June 11, 2018

காத்தான்குடி துப்பாக்கிச் சூடு - மதவாத பயங்கரவாதமா..? இந்து சம்மேளனம் கேள்வி

காத்தான்குடி நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச்சம்பவம் இந்த நாட்டில் சந்தேகத்திற்கிடமான மதவாதக் குழுக்கள் மறைமுகமாக இயங்கக்கூடும் எனும் சந்தேகத்தை அதிகரித்துள்ளது.

கடந்த காலங்களில் இந்து சம்மேளனம் தொடர்ச்சியாக பொலிஸ் திணைக்களத்திற்கு இவ்விடயம் தொடர்பாக விழிப்போடு இருக்குமாறு கோரிவந்துள்ளது.

எனினும் உரிய அதிகாரிகள் இதுதொடர்பாக எவ்வித அக்கரையும் செலுத்தாத காரணத்தினால் தற்போது மதவாத ஆயுதக்குழுக்கள் பகிரங்கமாக  வாகனத்தில் வந்து சுட்டுக் கொன்றுவிட்டுச் சென்றுள்ளனர்.

இச்சம்பவங்கள் மீண்டும் இலங்கையையும் இலங்கை மக்களையும் ஒரு இருண்ட யுகத்திற்கு இழுத்துச்சென்றுவிடுமோ என்ற அச்ச உணர்வு தற்போது ஒவ்வொரு குடிமகனின்  மனதிலும் ஏற்பட்டுள்ளது. எது எவ்வாறெனினும் குறிப்பிட்ட மதவாத ஆயுதக் குழுக்களுக்கு  ஆயுதம் எவ்வாறு கிடைத்தது?"

ஆயுதங்களை  பாதுகாப்பு அமைச்சினூடாகப் பெற்றுக்கொள்ளப்பட்டு தன்னால் தான் இளைஞர்களுக்கு விநியோகிக்கப்பட்டது" என்று கிழக்கின் ராஜாங்க அமைச்சர் ஒருவர் முன்னர் கூறியிருந்தது தொடர்பாகவும்  யுத்தம் முடிவடைந்த பின் அவ்வாயுதங்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றியும் புலனாய்வு செய்யுமாறும் இந்து சம்மேளனம் அரசாங்கத்தை தொடர்ந்தும் வற்புறுத்தி வருகின்றது.

எனினும் இது தொடர்பாக எந்தவிதமான நகர்வுகளையும்  அரசாங்கம் எடுக்காததன் விளைவு இன்று பாரதூரமான திசையை நோக்கி கிழக்கு மாகாணம் நகர்கின்றதாகத் தோன்றுகின்றது.

எனவே இவ் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு  மாற்றி விசாரணைகளை  நடாத்துமாறு பொலிஸ்மா அதிபரிடம் இந்து சம்மேளனம் வேண்டுகோள் விடுக்கின்றது.இதற்கான வேண்டுகோள் கடிதம் ஒன்றை பொலிஸ்மா அதிபருக்கு இந்து சம்மேளனம்  அணுப்பிவைத்துள்ளது.

ஊடகப்பிரிவு.
இந்து சம்மேளனம்.இலங்கை.

5 கருத்துரைகள்:

இலங்கையை சீரழித்த தமிழ் பயங்கரவாதிகளுக்கு இலங்கை மேல் எவ்வளவு அக்கறை பார்.அதுவும் இந்தியாவிலிருந்து புல் பிடுங்க வந்த காவி மலையக அடி மாட்டுதமிழனுக்கு இருக்கும் நாட்டு பற்றை பார்த்தல் புல்லரிக்குது. ஆனால் யாழ்ப்பாணத்தில் தினம் தினம் நிகழும் வால்வெட்டை பற்றி இந்த இந்திய கைக்கூலி வாய் திறக்க மாட்டான். ரணிலின் அரசில் இவனை போன்ற ஹிந்து பயங்கரவாதிகள் தலை தூக்கி முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்டுக்கொண்டிருப்பதை வாய் மூடி மெளனிகளாக ரசித்துக்கொண்டிருக்கும் ஆண்மையற்ற முஸ்லிம் அமைச்சர்களே நீங்கள் வாழ்வதை விட சாகுங்கடா

Super saint,sacred land and sacred people who never known any killing and never touched any weapon,no any killing of any one on the basis of cast or religion or politics.Yes such great people must have concern about these type of activities.Well done.

YES RSS ALREADY INVOLVED NORTH AND EAST!

ஆமா எனக்கும் இந்த (மதவாத சக்திகள் என்ற) சந்தேகம் உண்டு சிவா சேனா, இந்து சம்மேளனம் போன்ற பயங்கரவாத மதவாத சக்திகளின் சாதியாக கூட இருக்கலாம் என்று

இலங்கையில் காத்தாங்குடியில் மட்டும் தான் துப்பாக்கி சூடு நடந்து இருக்கிறதா? மடையர்கள்

Post a Comment