Header Ads



குட்டைப் பாவாடை அணிய, அதிபர்கள் வற்புறுத்துகிறார்களாம்...!

சில பாடசாலைகளில் கடமையாற்றும் அலுவலக உதவியாளர்களை சாரிக்கு பதிலாக குட்டை பாவாடை அணிந்து வருமாறு அதிபர்கள் வற்புறுத்துவதாக கல்விசாரா ஊழியர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இதன் காரணமாக அலுவலக உதவியாளர்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக கல்விசாரா ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் அஜித் கே. திலகரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த பிரச்சினை தொடர்பில் கல்வி அமைச்சுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

கல்விசாரா ஊழியர்கள் சங்கத்தினரின் இந்த குற்றச்சாட்டு தொடர்பில் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் எச். ஹேவகேவிடம் Nf வினவியது,

இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அதற்கமைய பாடசாலைகளல் கடமையாற்றும் கல்விசாரா ஊழியர்களுகான ஆடையை தயார் செய்யுமாறு கல்வி அமைச்சின் தர உள்ளீட்டு பிரிவிற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சின் மேலதிக செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

3 comments:

  1. என்னடா நடக்குது?அங்கே அபாய நிகாப் அணிய வெண்டாம் என்கிறாங்கள் இங்கே குட்டை பாவாடை அணிய சொல்றாங்கள் எல்லாம் பெண்களை களவில ரசிக்க செய்யும் தந்திரம்.

    ReplyDelete
  2. எல்லாம் குத்தாட்டம் போடத்தான்

    ReplyDelete
  3. முகமும் கரங்களும் தவிர்த்து
    முழுதாய் மறைத்திடும் பெண்களுக்கு
    முன்னுரிமை வழங்கும் சமூகம்
    முன்னேறும், ஒழுக்கத்தில் என்றும்!

    ReplyDelete

Powered by Blogger.