June 04, 2018

ஆதம் மலையும், இலங்கை முஸ்லிம்களின் இருப்பும்...!

உலகின் எப்பாகத்திலும் வசிக்கும் மக்களுக்குக் கிடைக்காத ஒருபாக்கியம் இலங்கையில் வாழும் மக்களுக்குக் கிடைத்திருக்கின்றது, அதுதான் இறைவனால் படைக்கப்பட்ட முதல் மனிதனான ஆதம்( ADAM) இலங்கைக்கு இறக்கப்பட்டமையாகும், குறிப்பாக இலங்கை முஸ்லிம்கள் தமது இருப்பு தொடர்பான பூர்வீக அடிப்படைக்கான மூலக்காரணியான  ஆதம் மலை, (Adams peak)  யையும், அதன் வரலாற்றையும்,  பாதுகாப்பது  பற்றிய பதிவே இதுவாகும்.

அறிமுகம்...

ஆதம்மலை , சிவனொளிபாதமலை, சிறீ பாத  என்ற பெயர்களைக்கொண்ட இம்மலை  இரத்தினபுரி யில் இருந்து 40 KM ல் உள்ளது, 2243 அடி உயரத்தைக் கொண்ட இதன் சிகரத்தில் 5அடி நீளமும்,2அரை அடி அகலமும் கொண்ட கால் தடம் காணப்படுகின்றது, இது பல்லாயிரம் ஆண்டுகள் பழைமையானது என மதிப்பிடப் படுகின்ளது, December - April வரையான காலப்பகுதியில்,  தரிசிக்கக்கூடிய இடமாகவும், பின்னர், இதன். சிகரம் மேகங்களிடையே  மறைந்து விடும் இடமாகவும் உள்ளது

சமய நோக்கு..

இந்துக்கள் ,இது சிவனின் பாதம் எனவும், பௌத்தர்கள் புத்தர் இலங்கைக்கு தனது 3வது வருகையின் போது உருவானது எனவும், கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும். ஆதமுடையது எனவும் நம்புகின்றனர், தமது நம்பிக்கையின் பிரகாரம் புனிதபயணங்களிலும், கிரிகைகளிலும் ஈடுபடுகின்றனர். இவ்வாறான தடயங்கள், இந்தியாவின் லோபாக்சி,மலேசியா,தாய்லாந்து,சிரியா,போன்ற நாடுகளிலும் காணப்படுகின்றது.

முஸ்லிம் இருப்பும் ,ஆதமலையும், ...

இலங்கை முஸ்லிம்கள் இந் நாட்டில் வாழ்ந்ததற்கான தமது புராதனத்தை நிறுவுவதற்கான மிகப் பிரதானமான  வரலாற்றுச் சின்னம், இதுவாகும், இலங்கை முஸ்லிம்கள் சர்வ தேச பிரபலமும், அடையாளமும் பெறுவதற்கு  வரலாற்றின் மிக நீண்ட  காலத்தில் இருந்தே இம் மலையும், பாதச் சிகரமும் மிகவும் செல்வாக்குச் செலுத்தியுள்ளன. என்பது மிகப் பலமான ஆதாரமாகும்.

வரலாற்றுப் பதிவுகள்......

இலங்கையை நாடி நாடுகாண் பயணிகளும், ,மன்னர்களும், இறை நேசர்களும்  வந்து சென்றதற்கான அடிப்படையாக அமைந்த்து ,இம்மலைப் பிரதேசமாகும், முஹிதீன் அப்துல் காதிர் ஜீலானி(றஹ்), சாஹூல் ஹமீது வலி யுள்ளாஹ் போன்றோர் இலங்கை வந்த்தற்கான காரணங்களில் பிரதானமானது, இம் மலையும், ஆதமின் பாதமுமாகும்.

,SEYLLAN - (சுவர்க்கம்)  என அறபுக்களால் அழைக்கப் பட்ட இலங்கைக்கு  முஸ்லிம் நாடுகாண் பயணியான இப்னு பதூதா (Ibn Batuta- 1304-1368) தனது இலங்கைக்கான   விஜயத்தினை  கி. பி. 134 4ல் மேற்  கொண்ட  போது இது பற்றிய பல குறிப்புக்களைக் கூறியுள்ளார், அது போல், Marco Polo(1254- 1324)  அவரது வருகை,  குறிப்புக்களும்,மற்றும் , Alexander ( 365- 323 BC) மன்னன் போன்றோரும் இங்கு  வந்ததாக கருதப்படுகின்றது, 

இப்னு பதூதாவின் குறிப்புக்கள்..

