Header Ads



ராஜபக்‌ஷ நாமத்தை ஜெபிக்காவிட்டால், கூட்டு எதிர்க்கட்சி செத்து போய்விடும்

ராஜபக்‌ஷ நாமத்தை தினந்தோறும் ஜெபிக்காது போனால் கூட்டு எதிர்க்கட்சி ஒருநாளும் நிலைத்திருக்கப் போவதில்லை என்று ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை மாலை ஐ.தே.க.வின் தலைமையகமான ஶ்ரீகொத்தாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வௌியிட்ட அவர் மஹிந்த ராஜபக்‌ஷ தவிர தற்போதைக்கு கூட்டு எதிர்க்கட்சிக்கு வேறெந்த தலைவரும் இல்லை. அதன் காரணமாக ராஜபக்‌ஷ நாமத்தை ஜெபிப்பதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியும் இல்லை.

ஆனால் ஐக்கிய தேசியக்கட்சியில் சஜித் பிரேமதாச. அகில விராஜ் காரியவசம், நவீன் திசாநாயக்க என்று பல இரண்டாம் கட்டத் தலைவர்கள் இருக்கின்றார்கள்.

தற்போதைக்கு பலரும் பாதாள உலகக்கும்பல்களின் செயற்பாடுகள் குறித்து அரசாங்கத்தை விமர்சிக்கின்றார்கள். ஆனால் ஜுலம்பிடியே அமரே, சண்டி மல்லி போன்ற ஏராளம் பாதாள உலகக்கும்பல் தலைவர்களை கடந்த அரசாங்கமே உருவாக்கி விட்டிருந்தது.

ஆனாலும் நாங்கள் இப்போது அதனை அடக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம் என்றும் அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.