Header Ads



மருமகனை கத்தியால், குத்திய மாமனார் - காதியார் முன் கொடூரம்

முஸ்லிம்  பெண்­களின் தனித்­து­வத்தை  பேணு­வ­தற்­காக   நாட்டில்  அமை­யப்­பெற்­றுள்­ளதே காதி நீதி­மன்றக் கட்­ட­மைப்­பாகும்.  இம்­முறை முஸ்­லிம்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்ள  கௌர­வ­மாகும்.

காதி நீதி­மன்­றுக்குள்  காதி­ நீ­திவான் முன்­னி­லையில்  தலாக்  வழக்­கொன்றின்  கவுன்­சிலிங்  நடை­பெற்றுக் கொண்­டி­ருக்­கையில்  கத்­திக்­குத்து  சம்­பவம் ஒன்று   களுத்­து­றையில்  இடம்பெற்­றுள்­ளது. இதி­லி­ருந்து  எமது சமூகம்  நாட்டின்  சட்­டத்தை  எந்­த­ள­வுக்கு  மதிக்­கி­றது என்­பது நிரூ­ப­ண­மா­கி­யுள்­ளது.

முஸ்லிம் சமூகம்  எமது நாட்­டி­லுள்ள  ஏனைய நீதி­மன்­றங்­க­ளுக்கு  வழங்கும்  கௌர­வமும்,  மரி­யா­தையும்   காதி நீதி­மன்­றங்­க­ளுக்கு வழங்­கு­வ­தில்லை.  காதி நீதிமன்ற  அழைப்­பா­ணை­க­ளைக்­கூட சிலர் கவ­னத்தில்   கொள்­வ­தில்லை. எத்­த­னையோ காதி நீ­தி­மன்­றங்­களின்  அமர்­வு­க­ளின்­போது வாதி, பிர­தி­வா­திகள்  மற்றும் அவர்கள் சார்ந்தோர்  தூஷண வார்த்­தை­களைப் பிர­யோ­கிப்­பது  இடம் பெறு­கி­றது.

காதி­ நீ­தி­மன்­றங்கள்  பலரால்  அவ­ம­திப்புச்  செய்­யப்­ப­டு­கின்­றன.  இவற்­றை­யெல்லாம்  மீறி  களுத்­துறை  காதி நீதி­மன்றில் கத்­திக்­குத்துச் சம்­பவம் ஒன்று இடம்­பெற்­றுள்­ள­தென்றால்  இவ்­வி­வ­காரம்  தொடர்பில்  கடு­மை­யான  சட்ட நட­வ­டிக்கை எடுப்­பது அவ­சி­ய­மாகும்.

கடந்த 2 ஆம் திகதி  களுத்­துறை காதி நீதி­மன்றில் விசா­ர­ணையின் கீழ் இருக்கும்  தலாக்  வழக்­கொன்று  தொடர்­பான  கவுன்­சிலிங் இடம்பெற்­றது.  கவுன்­சி­லிங்­கிற்கு  வாதி­யான  கண­வரும்  பிர­தி­வா­தி­யான  மனை­வியும்  அழைக்­கப்­பட்­டி­ருந்­தார்கள்.  கவுன்­சிலிங்  காலை 10.30 மணி முதல்  11.30 மணி­வரை  நடை­பெற்­றது.

கவுன்­சிலிங்  களுத்­துறை பிர­தேச  காதி நீதி­ப­தியின்  தலை­மையில் நடை­பெற்­றது. இக்­கு­ழுவில்  அப்­பி­ர­தேச பள்­ளி­வா­சலின்  பேஷ்­ இமாம், பாட­சா­லை­யொன்றின்  பெண் அதிபர்,  டாக்டர் ஒரு­வரும் அடங்­கி­யி­ருந்­தனர். கவுன்­சிலிங்  களுத்­துறை  காதி நீதி­மன்றில் நடந்து கொண்­டி­ருந்­த­போது  வாதி, பிர­தி­வா­திகள் தரப்­பினர் வெளியில்  இருந்­தனர்.

கவுன்­சிலிங் நடந்து கொண்­டி­ருந்­த­போது திடீ­ரென  பிர­தி­வா­தி­யான பெண்ணின்  தந்தை உட்­பி­ர­வே­சித்து வாதி­யான  கண­வரை  கத்­தி­யினால், குத்­தி­யுள்ளார். இச்­சம்­பவம் காதி­நீ­திவான் மற்றும்  மூவ­ர­டங்­கிய  கவன்­சிலிங்  குழு­வி­னரின் முன்­னி­லை­யிலே இடம்பெற்­றுள்­ளது. மாம­னாரின்  கத்­திக்­குத்­தினால்  மரு­ம­க­னான   கணவர்  படு­கா­ய­முற்ற  நிலையில் அம்­புலன்ஸ் வண்­டியில்  நாகொடை  வைத்­தி­ய­சா­லைக்கு  அனுப்பி வைக்­கப்­பட்டார்.

அவர்  நாகொட  வைத்­தி­ய­சா­லையில்  அதி­தீ­விர  சிகிச்சைப்  பிரிவில்  அனு­ம­திக்­கப்­பட்டு பின்பு  வைத்­தி­ய­சா­லையின் சாதா­ரண விடு­திக்கு  மாற்­றப்­பட்டு  தற்­போது  சிகிச்­சையின்   பின்பு வெளி­யே­றி­யுள்ளார்.  கத்­திக்­குத்து மேற்­கொண்ட  மாம­னாரை  களுத்­துறை  தெற்கு  பொலிஸார்  கைது செய்து  களுத்­துறை  நீதிவான்  நீதி­மன்றில்  ஆஜர் செய்­தனர்.  களுத்­துறை  நீதிவான் நீதி­மன்ற பதில் நீதிவான் பந்­துல வீர­சிங்க  சந்­தே­க­ந­பரை  எதிர்­வரும்  11 ஆம்  திகதி வரை  விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு உத்­த­ர­விட்டார்.

