Header Ads



"இந்நாட்டின் நிலை இதுதான்..."

அர்ஜூன் அலோசியசிடம் இருந்து காசு எடுத்தவர்கள் கெட்டவராகவும், நாட்டு மக்களிடம் இருந்து காசை கொள்ளையடித்தவர்கள் நல்லவராகவும் மாறிவிட்டார்கள். தற்போது இந்த நாட்டின் நிலை இதுதான் என தொலைத்தொடர்பு டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வெளிநாட்டு தொழில் வாய்ப்பு அமைச்சர் ஹரின் பெர்னான்டோ தெரிவித்தார்.

ஸ்ரீகொத்தாவில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இன்று -12- இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இதை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

தமது சட்டைப்பையிலிருந்து காசு எடுத்தவர்களை மறந்து விட்டு, யார் அந்த 118 பேர் என்பதையே மக்கள் தேடுகின்றனர். ஊடகவியலாளர்களும் இதை மறந்துவிட்டார்கள்.

அண்மையில் விஸ்வமடு இராணுவ முகாமிலிருந்து இடமாற்றம் பெற்று சென்ற இராணுவ கேர்ணல் ரத்தனபிரிய பந்துவிற்கு அப்பகுதி மக்கள் கண்ணீருடன் பிரியாவிடை கொடுத்ததற்கு காரணம் என்ன?

இந்த கௌரவத்தை அவருக்கு கொடுக்க அன்புதான் காரணம். இராணுவம் என்பது அடிப்பதற்கும், கொடுமைப்படுத்துவதற்கும் இல்லை. அவர் மக்கள் மனதில் இடம்பிடித்த விதமே இங்கு முக்கியமானது.

மனிதன் மனிதனுடன் பலகும் விதம் இருக்கின்றது. அந்த மக்களின் மனதை வெல்லும் திறன் இருக்கின்றது.

இன்று அனைவராலும் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் எதிராக கருத்துக்களை முன்வைக்க முடியும். பிரதமர் ஜனாதிபதியை விமர்சிக்கலாம். அதேபோல் ஜனாதிபதி பிரதமரை விமர்சிக்கலாம். நாமும் அவர்களை விமர்சிக்கலாம். ஆனால் இதன்மூலம் இந்த அரசாங்கம் பிரிந்து விட்டது. இந்த அரசாங்கத்திற்கு பலம் இல்லை என குறிப்பிட முடியாது எனவும் ஹரின் பெர்னான்டோ தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.