Header Ads



என்னை பிரதமராகுமாறு, அனைவரும் வலியுறுத்துகின்றனர் - மஹிந்த

நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 உறுப்பினர்கள் மாத்திரமல்ல கூட்டு எதிர்க் கட்சியிலுள்ள அனைவரும் என்னை பிரதமராகுமாறு வலியுறுத்துகின்றனர் என  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  தெரிவித்தார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

பாராளுமன்றத்தில் அதிகாரமாற்றம் ஏற்பட்டால் நிச்சயம் பிரதமர் ஆவது குறித்து தீர்மானிக்க முடியும். நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 உறுப்பினர்கள் மாத்திரமல்ல கூட்டு எதிர்க் கட்சியிலுள்ள அனைவரும் என்னை பிரதமராகுமாறு வலியுறுத்துகின்றனர்.

ஜனாதிபதி தேர்தலின் வேட்பாளர் குறித்து பேசப்படுகின்றது. ஆனால் மக்கள் விடுதலை முன்னணி 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. இந் நிலையில் அரசாங்கம் எவ்வாறான தீர்மானத்தில் உள்ளது என்பதை அவதானித்து வருகின்றோம்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டு எம்முடன் இணைய முடியாது. வருட இறுதிக்குள் அவர் இது தொடர்பான தீர்க்கமான ஒரு முடிவை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும். எவ்வாறாயினும் சுதந்திரக் கட்சியுடன் இணைவது குறித்து நாங்கள் இன்னும் கருத்திற் கொள்ளவில்லை என்றார்.

2 comments:

  1. நாடு முன்னேற்றப்பாதையில் வீறுநடைபோட அதுமட்டும்தான் எஞ்சியிருக்கின்றது. இவர் பிரதமரானால் நாடு இனி சிங்கப்பூர்தான்.

    ReplyDelete
  2. May be those who participated in Iftar

    ReplyDelete

Powered by Blogger.