Header Ads



இளநீர் சுவையை, தரும் கிணறு - வனாத்தவில்லுவில் அதிசயம்

இலங்கையில் வரலாற்று சிறப்புமிக்க பிரதேசத்தில் அதிசய கிணறு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வரலாற்று தொல்பொருளியல் பெறுமதியை கொண்ட புத்தளம் வனாத்தவில்லு பகுதியில் கிணறு அடையாளம் காணப்பட்டுள்ளது.

தப்போவ விவசாய நிலத்தை சுத்தப்படுத்தி கொண்டிருக்கும் போது திடீரென பல நூறு வருடங்கள் பழைமையான கிணறு ஒன்று தோன்றியுள்ளது.

மயிலன்குளம் பிரதேசத்தை சேர்ந்த கருணாவத்தி என்பவர் பயிரிடும் நடவடிக்கைக்காக நிலத்தை சுத்தப்படுத்தினார். இதன்போது, 8 - 10 அங்குல அளவு களிமண்ணினால் நிறைவு செய்யப்பட்ட சட்டி போன்ற துண்டு ஒன்று கிடைத்துள்ளது.

அந்த இடத்தை ஆராய்ந்து பார்க்க மண்வெட்டியால் வெட்டி பார்க்கும் போது அந்த இடத்தில் சிறிய அளவிலான கிணறு ஒன்று தோன்றியுள்ளது.

பின்னர் பிரதேச மக்கள் இணைந்து அந்த கிணற்றை சுத்தப்படுத்தியுள்ள நிலையில் அங்கிருந்து தொல்பொருளியல் பொருட்களும் கிடைத்துள்ளது. இந்த கிணறு சுமார் 8 அடியை ஆழத்தை கொண்டுள்ள போதிலும், அது 40 அடி ஆழத்தை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கிணறு வறட்சியின் போது நீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக தோண்டப்பட்டிருக்கலாம் எனவும், நிலத்தடி நீர் வருவதனால் குடிநீர் பெற இது சிறந்த கிணறாக இருக்கும் என கருதப்படுகின்றது. இந்த கிணற்றில் உள்ள நீர் இளநீர் போன்று சுவையாக உள்ளதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் மயில்குளம் பிரதேசத்தில் குவெனி கிராமம் எனப்படும் தம்பன்த்திய என்ற இடம் 30 கிலோ மீற்றர் தூரத்திலேயே அமைந்துள்ளது.

வரலாற்று தொல்பொருளியல் பெறுமதியை கொண்ட இந்த அரிய வகை கிணறு தொடர்பில் தொல்பொருளியல் அதிகாரிகள் கவனம் செலுத்தியுள்ளனர்.. இந்த கிணற்றிற்கு 500 ஆண்டுகளுக்கும் அதிக பழைமையான வரலாறு உள்ளதாக தொல்பொருளியல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.