இப்னு பதூதா இப்பிரதேசம் பற்றி பல முக்கியமான பதிவுகளை இட்டுச் சென்றுள்ளார், அதில் அவர் இவ்விடம் முஸ்லிம்களாலும், ஏனையோராலும்,  புனிதமாக்க் கருதப்படுகின்ற அதே வேளை, உலக அறபுக்கள் இப்பிரதேசத்தில்  சமய பயணத்திற்காகவும், இரத்தினக்கல் வியாபாரத்திற்காகவும்,  அடிக்கடி விஜயம் செய்து வருவதாக, குறிப்பிட்டுள்ளார். அதே வேளை, இங்கு" பக்கீர்" எனும் சமயத் தியானிகள் தங்கி  ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்,  

இது பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டு வரும், Prof,MSM ANES. அவர்களின் ஆய்வுகளும் இதனை  உறுதிப் படுத்துகின்றன, இன்னும் சில பதிவுகளின் படி, இம்மலை அடிவாரத்திலும், உச்சியிலும்,  பிரபலமான இறை நேசர்களின், சியாறங்கள் இருந்த்தாகவும்,  ஆதார பூர்வமான   பதிவுகளில் குறிப்பிடப் படுகின்றது,  இந்த வகையில் நோக்கினால்  இலங்கையில் முஸ்லிம் பூர்விகத்தின் அடிப்படை ஆதம் மலை என்பதற்கான  அடிப்படைகள். உறுதியாக உள்ளன எனலாம்.

எங்கே தவறு   இடம்பெறுகிறது????

இலங்கை முஸ்லிம் வரலாற்று பூர்வீகத்திற்கான ஆதார மையங்கள் அனைத்தும் இருந்தும், அது பற்றிய தெளிவின்மையும், , சமய இயக்கக்   கருத்து வேறுபாடுகளுமே. அவற்றின் பெறுமானத்தை இல்லாமல் செய்துள்ளன என்ற முடிவுக்கு வரவேண்டி உள்ளது. இதற்கு நல்ல உதாரணம் ஆதம் மலையில் இருந்த " சியாறங்கள்" முஸ்லிம்களின் பராமரிப்பின்மையினால்,  இன்று,அழிந்து இல்லாமல்  போய் விட்டன.   அதே போல் முஸ்லிம்  இளம் தலை முறையினரிடையே இவை பற்றிய விளிப்புணர்வும், தெளிவும் போதியளவின்மையினால், குறித்த மலைக்கு செல்லும் முஸ்லிம்களின் எண்ணிக்கை மிகவும்  குறைவடைந்து, ஏனையோர் குறிப்பாக பௌத்தர்கள்  தமக்கான "ஏக உரிமை" பாராட்டுவதற்கான  வாய்ப்பு எம்மவர்களாலேயே ஏற்படுத்தப் பட்டதே மிகப் பெரிய தவறாகும், 

என்ன செய்யலாம்?...

உலக முஸ்லிம்களின் வரலாற்றுத் தலமான இப்பிரதேசத்தைப் பாதுகாக்கவும், பராமரிக்கவும்,  பின்வரும் வழி முறைகளை மேற்கொள்ள முடியும்., 

1). இவ் இடத்தின்  பெறுமானம் பற்றிய விழிப்புணர்வுகளை,சமூக நல அமைப்புக்கள் மூலம்  ஏற்பாடு செய்யலாம்.

2). புதிய நோக்கிலான  ஆய்வுகளை மேற்கொள்ளல்.அதற்கு உதவலாம், அவற்றினை சர்வ தேச ரீதியாக இணைத்தல்..

3). அறபு மதரஷாக்களில் இதன் வரலாற்றை பாடத் திட்டத்தில் இணைக்கலாம், 

4). அறபுக் கல்லூரி, மற்றும் ஏனைய மாணவர்களுக்கான  FIELD TRIP களை ஏற்பாடு செய்யலாம், 

5).  இதனோடு தொடர்பான சமய நல்லிணக்கத்திற்கான  யாத்திரைகளிலும், பேச்சுக்ளிலும், முஸ்லிம்களும் இணைந்து  செயற்படலாம்.

6).  சுற்றுலாப் பயணங்களை மேற் கொள்ளலாம்.

