Header Ads



ஜனாதிபதி தேர்தலில், மைத்திரிபாலவை களமிறக்க முடிவெடுத்துள்ளோம் - மஹிந்த அமரவீர

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தமது உறுப்பினர் ஒருவரையே ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவதற்கு தீர்மானித்துள்ளது. அந்த வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனைவை களமிறக்க முடிவெடுத்துள்ளோம் என ஸ்ரீலங்கா சுதந்திர முன்னணியின் செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தமது உறுப்பினர் ஒருவரையே ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவதற்கு தீர்மானித்துள்ளது. அந்த வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனைவை களமிறக்க முடிவெடுத்துள்ளோம். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அவரே பொருத்தமானவர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மேலும் பலமடையச் செய்யும் வேலைத்திட்டத்தை நாம் ஆரம்பித்துள்ளோம். அதனைப் படிப்படியாக் முன்னெடுத்து வருகிறோம். ஆகவே விரைவில் மீண்டும் கட்சியை பலமான நிலைக்கு கொண்டு வருவோம். 

ஆகவே அவருக்கு ஆதரவு வழங்கும் எந்தக் கட்சியும் எம்முடன் இணைந்து செயற்பட முடியும் என்றார்.

(எம்.சி.நஜிமுதீன்)

5 comments:

  1. பலுசேனவை உங்களின் பிரச்சார பிரிவாக அறிவித்து ஞானசாரவை பிரச்சார செயலாளராக நியமிக்கவும்... வெற்றி நிச்சயம்... ஞானசாரவின் அந்தரங்க செயலாளராக ஆசாத் சாலியை நியமித்தால் முஸ்லிம்களின் வாக்குகளையும் பெற முடியும்...

    ReplyDelete
  2. அது தான் எமக்குள்ள ஒரே தேவை. My 3 ஐயும் சகாக்களையும் எந்தளவு மோசமாக தோற்கடிக்க முடியுமோ அந்தளவு தோற்கடித்தால் தான் சற்று திருப்தியாக இருக்கும்.

    சாட்சிக்காரணிடம் கெஞ்சுவதை விட சண்டைக்காரணின் காலில் விழுவது மேல் என்று சொல்வது பொய்யா என்ன.

    ReplyDelete
  3. Do not waste yours time for MY3. he can not win this time. because he proofed his talent what is that.

    ReplyDelete
  4. டம்மி பீசுகள் இன்னுமொரு தடவை வருவதை நாம் யாரும் விரும்பவில்லை.நல்லாற்சி என்ற சொற்பிரயோகமே மக்களை கவர்ந்தது ஆனால் உள்ளே இருந்தது வெறும் கோது, இவரைவிட ஒப்பீட்டளவில் மகிந்த எவ்வலவோ மேல் ஆனலும் அவரையும் நாம் ஆதரிக்கவில்லை ஏனெனில் நாடு அப்போதும் செளிப்பாக இருக்கவில்லை.

    ReplyDelete

Powered by Blogger.