June 10, 2018

மாட்டிறைச்சியில் மாட்டிக்கொண்டுள்ள முஸ்லிம்கள்

-ரிஸ்வான் எம் உஸ்மான்-

மாட்டிறைச்சி சாப்பிட்டுத்தான் ஆக வேண்டுமா?
சாப்பிடாமல் இருக்க முடியாதா?
கடையில் அறுத்து தொங்கப்விட்டிருந்தால் மட்டும் போதுமா?
வாங்கிய இறைச்சி உண்ணும் அளவுக்கு உகந்ததா? தேகாரோக்கியம் உள்ள மாடு அறுக்கப்பட்டு சுத்தமான சுகாதாரமான இறைச்சியைத்தான் நமக்குக் கிடைக்கிறதா?
இறைச்சி இருந்தால்தால் பிள்ளைகள் சாப்பிடும்,
இறைச்சி இல்லாவிட்டாலும்  முள்ளும் சவ்வுமாவது இருந்தால்தான் சோறு கொஞ்சம் இறங்கும்!
என பல கேள்விகள்,.... பல அங்கலாய்ப்புகள்...

உண்மையில் முஸ்லிங்களை விட மாற்று மத சகோதரர்கள்தான் அதிகளவில் மாடிறைச்சியை புசிக்கின்றனர். ஆனால் பொல்லும் பொல்லாப்பும் முஸ்லிங்கள் மேல்தான் விழுந்தவண்ணம் இருக்கிறது.

அதிகமான கடைகளை டென்டர் மூலம் முஸ்லிங்களே நடாத்திவருவது,
ஹலால் காரணமாக முஸ்லிங்கள் மாற்றுக் கடைகளை நாடாமலிருப்பது,
டென்டரைப் பெற பற்பல இலட்சங்களை அள்ளி வீசுவது, போட்டி போடுவது,
சில சமூகங்கள் தெய்வமாக?! தாயாக கருதும் மாட்டினை அறுத்து பலருக்கும் விளங்க குடல் வேறு, குலை வேறு என பிரதான வீதிகளிலும் தொங்கவிடப்படுவது,
சில சந்தர்ப்பங்களில் நம்மவர்களில் ஒருசிலர்; உரிமைகளை விடக்கூடாது என்று மாட்டை விட்டுக்கொடுக்காமல் வாதிடுவது,
வேறு ஒரு இடத்தில் முஸ்லிங்களை வம்புக்கிழுக்க முடியாதபோது; மாட்டையும் மாட்டிறைச்சியையும் பிடித்துக்கொள்வது
போன்ற பல காரணிகள் இதற்குக் காரணங்களாக இருக்கலாம்.

நன்றாக விளங்கிக்கொள்ளுங்கள்!
மாடறுப்பு எமக்கு கட்டாயமாவது *உள்ஹிய்யா* கடமையின்போது மட்டும்தான்! அதுவும் மூன்று மிருகங்களில் ஒன்றாக!
ஒட்டகம் இல்லை!
மாடு கிடைக்காது!!
இருக்கவே இருக்கிறது ஆடு தாராளமாக...!!!
இந்த இடத்தில் நான் மார்க்கத்தில் கை வைக்கவோ தீர்ப்பு வழங்கவோ வரவில்லை!

தொடராய் கொஞ்சம் வாசியுங்கள்....

இப்படி செய்து பார்த்தால்தான் என்ன?....
அனைத்து முஸ்லிங்களும் சேர்ந்து ஒரு வெள்ளிக்கிழமை ஜும்மாவின் பின் இலங்கையில்
தடைசெய்!
தடைசெய்!!
மாடறுப்பை தடைசெய்!!!
என்று விடாமல் அரசுக்கு அழுத்தம் கொடுத்தால்தான் என்ன?

என்ன நடக்கும் நினைத்துப்பாருங்கள்....

அரசுக்கு கோடிக்கணக்கான வருமானம் இல்லாமலாகும்,
பல்லாயிரம் பேருக்கு காளை மாடுகளால் பிரயோசனமற்றுப் போகும்,
பல்லாயிரம் பேருக்கு பலவழிகளில் தொழிலற்றுப் போகும்,
வீதிகளில் மாடுகளின் நடமாட்டம் அதிகரிக்கும்,
விவசாயம் பாதிப்படையும்,
மாட்டை அறுக்க அனுமதிக்குமாறு போராட்டம் நடக்கும்,
அல்லது மாட்டின் பெருக்கத்தை தடுக்குமாறு அழுத்தம் வரும்,
சிலவேளை அறுங்கள் என்று காலில்கூட விழலாம்.!

இதனால் நமக்கு என்ன இலாபம்

முஸ்லிங்களின் மேல் சுமத்தப்பட்ட பழி செல்லாக்காசாகும்
நோயுற்ற மற்றும் இறக்கும் நிலையிலுள்ள மாடுகளின் இறைச்சிகளை உண்ணக்கிடைக்காது
நோயாளிகள் குறைவர்,
ஒரு மாட்டின் விலை வெறும் பாத்தாயிரத்துக்கு வரலாம்
பத்துப்பேர் சேர்ந்து ஒரு ஆரோக்கியமுள்ள மாட்டை வாங்கி ஒரு மாதத்துக்கு தேவையான இறைச்சியப் பெறலாம்

மறுபுறம் இவைகளையும் மறுப்பதற்கில்லை.

