Header Ads



மரணம் தவிர்க்கப்பட முடியாதது...

அவுஸ்திரேலிய வீரர் பல் ஹக்ஸின் மரணம் தவிர்க்கப்பட முடியாத ஒன்று என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. 2014ம் ஆண்டு நவம்பர் மாதம் பந்து ஒன்று பின் கழுத்தில் பட்டதன் காரணமாக காயமடைந்த பில் ஹக்ஸ், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த மரணம் தவிர்க்கப்பட்டிருக்கலாமா என்ற அடிப்படையில் அவுஸ்திரேலிய ஜூரிகளினால் விசாரணை நடத்தப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பில் எதிரணித்தலைவர் பிரட் ஹடின் மற்றும் பந்து வீச்சாளர் டக் புலின்கர் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் செப்பில் சீல்ட் போட்டித் தொடரில் நியூ சவுத் வேல்ஸ் கழகத்திற்கு எதிராக தென் அவுஸ்திரேலியாவின் சார்பில் ஹக்ஸ் துடுப்பெடுத்தாடிய போது சோன் அப்போட் வீசிய பந்து ஒன்று ஹக்ஸின் பின் கழுத்தில் பட்டிருந்தது.

மருத்துவ சிகிச்சைகள் முதலுதவிகள் வழங்கப்பட்ட போதிலும் அவர் உயிர் வாழ்ந்திருக்கக்கூடிய சாத்தியமில்லை என நரம்பியல் மருத்துவர்களின் அறிக்கையின் ஆதாரத்தின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

No comments

Powered by Blogger.