குறிப்­பிட்ட  தலாக் வழக்கு  பேரு­வளை  காதி நீதி­மன்றில்  தாக்கல்  செய்­யப்­பட்­ட­தாகும்.  இவ்­வ­ழக்கு  சுமார்  மூன்று  தட­வைகள்   பேரு­வளை   காதி­நீ­தி­மன்றில்  விசா­ரணை  நடந்த பின்பு வாதி­யினால்  இவ்­வ­ழக்­கினைத்  தொடர விஷேட காதி நீதி­ப­தி­யொ­ரு­வரை  நிய­மிக்­கும்­படி நீதிச்­சேவை  ஆணைக்­கு­ழு­விடம்  கோரி­யி­ருந்­ததையடுத்தே   களுத்­துறை பிர­தேச  காதி ­நீ­திவான் நீதிச்­சேவை  ஆணைக்­கு­ழு­வினால் விஷேட  காதி ­நீ­தி­ப­தி­யாக  நிய­மிக்­கப்­பட்டு விசா­ரணை நடை­பெற்­றது.

இவ்­வ­ழக்கு  2017  ஆம் ஆண்டு  பேரு­வளை காதி நீ­தி­மன்றில் தாக்கல்  செய்­யப்­பட்­ட­தாகும். 2018  பெப்­ர­வ­ரி­யிலே  களுத்­துறை   காதி­ நீ­திவான் இவ்­வ­ழக்­கிற்­கான  விஷேட   காதி ­நீ­தி­ப­தி­யாக    நிய­மிக்­கப்­பட்டு வழக்கு கோவை பேரு­வளை   காதி­ நீ­தி­மன்­றி­லி­ருந்து  களுத்­துறை  காதி­ நீ­தி­மன்­றுக்கு  அனுப்பி வைக்­கப்­பட்­டது.

களுத்­துறை  காதி­ நீ­தி­மன்றம்  இவ்­வ­ழக்­கினை விசா­ரணை  செய்­து­கொண்­டி­ருந்த  நிலையில்  இரு தரப்­பி­ன­ரையும்  சமா­தானம்  செய்து வைப்­ப­தற்­காக   கவுன்­சி­லிங்கை  ஏற்­பாடு செய்­தி­ருந்­தது. கடந்த  ஏப்ரல்  மாதமும்   கவுன்­சிலிங்  இடம்பெற்­றது.  அத­னை­ய­டுத்து  இரண்­டா­வது   கவுன்­சி­லிங்கே கடந்த 2 ஆம் திகதி இடம்­பெற்­ற­தாகும்.  இச்­சந்­தர்ப்­பத்­திலே  கத்­திக்­குத்துச் சம்­பவம் இடம் பெற்­றுள்­ளது.

 இவ்­வ­ழக்கின்  வாதி,  பிர­தி­வா­திகள் திரு­மணம் செய்து  5 வரு­டங்கள்  கடந்து விட்ட நிலையில்  4 வயதில்  ஓர் குழந்­தையும்  இருக்­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

தலாக்  வழக்கின்  வாதி­யான (விண்­ணப்­ப­தாரி)  கணவன் தனியார் துறை­யிலும்  பிர­தி­வா­தி­யான  மனைவி  அர­சாங்­க­து­றை­யிலும்  பணி­பு­ரி­ப­வர்­க­ளாகும்.

எம் சமூ­கத்தில்  படித்­த­வர்கள்  தரப்பினர்  நீதிவழங்கும்  நீதிமன்றங்களில் அத்துமீறிப் பிரவேசித்து இவ்வாறான  அடாவடித்தனங்களில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கதாகும்.

காதி நீதி­மன்­றங்­களில்  இவ்­வா­றான உயி­ரா­பத்­து­மிக்க  சம்­ப­வங்கள் இடம்­பெ­றா­தி­ருப்­ப­தற்­காக பொலிஸ்  பாது­காப்­பினைப்  பெற்­றுக்­கொள்­வது அவ­சி­ய­மாகும். காதி நீதி­மன்­றங்­க­ளுக்கு விசா­ர­ணை­களின்  போது பொலிஸ் பாது­காப்பு வழங்­கப்­பட வேண்­டு­மென  நீதிச்­சேவை  ஆணைக்­குழு பொலிஸ்மா அதி­பரை வேண்­டி­யுள்­ளதை யடுத்து பொலிஸ் பாது­காப்பு ஏற்­க­னவே  வழங்­கப்­பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

-Vidivelli

3 comments:

  1. இந்த கத்திகுத்தால் முஸ்லிம்களுக்கான தனியார் சட்டங்களில் ஒன்றான காதி நீதிமன்றம் பௌத்த சிங்கள அரசால் காரணம் காட்டி இன்யும் தடைசெய்யப்படலாம்.
    விவாகரத்திற்கான காரணம் சொல்லப்படவில்லை இருப்பினும் பொம்புள (அரச) உத்தியோகத்தர் என்பதால் குடும்ப நிருவாகத்தை ஒழுக்கத்தை நோக்கி நகர்த்துவதில் சிரமங்கள் வந்திருக்கலாம்.

    ReplyDelete
  2. Qazhi judges always speak in a very bad manner. There are many unqualified judges in Qazhi courts.

    ReplyDelete
  3. மூன்றாம் நபர்களின் குறிப்பாக பெற்றோரின் அனாவசிய தலையீடுகள் அனேக விவாகரத்துகளுக்கு காரணமாக அமைவதை காணக்கூடியதாகவுள்ளது.

    ReplyDelete

Powered by Blogger.