Header Ads



அரசியலமைப்பு விவகாரங்கள் தொடர்பான, தெரிவுக்குழு உறுப்பினராக ஹக்கீம்

அரசியலமைப்பு விவகாரங்கள் தொடர்பான தெரிவுக் குழுவின் உறுப்பினர்களாக அமைச்சர் ரவுப் ஹக்கீம் , கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஸ மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிய நிலையான உத்தரவிற்கு அமைய இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.

இந்த தெரிவுக் குழுவில் சபாநாயகர் , பிரதமர் , சபைத்தலைவர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் அதிகாரபூர்வமாக செயற்படுகின்றனர்.

அதற்கு மேலதிகமாக ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் இந்த உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

3 comments:

  1. He? who? Mr.Talk shop is going to please his masters while Shinhalese and Tamils are under cutting SL. Muslims.

    ReplyDelete
  2. ஒலுவில் பகுதியில் சவுதி அரசினால் வழங்கப்பட்ட சுனாமி வீட்டுத்திட்டத்தினை குனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 14 வருடங்களுக்கு மேலாகியும் ஒரு நீதி அமைச்சராக இருந்தும் கூட அந்த சிறிய சிக்கலை முடிக்க தெரியாத, முடியாத ஹக்கிம் முழுநாட்டின் அரசியல் அமைப்பு விவகாரங்கள் தொடர்பாக உறுப்பினராகி எதனை கிழிக்க போகிறார்.

    ReplyDelete
  3. தோழர் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள். அடுத்த தேர்தல் வரைக்கும் முஸ்லிம்களும் தமிழரும் மலையக தமிழரும் எல்லோருக்கும் தேவைப்படுவார்கள். ஒற்றுமையுடன் அழுத்தம் கொடுத்து பெறக்கூடியதை அடுத்த தேர்தலுக்கு முன்னம் பெற்றுகொள்ள வேண்டும்

    ReplyDelete

Powered by Blogger.