Header Ads



இஸ்லாமியரை ஏன் நியமித்தீர்கள்..? பௌத்தரை நியமித்திருக்கலாம் - இனவாதம் கக்கும் யோகேஸ்வரன்

ஒரு மதம் சார்ந்த அமைச்சுப் பதவி பிறிதொரு மதம் சார்ந்தவருக்கு வழங்கப்படுவதை நாங்கள் ஆட்சேபிக்கிறோம்" என தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் புனர்வாழ்வு மீள்குடியேற்றம் வடமாகாண அபிவிருத்தி மற்றும் இந்து சமய விவகார பிரதியமைச்சராக பதவிப்பிரமானம் செய்துகொண்டார்.

இந் நியமனம் தொடர்பாக யோகேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஜனாதிபதியின் இந் நியமனம் இலங்கை வாழ் இந்து மக்களை வேதனைப்படுத்தியுள்ளதோடு ஜனாதிபதியினால் இந்து மதம் அவமதிக்கப்பட்டதாகவே கருதுகிறேன். இந்நியமனம் மீளாய்வு செய்யப்பட வேண்டும்.

அதாவது பௌத்த சாசன அமைச்சு அல்லது இராஜாங்க அமைச்சு அல்லது பிரதியமைச்சு பதவியை ஜனாதிபதியினால் பௌத்தர் அல்லாத ஒருவருக்கு வழங்க முடியுமா? ஒரு போதும் அவ்வாறு வழங்க முடியாது. இந் நிலையில் எவ்வாறு இந்து மதம் அல்லாத ஒருவருக்கு இந்து சமய விவகார பிரதியமைச்சு பதவியை வழங்க முடியும் என நான் ஜனாதிபதியிடம் கேட்க விருப்புகிறேன்.

மத ரீதியான கோட்பாடுகளைப் பொறுத்தவரை இந்து சமயத்துக்கும், இஸ்லாத்துக்கும் பல்வேறு விடயங்களில் முரன்பாடுகள் உள்ளன. இந்து சமயம் உருவ வழிபாட்டினை வலியுறுத்துத்துகிறது. கிரியைகளுக்கு முன்னுரிமையளிக்கிறது. பசு வதையை எதிர்க்கிறது. இந் நிலையில் இந்து சமய கொள்கைகளையும், கோட்பாடுகளையும் அனுசரித்து நடப்பதில் பிரைதியமைச்சர் சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் எதிர்நோக்க வேண்டி ஏற்படும்.

இந்து ஆலயத்தில் நடைபெறுகின்ற பூஜை வழிபாடுகளில் பிரதியமைச்சர் என்ற வகையில் அவரால் கலந்துகொள்ள முடியுமா? என்ற வினாவிற்கு பிரதியமைச்சர் பதிலளிக்க வேண்டும்.

இந்து சமய விவகாரத்தைப் பொறுத்தவரை டி.எம்.சுவாமிநாதன் இராஜங்க அமைச்சர் மற்றும் பிதியமைச்சர் இல்லாத நிலையில் தனது கடமையை சிறப்பாக முன்னெடுக்கின்றார். அவருக்கு பிரதியைமைச்சர் தேவை என்றால் அமைச்சரின் ஆலோசனை பெற்று பொருத்தமான ஒருவரை நியமித்திருக்கலாம்.

அமைச்சு அல்லது பிரதியமைச்சு பதவி வழங்கப்படும் போது குறித்த துறை சார்ந்தவர்கள், அனுபவம் ஆற்றல் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவது பொது நடைமுறையாகும்.

ஆனால் இந்த விடயத்தில் இந்து சமய கோட்பாடுகளை அறிந்திராத பின்பற்றாத ஒருவர் எந்தவகையில் பிரதியமைச்சுக்குப் பொருத்தமானவராக இருக்க முடியும்.

தற்போதைய அமைச்சரவையில் இரு இந்துக்கள் பிரதியமைச்சர்களாக உள்ளார்கள் அவர்களில் ஒருவருக்கு வழங்கியிருக்கலாம். அல்லது இந்து சமய கோட்பாடுகளுடன் மிகவும் நெருக்கமாக உள்ள பௌத்த மதத்தைச் சேர்ந்த ஒருவரை நியமித்திருக்கலாம்.