நம்மவர்கள் வியாபாரத்தை முழுநோக்காகக் கொண்டு ஜீவகாருண்யத்தை சிறிதளவேனும் கடைப்பிடிக்காமை,
கர்ப்பிணிப் பசுக்களையும் ஈவு இரக்கமின்றி அறுக்கின்ற குற்றச்சாட்டு!,
இறந்த மாட்டையும் விற்பனை செய்யும் குற்றச்சாட்டு!
வண்டிகளில் மாடுகளை மூச்சுவிட முடியாதளவு அடுக்கடுக்காய் அள்ளிச்செல்வது, அழைத்துச்செல்வது!
திருட்டுமாடு அல்லது திருடர்களிடம் குறைந்தவிலைக்கு பெற்று அறுக்கின்றமை,
சுகாதாரப் பரிசோதகர்களை கைக்குள் வைத்துக்கொண்டு உண்ணத்தகாத, உடம்புக்கு கேடு விளைவிக்கக்கூடிய இறைச்சியை விற்பனை செய்வது. இவைகள் மாபெரும் பாதகச்செயல் என்பதை உணரவேண்டும்.

எனவே சிந்திப்போம்.. சரியாயின் செயல்படுத்துவோம்.

கட்டுரையின் நீளம் கருதி சிந்தனைக்கு சில வரிகள்....

தற்போது நாட்டில் கிடைக்கக்கூடிய மருந்து மற்றும் இரசாயனக் கலப்பற்ற உணவு இறைச்சியாகும்.
மனிதனுக்கு அசைவம் சாப்பிடுவதற்காகத்தானோ என்னவோ இறைவன் மனிதனுக்கு வாயில் வெட்டும் பல் மற்றும் வேட்டைப்பல்லை வைத்திருக்கிறான்!
தாய்ப்பாலும் அசைவம்தான், வெறும் தண்ணீரும் அசைவம்தான்!
மாட்டின் இனப்பெருக்கவீதம் மிகவும் குறைவுதான் ஆனால் ஏதோ ஒரு வகையில் அது மனிதனுக்கு(காக) தாராளமாகக் கிடைக்கிறது. (நாட்டில் அறுப்பு வீதத்தைப் பார்த்தால் ஒரு மாத்ததுக்குள்ளே மாட்டினம் அழிந்துபோயிருக்கவேண்டும்.)
நாயின் இனப்பெருக்கவீதம் வருடத்தில் மிகவும் அதிகம்தான். ஆனால் ஏதோ ஒரு வகையில் அது அழிந்துபோகிறது. (நாட்டில் வருடாந்த வளர்ச்சி வீதத்தைப் பார்த்தால் ஒருசில வருடத்துக்குள்ளே மனிதர்களைவிட நாய்கள்  பெருகியிருக்கவேண்டும்.)
மறுபுறம் ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான மீன்வகைகளும், இலட்சக்கணக்கான கோழிகள், முட்டைகளும், ஆயிரக்கணக்கான ஆடுகளும் நூற்றுக்கணக்கான இதரமிருகங்களும் உணவுக்காக இனமத வேறுபாடின்றி மனிதர்கள் புசிப்பதை எந்தக்கணக்கில் வரவுவைப்பது???????...
இறைச்சி உண்ணலாம். எந்நாளும் உண்ணத்தான் வேண்டும் என்ற கட்டாயமில்லை.
அசைவம்தான் சாப்பிடவேண்டும் என்றால் மனிதனுக்கு சாப்பிடுவதற்கு ஏதுமில்லை.


எனது இக்கட்டுரையின் நோக்கம் சாதாரண ஒரு தெளிவிற்காகவே அன்றி மாறாக நம்மவர்களையோ மாற்றுமத சகோதரங்களின் மனதையோ காயப்படுத்துவதோ அல்ல என்பதை தயவுடன் அறியத்தருகிறேன்.

ரிஸ்வான் எம் உஸ்மான்

9 கருத்துரைகள்:

Dear Muslim Brothers Please realize the fact about it as well as understand others, we all try be pure Muslims and maximize to follow the Islamic principle as much as possible
lets challenge it follow this article to open our eyes

unmaithan rilwan usman innum onru kuruban ovvoru vettilum koduppargal insha allha

This is stupid people. Their GOD is RAT, CAT, COW, PEACOCK,SNAKE,ELEPHANT,MONKEY,CROW AND ETC. How could be ? this peoples are not civilized this is scientific world still they are believing animal as GOD.

Unfortunately the Muslim butchers are not practicing Muslims.

ONE OF THE BEST Article, very good information
PLEASE ALL MUSLIM must stop eating beef for few years
then others will realize the out comes

விட்டுகுடுத்து வாழ்வதில் எந்த தவறும் இல்லை .மாட்டு இறைச்சி இல்லாமலும் நாம் வாழலாம். முஸ்லீம்களின் ஆரோக்கியத்துக்கும் நல்லது .இறைச்சி உண்பது குறையும் .

India is one of biggest exporters of the beef.all for money.
Bjp maadu thingamaatan but maatta aruththu export panni kaasu sambathippan

Post a Comment