June 28, 2018

எதிர்க்­கட்சித் தலைவர் பத­வியை, விரைவில் கைப்­பற்­றி மகிந்தவை தலைவராக்குவோம்

பிர­தான எதிர்க்­கட்சி அந்­தஸ்தை எம் வசப்­ப­டுத்தி ஆட்சியைக் கைப்­பற்றும் வரையில் மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க் கட்சித் தலை­வ­ராக்­கு­வதே எமது பிர­தான இலக்­காகும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரர் விமல் வீரவன்ச தெரிவித்தார். 

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடு­கையில், 

மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யினால் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்ள 20 ஆவது திருத்தச் சட்­டத்தை தோற்­க­டிக்க வேண்டும் என்ற நோக்கம் எமக்குள்­ளது. நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை இல்­லா­தொ­ழிக்­கவும் நாட்டைத் துண்­டா­டவும் மக்கள் விடு­தலை முன்­ன­ணியும் ஐக்­கிய தேசியக் கட்­சியும்  முன்­னெ­டுக்கும் நோக்­கங்கள் எமக்கு நன்­றா­கவே தெரி­கின்­றன. எனவே நாட்டைக் காப்­பாற்ற வேண்­டிய தேவை எமக்குள்­ளது.  

கடந்த ஜன­தி­பதித் தேர்­தலின்  பின்னர் ஆட்­சிக்கு வந்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நிறை­வேற்று ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரங்­களைக் குறைத்­துள்ளார். பாரா­ளு­மன்­றத்­துக்கு அதி­கா­ரங்­களை வழங்­கி­யுள்ளார். ஆகவே இது போது­மா­னது. இன்று தேசிய பாது­காப்பு விட­யத்தில் பாரிய அச்­சு­றுத்தல் உள்­ளது. 

வடக்கில் மீண்டும் பயங்­க­ர­வாதம் தலை­தூக்கும் சூழல் உள்­ளது. வடக்கு முதல்வர் நாட்­டைத் துண்­டாடும் நோக்­கத்தில் செயற்­பட்டு வரு­கிறார். சிவா­ஜி­லிங்கம் போன்­ற­வர்கள் பிரி­வி­னை­வாதக் கொள்­கையில் செயற்­பட்டு வரு­கின்­றனர். பொலிஸ் அதி­கா­ரங்கள், காணி அதி­கா­ரங்­களை கேட்­டுக்­கொண்டு  அவர்கள் வடக்கில் மீண்டும் தனி ராஜ்ஜி­ய­மாக செயற்­பட முயற்­சித்து வரு­கின்­றனர். இந்­ நி­லையில் நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை நீக்கும் நோக்­கங்கள் மூல­மாக விடு­த­லைப்­பு­லி­களின் இலக்கு என்­னவோ அது அர­சாங்­கத்தின் மூல­மா­கவே நிறை­வேற்­றப்­படும். ஆகவே 20 ஆவது திருத்தச் சட்­டத்தை தோற்­க­டிப்­பது குறித்து சகல தரப்­புகளு­டனும் நாம் பேச்­சு­வார்த்­தை­களை முன்­னெ­டுத்து வரு­கின்றோம். 

பாரா­ளு­மன்­றத்தின் பிர­தான எதிர்க்­கட்சி ஆச­னத்தை நாம் கைப்­பற்ற வேண்டும். அந்த நோக்கம் எமக்குள்­ளது. குறிப்­பாக இந்த அர­சாங்­கத்தின் ஆட்சி முடி­வுக்கு வரும் வரையில் பாரா­ளு­மன்­றத்தில் பிர­தான எதிர்க்­கட்சித் தலை­வ­ராக மஹிந்த ராஜபக்ஷவைக் கொண்­டு­வர வேண்டும். அதற்­கான சூழலை நாம் உரு­வாக்­கு­வது குறித்தும் சிந்­தித்து வரு­கின்றோம். 

இப்­போது அர­சாங்­கத்தில் இருந்து பலர் வெளி­யேறி எதிர்க்­கட்­சிக்கு  மாறி­யுள்­ளனர். ஆகவே இப்­போது கூட்டு எதிர்க்­கட்சி பிர­தான எதிர்க்­கட்­சி­யாக மாற்றம் பெற்­றுள்­ளது. எனவே மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்­கட்சித் தலை­வ­ராக மாற்றும் நகர்­வு­களை நாம் முன்­னெ­டுக்க வேண்டும் என்றார். 

2 கருத்துரைகள்:

ஏன் விமல் நீயும் இந்த நாட்டில் ஒரு famous ஆன ஒரு ஞானம் நிறைந்த அரசியல் வாதிதானே ஏன் உன்னால் எதிர்கட்சி தலைவராக / பிரதமராக வர முடியாது. இன்னும் இன்னும் ஏன் மஹிந்த மஹிந்த என்று மஹிந்தவின் ඇටය பிடித்துக் கொண்டிருக்கிறாய் வெட்கமில்லையா உனக்கு.

இவன் பயங்கர கள்ளன்.இவனைவிட கடுமையான கள்ளனுடன் ஒன்று சேர்ந்தால்தான் கள்ள பாலன என்ற கட்டமைப்பை நன்றாகக் கொண்டு செல்லலாம். இவன் செய்த அட்டகாசத்தையாவது சரியாக நிரூபித்து இவனைத் தண்டிக்க வக்கில்லாத கவ பாலன.

Post a Comment