Header Ads



பாடசாலை செல்ல முடியாதென கூறிய மகளுக்கு சூடுவைத்த தாய், கடும் வேலையுடன் கூடிய சிறைத்தண்டனை

தனது மகளுக்கு சூடு வைத்த தாய் ஒருவருக்கு கடும் வேலையுடன் கூடிய ஒரு வருட சிறைத்தண்டனை விதித்து அது 5 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 1000 ரூபாய் அபராதமும் விதித்து களுத்துறை மேல் நீதிமன்ற நீதிபதி சுஜாதா அலஹபெரு உத்தரவிட்டுள்ளார்.

மத்துக, யட்டதொல பிரதேசத்தில் பாடசாலை செல்ல மறுத்த மகளின் முகத்தில் எண்ணெய் கரண்டியில் சூடு வைத்த தாய் ஒருவருக்கே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் திகதி பாடசாலை மாணவியின் முகத்தில் சூடு வைத்த குற்றச்சாட்டின் கீழ் தாய்க்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பாடசாலை செல்ல முடியாதென கூறி பாடசாலை சென்ற மகள் வயிற்று வலி என கூறி மீண்டும் வீட்டிற்கு வந்தமையினால் கோபமடைந்த தாய் இவ்வாறு சூடு வைத்தள்ளார்.

எனினும் சம்பவத்தின் பின்னர் குற்றவாளியான தாயினால் மகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்ட போதிலும், அயலவர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இடம்பெற்ற நிலையில் தாய்க்கு எதிராக நேற்றைய தினம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.