Header Ads



மைத்திரிபால ஜனாதிபதியாக இருந்திருந்தால், ஒரு தொலைபேசி அழைப்பில் பிரபாகரன் வென்றிருப்பார்

இலங்கையில் யுத்தம் நடைபெற்ற காலத்தில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்திருந்தால், ஒரே ஒரு தொலைபேசி அழைப்பில் பிரபாகரன் யுத்தத்தில் வெற்றி பெற்றிருப்பார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றை மேற்கோள் காட்டி வெளியிடப்பட்டுள்ள செய்தியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையின் வரலாற்றில் இதுவரையில் இல்லாத ஆட்சியே தற்போது நடைபெறுகின்றது.

மைத்திரி ஜனாதிபதியாக வந்தவுடன் ரணிலை பிரதமராக்கினார். இப்போது பிரதமரை மாற்ற முடியாத இக்கட்டான சூழ்நிலையைச் சந்தித்துள்ளார்.

எனினும், நாட்டுக்கு முறையான தலைமைத்துவம் அவசியம், அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற தீர்க்கமான முடிவுகள் அவசியம்.

இந்த விடயம் குறித்தும் நாம் ஆலோசனைகளைச் செய்துவருகின்றோம் எனவும் மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.