மேற்படி பூர்வீகங்களை மறந்து, அவற்றைப் பராமரிக்காமல்  விட்டதன் விளைவுகளே,  முஸ்லிம்களுக்கும், தமது வரலாறு தெரியாமலும்,  ஏனையோரும். அவை பற்றி அறிவதற்கான " தடயங்கள்" இல்லாததுமான சூழ் நிலை இன்று உருவாகி உள்ளது, ,  அதன் விளைவுகளே " பல சேனைகளும் , சி(வ)ல சேனைகளும்" முஸ்லிம்களை இந் நாட்டை  விட்டு வெளியேறச் சொல்லும் உடனடிக்  கோஷங்களின் பின்னால் உள்ளன. 

எனவேதான், சவூதிய, மற்றும் ஏனைய  மரபுகளை அழிக்கும், புறக்கணிக்கும், இயக்க வாத சிந்தனைகளை  ஒரு புறம் வைத்துவிட்டு, மரபுகளையும், இருப்புக்களையும், பாதுகாக்க அனைவரும்  முன்வர வேண்டும். இன்றேல் இலங்கையில் முஸ்லிம் இருப்பு என்பது எதிர் காலத்தில் இதனை விட மோசமான நிலையை அடையலாம்.

MUFIZAL ABOOBUCKER
SENIOR LECTURER 
DEPT, OF PHILOSOPHY
UNIVERSITY OF PERADENIYA

12 கருத்துரைகள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்)  கூறினார்கள்:
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் (ஆதிமனிதர்) ஆதமை அவரது (அழகான) உருவத்தில் படைத்தான்.  அவரது உயரம் அறுபது முழங்களாகும்.

(மறுமை நாளில்) சொர்க்கத்தில் நுழைபவர்கள் ஒவ்வொருவரும் அறுபது முழம் உயரம் கொண்ட ஆதம் (அலை) அவர்களின் உருவத்தில்தான் நுழைவார்கள். அவருக்குப் பிறகு இன்று வரை அவருடைய சந்ததிகள் (உயரத்தில்) குறைந்துகொண்டே வருகின்றனர்.

அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி)
(ஸஹீஹ் முஸ்லிம் # 5463)
www.tamililquran.com/hadhees

5 அடி 4 அங்குலம் கொண்ட நீளமான ஓர் பாதச் சுவடு 'பாவாதமலை' உச்சியில் உள்ளது.  இது ஆதம் நபியினுடைய பாத அடையாளம் என்பதை நிரூபிக்க மேற்கண்ட ஹதீஸ் ஆதாரமாகும்.

60 முழங்கள் என்பது 90 அடிகளாகும்.
90 அடி உயரமான ஒருவருக்கு 5'4" நீளம் கொண்ட பாதம் சாதாரண மானதே.

இப்ராஹிம் நபியுடைய பாதங்களை நாம் மக்காமு இப்ராஹிம் என்ற பெயரில் மக்காவில் உள்ள ஹரம் சரீபில் 2x3 அடிகள் கொண்ட பாறாங்கல்லில் பதியப்பட்டதாக ஓர் கண்ணாடிப்ப் பேழையில் வைக்கப்பட்டுள்ளதை நாம் பார்க்கிறோம்.

சுமார் 5000 வருடங்களுக்கு முன் வாழ்ந்த இப்ராஹிம் நபியுடைய  பாதச்சுவடுகள் இரண்டும் 2x3  அடிகளுக்கு உட்பட்டதாயிருக்க, அவருக்கு  சுமார் 2,500 வருடங்களுக்குப் பின்னால் வாழ்ந்த புத்தரின் பாதச்சுவடு (நபிகளாரின் முன்னறிவிப்பின்படி) அதைவிட சிரியதாவே இருக்க வேண்டும்.  மாறாக 5' 4" கொண்டதாக இருக்க முடியாது.

எனவே, பாவா ஆதம் மலையில் இருக்கும் பாதச்சுவடு புத்தருடயது அல்ல.  அது ஆதம் நபியுடையதே என்று உறுதியாகக் கூற முடியும்.

இந்நாட்டில் முஸ்லிம்களாகிய நாம்,  முதல் முஸ்லிமும் இறைத்தூதருமான ஆதம் நபியின் காலம் முதலே வாழ்ந்து வருகிறோம் என்பதற்கான ஆதாரமே இது.

