Header Ads



ஜம்இய்யத்துல் உலமா, வெளியிடவுள்ள முக்கிய அறிக்கை

ஷவ்வால் பிறை தொடர்பில் நேற்றைய தினம் எடுத்த தீர்மானம் குறித்த தெளிவுகள் சில மக்களை எட்டாததன் காரணத்தினாலேயே, அது தொடர்பில் சந்தேகமான நிலைப்பாடுகள் ஏற்பட்டிருக்கலாம் எனவும், இது தொடர்பில் எதிர்வரும் நாட்களில் மிக விரைவாக விரிவான அறிக்கைகளை வெளியிடவுள்ளதாகவும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி இன்று (15) அறிவித்தார்.

நாம் கடந்த 2007 ஆம் ஆண்டு ஏற்படுத்திய பிரகடனம் ஒன்று இருக்கின்றது. அந்த பிரகடனத்தின் ஐந்தாவது உறுப்புரை என்ன சொல்கிறதென்றால், நாம் ஒரு சாட்சியை நிராகரிக்கக் கூடிய நேரத்தில், குறித்த நபர் தனிப்பட்ட முறையில் தனது அமல்களைச் செய்து கொள்ள முடியுமே தவிர, அவர் யாரையும், தூண்டவோ, உட்சாகப்படுத்தவோ கூடாது.

இதுபோன்ற சகல தகவல்களையும் உள்ளடக்கிய அறிக்கையை வெளியிடவுள்ளதாகவே அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி இன்று மஃரிப் வேளையில் பிறை தொடர்பில் அறிக்கையில் தெரிவித்தார். 

2 comments:

  1. எதிர்வரும் காலங்களில் பிறை பார்ப்பதட்கு நவீன தொழில்நுட்ப சாதனங்களையும் பயன்படுத்த வேண்டும்

    ReplyDelete
  2. Whatever the explanations by the ACJU about rejecting the witnesses on Thursday evening moon sighting the truth is what we saw on Friday evening was not the first day crescent moon but second or third.

    ReplyDelete

Powered by Blogger.