June 22, 2018

கத்தாரை தனிமைப்படுத்த, சவூதி மீண்டும் முயற்சி - கால்வாய் வெட்டவும் திட்டம்

-கத்தாரிலிருந்து அனீஸ் அலிமுஹம்மத்-

சவூதி அரேபியா நாட்டின் அண்டை நாடான கத்தாரை ஒரு கால்வாயைத் திறப்பதன் மூலம் தனிமைப்படுத்துவதற்கு சவூதி அரேபியா திட்டங்களை முன்னெடுத்துச் செல்கிறது. தீபகற்பமாக இருக்கின்ற ஒரு நாட்டை இடையே கால்வாயைத் தோண்டி அதனை தனிமைப்படுத்த எண்ணுவது உலக அரங்கிலும் மத்திய கிழக்கிலும் சில கருத்தாடல்களைத் தோற்றுவித்துள்ளது. இது மிகவும் விவாதிக்கப்பட வேண்டிய மற்றும் மத்திய கிழக்கில் பேசு பொருளாகியுள்ள ஒரு விடயமாகும்.

ஜூன் மாதம் 25 ம் திகதி செவ்வாயன்று சவூதியின் தலை நகரான ரியாதில் நடைபெற்ற மாநாட்டில் "சல்வா கால்வாய்" திட்டத்திற்கான முயற்சிகளுக்கான தினம் அறிவிக்கப்படும் என்று சவூதி அரசு அறிவித்துள்ளது. இது கத்தார் நாட்டிலிருந்து 60 கிமீ எல்லைகளைக் கொண்டிருக்கும்.

ஐந்து புகழ்பெற்ற கால்வாய் தோண்டும் நிறுவனங்கள் ஏற்கனவே இத்திட்டத்திற்கு போட்டியிட அழைக்கப்பட்டன. இந்த திட்டத்தின் வெற்றியாளர் 90 நாட்களுக்கு பிறகு அறிவிக்கப்படுவர் எனவும் இக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து தனியார் முதலீட்டாளர்களால் முழுமையாக ($ 750 மில்லியன்) நிதியளிக்கப்படக்கூடிய 60 கிலோமீட்டர் (37.5 மைல்) நீளமும் 200 மீட்டர் (219 கெஜம்) அகலமும் இந்த சல்வா கால்வாய் திட்டம் கொண்டிருக்கும். எகிப்திய நிறுவனங்கள் சுயேஸ் கால்வாய் விரிவடைந்தது பற்றிய அறிவைப் பயன்படுத்தி இந்த திட்டத்தை செயற்படுத்தும்.

இந்தத் திட்டம் சவுதி அரேபிய தளத்தையும், கால்வாயின் Qatari பக்கத்தில் அணுசக்தி கழிவுகளையும் நிறுவ திட்டமிட்டுள்ளது.

சவுதி அரேபியாவிற்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் உள்ள தொடர்பை கத்தாரிலிருந்து முற்றாக இல்லாது செய்து தனிமைப்படுத்த முயல்கின்ற ஒரு வழிவகையாக இந்த நியாயமற்ற நடவடிக்கை பரந்த அளவில் கண்டனம் செய்யப்பட்டுள்ளது.

ஜூன் 5, 2017 ல், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து மற்றும் பஹ்ரைன் நாடுகள் கத்தார் அரசின் மீது பயங்கரவாதத்தை ஆதரிப்பதற்காக குற்றம் சாட்டி, பொதுவாக ஈரானுடன் நட்புறவைப் பேணி வருவதாக கத்தார் மீது சட்டவிரோதமாக தடை விதித்தது. அதன் பிறகு சவூதி கத்தாருக்கான அதன் ஒரே எல்லையையும் நிரந்தரமாக மூடியது.

4 கருத்துரைகள்:

This tells us Saudi politicians would like to go back into pre-Islamic age of ignorance..
Today world geopolitics is changing day by day ..
Friends of Saudi could come enemies of Saudi..
Saudi could be used as curry leaf by many.
It has been used already by many and yet they will never learn lessons..
Holding grudge is no good at all..

All Arab countries are too emotional.
Qatar also should consider reducing connection with SHIA majority Iran , which is acting against to Ahlussunnah the people of pure Islam.

Rasheed..
Shia and Sunni game is over now.
It's your friend Isreal tricks to play around .
Saudi soon will become desert once oil dry out..
If Iran acts like Saudi dance with wahabism...middle East would be one more battle field for religious war .
What Qatar does is a commenasense ..
Iran its 70 million people is not comparable with sauidi in manpower ; technology..sauidi use it oil to buy weapons...once oil dry out no more friend for Saudi all the world go against saudi for its war crimes in Yemen and human rights violations.

சவூதி தன் சகா இஸ்ரவேல் காசாவில் கட்டிய மதில் சுவரைப் பின்பற்றியதாகவே இது இருக்கும்.

பெளதீக வளங்களைவிட பண்பாட்டுப் பலமே இறுதியில் வெல்லும் என்பதை இவை பறைசாற்றும்.

மஹ்தி அலைஹி வஸ்ஸலாம் அவர்களுக்கு முன்னதாக இன்னொரு சலாஹுத்தீன் அய்யூபியின் விரைவான வருகையை இவை வேண்டி நிற்கின்றன.

எதிர்கால இஸ்லாமிய உலகின் ஒற்றுமை ஆப்கானிஸ்தானில் போன்று ஆயுத வலிமையால்தான்  மீளெழுதப்படும் என்பதை இவை கட்டியங் கூறுகின்றன.

Post a Comment