"...நாம் சத்தியத்தை கொண்டு, அசத்தியத்தின் மீது வீசுகிறோம்; அதனால், (சத்தியம் அசத்தியத்தின் சிரசைச்) சிதறடித்துவிடுகிறது; பின்னர் (அசத்தியம்) அழிந்தே போய்விடுகிறது. ஆகவே, நீங்கள் (கற்பனையாக இட்டுக்கட்டி) வர்ணிப்பதெல்லாம் உங்களுக்கு கேடுதான்."
(அல்குர்ஆன் : 21:18)

எனக்கு ஒரு சந்தேகம் நபிமாா்களை பற்றிகுாறுவதன்றால் Sir Sir Sirஅல்குா்ஆன் அல்லது முகம்மது நபி(ஸல்)அவா்கள் குாறவேண்டும்.அனால் எதிலும் ஆதாரம் இல்லை என்று மாா்க்க அறிஞ்சா்கள் குாறுகின்றாா்கள்.

நபியவர்கள், புனித பயணங்களாக மஸ்ஜிதுல் ஹரம், மஸ்ஜிந் நபி, மஸ்ஜிதுல் அக்ஸா ஆகியவற்றுக்கு மாத்திரமே செல்லலாம் எனக் கூறியுள்ளார்கள். ஆகவே இவற்றைத் தவிர புனித பயணங்கள் கிடையாது. அல்லாஹ்  அல் குர்ஆனில் நூஹ் நபியோடு சம்பந்தப்படுத்தி ஜூதி மலையையும், மூஸா நபியோடு சம்பந்தப்படுத்தி தூர்ஸீனா மலையையும், அன்னை ஹாஜர் அவர்களுடன் சம்பந்தப்படுத்திதேவையில்லாத சம்பந்தப்படுத்தி அரபா மலையையும்  மாத்திரமே கூறியுள்ளான். இவற்றைத் தவிர நபிகள்  காலத்து யுத்தம் நடைபெற்ற உஹத் போன்ற மலைகளும் ஹதீஸ்களில் இடம்பெற்றுள்ளன. இவையன்றி ஆதம் மலை என்றெல்லாம் இஸ்லாத்தோடு சம்பந்தப்படுத்தி எங்கும் ஆதாரங்கள் கிடையாது.ஆகவே  மீண்டும் தேவையில்லாத சிந்தனை மூலம் தேவையில்லாத பிரச்சினைகளை உருவாக்காமலிருந்தால் போதும்.

நபியவர்கள், புனித பயணங்களாக மஸ்ஜிதுல் ஹரம், மஸ்ஜிந் நபி, மஸ்ஜிதுல் அக்ஸா ஆகியவற்றுக்கு மாத்திரமே செல்லலாம் எனக் கூறியுள்ளார்கள். ஆகவே இவற்றைத் தவிர புனித பயணங்கள் கிடையாது. அல்லாஹ்  அல் குர்ஆனில் நூஹ் நபியோடு சம்பந்தப்படுத்தி ஜூதி மலையையும், மூஸா நபியோடு சம்பந்தப்படுத்தி தூர்ஸீனா மலையையும், அன்னை ஹாஜர் அவர்களுடன் சம்பந்தப்படுத்தி சபா மர்வா மலைகளையும் ஹஜ்ஜுடன் சம்பந்தப்படுத்தி அரபா மலையையும்  மாத்திரமே கூறியுள்ளான். இவற்றைத் தவிர நபிகள்  காலத்து யுத்தம் நடைபெற்ற உஹத் போன்ற மலைகளும் ஹதீஸ்களில் இடம்பெற்றுள்ளன. இவையன்றி ஆதம் மலை என்றெல்லாம் இஸ்லாத்தோடு சம்பந்தப்படுத்தி எங்கும் ஆதாரங்கள் கிடையாது.ஆகவே  மீண்டும் தேவையில்லாத சிந்தனை மூலம் தேவையில்லாத பிரச்சினைகளை உருவாக்காமலிருந்தால் போதும்.

MUFIZAL ABOOBUCKER,
ஹஜ்-உம்ரா நிறைவேற்ற செல்லும் பயனத்தை இஸ்லாம், சமய/ புனித பயணமாகக் கருதுகிறது. ஆனால் இவர், ஆதம் மலைக்கு செல்வதையும் சமய/புனித பயணமாக வழிந்து கூர வருகிறார்.

அத்தோடு ஸியாரம்கள் ஏற்படுத்தப் படவேண்டிய அவசியத்தையும் வழிந்து கூர வருகிறார். விளைவாக அங்கு நடப்பது கபுறு வணக்கம்தான்.

