பல்கலைக்கழகத்திலுள்ள மாணவிகளையும் பாதிக்கும் வித்தில் கருத்துத் தெரிவித்துள்ளமைக்கு புத்திஜீவிகள் பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.

அப்பல்கலைக்கழகத்தில் படித்த மாணவிகளின் பெற்றோரும் அமைச்சரின் கருத்துக் குறித்து கவலை வெளியிட்டுள்ளனர். Dc

8 comments:

  1. ஒழுக்கம் கெட்டமுறையில் நடந்து கொள்ளாமல் குற்றச்சாட்டுகள் இருந்தால் அரசயாப்புக்கு அமைய சட்டநடவடிக்ைக எடுக்கலாமே. சாதாரண பாமரர் போல் அங்கும் இங்கும் கத்துவது தனது பதவிக்கு அழகாக இருக்கின்றதா என்பதைக்கூட விளங்காத உயர்கல்விக்கு அனைச்சா்.

    ReplyDelete
  2. Hero of this case Alif senior lecture from Akkaraipattu case is going on and the two girl given the Audio record with CD to UGC and court

    ReplyDelete
  3. people are misunderstand about his speech and university was deadly corrupted by former VC Ismail in several way, Vijayadasa said truth, case is going on still. Alif Senior lecture temporally terminated by UGC.

    ReplyDelete
  4. இவனும் ஒரு மான நோயாளி இவன் எப்போதும் குருட்டு தனமாத்தான் பேசுவான்

    ReplyDelete
  5. Minister did good speech. We should support to him to eradicate this behavior from education environment

    ReplyDelete
  6. ஆம் அதுதான் உண்மை. இவனுக்கு பதவி கொடுத்தவர்களையும் சேர்த்து மனநோய் மருத்துவத்துக்கு அவசரமாக உற்படுத்த வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.