பௌத்த சமயத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் எந்த அமைச்சுப் பதவியில் இருந்தாலும் வடக்கு கிழக்கு மாகாணகளுக்கு வரும் போது இந்து ஆலயங்களுக்கு சென்று விஷேட பூஜை வழிபாடுகளில் ஈடுபடுவதைப் பேணிவருகிறார்கள். இது இந்து பௌத்த மத வழிபாடுகளில் உள்ள ஒற்றுமையை பிரதிபலிக்கிறது. ஆனால் இஸ்லாமிய அமைச்சர்கள் இந்து ஆலயங்களுக்குச் செல்வதைத் தவிர்த்துக்கொள்கிறார்கள்.

தற்போதைய அரசாங்கத்தின் ஆரம்பத்தில் மீள்குடியேற்றம் புனர்வாழ்வு இந்து விவகார அமைச்சராக டி.எம்.சுவாமிநாதன் பொறுப்பேற்றிருந்த வேளை அந்த அமைச்சுக்கு இராஜாங்க அமைச்சராக எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டிருந்த போதும் இந்து சமய விவகாரம் அவருக்கு வழங்கப்படவில்லை.

இதே போன்றதொரு நிலைப்பாட்டினையே ஜனாதிபதி கவனத்தில் கொண்டு காதர் மஸ்தானுக்கு வழங்கப்பட்டுள்ள பிரதியமைச்சுப் பதவியிலிருந்து இந்து சமய விவகாரம் நீக்கப்பட வேண்டும்." என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்று இரு இராஜாங்க அமைச்சர்களும் ஐந்து பிரதியமைச்சர்களும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமானம் செய்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

7 comments:

  1. ஐயா யோகேஸ்வரனின் கூற்று சரியானது. எவ்வகையில் மஸ்தான் இந்து மத விவகாரங்களை கையாலமுடியும்?

    ReplyDelete
  2. பொருளாதார அமைச்சர் அமீரலி போன்றவர்கள் தமிழர் முறைப்படி பொட்டு சந்தனம் வைப்பதை ஏற்றுக்கொண்டு தமிழர் நிகழ்வுகளில் கலந்து கொள்பவர். அவரை நியமித்திருக்கலாம். காதர் மஸ்தான் நேற்று தெளிவாக கூறியுள்ளார் தன்னுடைய சேவையை இந்து மக்களுக்கு ஆற்ற தான் இந்த பதவியை ஏற்றுள்ளேன் என்று. இந்து மக்களுக்கு சேவை செய்ய கோவில் வரவேண்டிய அவசியமில்லை. அவர்களின் அரசியல் பொருளாதாரத்தை சீர்செய்தாலே போதும். மக்கள் தானாக எழுச்சி பெறுவார்கள்.

    ReplyDelete
  3. முட்டாழ்த்தனமான அரசாங்கமும் அதன் முடிவுகழம்

    ReplyDelete
  4. மார்க்கமா? பதவியா?

    ReplyDelete
  5. மத விவகாரங்களுக்கு ஓர் அமைச்சு தேவையானதா என்பது ஒருபுறம் இருந்தாலும் , இந்து மத அமைச்சு என்று ஒன்றை நிறுவினால் அதற்கு இந்து ஒருவர்தான் இருக்கவேண்டும் . அப்படி செய்யவிட்டால் அது ஒட்டுமொத்த இந்து மக்களையும் இழிவு படுத்துவதாகவே அமையும். மஸ்தான் அவர்களுக்கு வேறு எந்த அமைச்சையும் கொடுப்பதற்கு இங்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

    உதாரணத்திற்கு ஒரு கோவில் கும்பாபிஷேகத்திற்கு இந்து மத விவகார அமைச்சரை தலைமை தாங்கி சமய அனுஷ்டானங்களில் கலந்துகொள்ள அழைப்புவிடுக்கப்பட்டால் மஸ்தானால் கலந்துகொள்ள முடியுமா?. இதைப்பற்றி கேள்வி கேட்டால் இனவாதம் !

    ReplyDelete
  6. காணாமல் கண்ட நாய்தூணாமல் தின்றதாம் தவிட்டை என்பர். இப்படி யொரு அமைச்சை பொறுபேற்ற லூசிமஸ்தானுக்கு எதனால் அடிக்க வேண்டும்.

    ReplyDelete
  7. Shall we appoints champika ranawaka as Hindu religious affairs minister?

    ReplyDelete

Powered by Blogger.