முஸ்லிம்களின் இருப்பைப் பாதுகாப்பதற்கு, அவர்கள் இஸ்லாத்தை படிப்பதும், சரியான முஸ்லிம்களாக வாழ்வதும் போதுமானது.

Yes Thaliban,IS,Thowheed jamath doing it in the name of against shirk to eradicate the hole mark of Muslims.According to Iranian sources there are more than 400 historical site were destroyed by Saudi government.that's what want BBS too wants to do in Srilanka to deny the rite of Muslims.

But Professor if this site is Adams peak or prophet Adams footprint,the Jews and Christian too have a say but they are not so serious as Muslims and Hindus claim it is the footprint of SHIVAN but they too not serious.Then why only Muslims this dangerous time want to make problem for themselves by claiming it as it ours.

recently I saw here that one book was published by Muslim writer claiming it as the foot print of Prophet Adam's and intend to publish in Sinhala and English too.So what i can say is that no sooner the Sinhala or English version is published we have to jump into the see as this racist Buddhist and BBS want is such an work to instigate majority Sinhalese to all out war against Muslims.Now already there is some talks in Sinhala communities that Muslims are claiming the rite of Sripada and visiting of Muslims and Faizal Mustafa was making hotel or a center to facilitate Muslim visitors when he was tourism minister.So there were some agitation against this then and this book could be more clues to go against Muslims.

As far as i am concern this man and his book about Sripada is the conspiracy by anti Muslim NGOs who want and planning Muslim bloodbath.There is no any Quranic evidence and even no any Hadees regarding the Sripada or Adams peak.So Muslims should not jump skipping Jews and Christian,creating problem.

this planet is billions of years old and human evolved millions of yeas ago.So it is not the time to make controversies and clashes.There was one incident in Kaba'h when one Awliya(superman)performing the thawaf he saw one mysterious very told man too performing the thawaf.So this Awliya asked who are you as he is very different from other people who are performing too.He told he is 40000 years old or lived before 40000 years.He is not visible to normal man but only awliya's.So Awliya asked how it is possible as The Prophet Adam is not so old.He told there were one lack Adam and we are the descendants of 100001.So there were mysteries in this world and human evolution.It is beyond the human comprehension. so leave it as it is and should leave it to God
Allah to protect and solved it as Abdul Muthalif told to Abraha when he came to attack Kabah.

But we must protect our grave yards and Shrines as it is hole mark of our existence and not allow some group to destroy or flatten Shrines in the name of original Islam.Also convince that Who is this Sinhalese who are trying to hide the historical facts of that they are descendants of Bangali aryans who came to srilanka and settled.To prove that the body shape of Srilankan sinhalese and Bangali people are same and the same new year date too.

But Muslims are not another ethnic group as the Tamils and Sinhalese but we are another religious group and mixed race and following the religion of Arab man and Sinhalese following the Nepali Man's religion is the difference.But they behave as the Lord Buddha is Srilankan and this too must convince them.

Excellent Article, Thank You Sir, The Ziyarams are our, History, identity and our most Preserved Heritage , We should Preserve and Protect them in order to prove muslims existence in this Country before any other religion. not destroy with name of Shirk as Wahhabis claim.

As Muslims we trust history related to islam based on Quran or Saheeh hadees only. All the records may may not be true.

However an invition to establish siyarams in the name of history, seems to be an invitation toward shirk.

For Muslims Establishing Tawhees and opposing shirk are more important then a history if it diverts us toward shirk.

More over there is no authentic evidence that Adam (al) landed on this mount. Rather it is a belief only.

warning to Jaffna Muslim.com for publicing articles that calls Muslim toward shirk.

Allah knows best. Ya Allah guide All Muslims toward Rasheed and protect us from shirk and is callers.

Unnecessary arguments There no evidence or any other authenticated proof . Its shirk
Unwanted problem . Those who interested in this please enlightened Muslims with proof proper authentication makings unwanted problems to Muslims . I personally feel even learnred personal without any fundamental raise problems without its consequences

we should learn our decend & our generations. as per the faith of islam the ADAM (alai) and Hawwa were the first humans to the planet of earth from the paradise. we must keep the memory of all saints (Sadaths) those who came from the way of almighty allah. these are not shirks.

இந்த கட்டுரையாளருக்கு இஸ்லாமிய அறிவு (குர்ஆன் ஹதீஸ்) கொஞ்சம் கூட இல்லை என்பதைக் காட்டுகிறது...

நடு நிமையில் இறுந்து சிந்திப்பவர்களுக்கு இதில் படிப்பிைஉண்டு

Post a Comment