Header Ads



ஞானசாரரர் விவகாரம், சந்தியாவுக்கு மரண அச்சுறுத்தல்

ஊடகவியலாளர் பிரகீத்எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட  தான்  புதிதாக அச்சுறுத்தல்களையும் மிரட்டல்களையும் எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளார்

ஞானசார தேரர் விவகாரம் தொடர்பிலேயே தனக்கு மிரட்டல்கள் விடுக்கப்படுவதாக தெரிவித்துள்ள அவர் சமூக ஊடகங்கள் ஊடாகவே அதிக அச்சறுத்தல்கள் விடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

பேஸ்புக் ஊடாக நாளாந்தம் அச்சுறுத்தல்களும் கொலைமிரட்டல்களும் விடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையை அறியாமல் விபரங்களை அறிந்துகொள்ளாமல், மக்கள் என்னையும் எனது பிள்ளைகளையும் உளவியல் ரீதியில் சித்திரவதை செய்கின்றனர் என சந்தியா தெரிவித்துள்ளார்.

பொதுபலசேனாவின் ஞானசார தேரர் விவகாரத்திற்கு பின்னர் அடையாளம் தெரியாத முகப்புத்தக பயனாளர்கள் மரண அச்சுறுத்தலை விடுத்துகின்றனர் அவர்களில் பலர்  எனது கணவர் விடுதலைப்புலிகளின் உளவாளி என்ற குற்றச்சாட்டை முன்வைத்து மிரட்டல் விடுக்கின்றனர் எனவும் அவர் தெரிவித்தள்ளார்.

சில ஆண்கள் உண்மையை அறியாமல் ஆதரவற்ற பெண் மீது குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர் மகிந்த ராஜபக்சவும் கோத்தபாய ராஜபக்சவும் ஆட்சி புரிந்த வேளை இவற்றை மக்கள் மனதில் புகுத்தியுள்ளனர் அவை இன்றும் நீடிக்கின்றன.

3 comments:

  1. இனி இதுவும் நடக்கும் இதுக்கு மேலேயும் நடக்கும் இலங்கையின் சட்டம் மாறி, மாறி வரும்
    அரசாங்கத்தின் சட்டை பாக்கட்டில்தான்.

    ReplyDelete
  2. இந்த அம்மணிக்கு யோகம் அடிக்கப் போகுது போல.

    Western Country ஒன்றில் இலகுவாக அரசியல் தஞ்சம் குடும்பத்துடன் கிடைக்கப்போகுது.......

    ReplyDelete
  3. நீதிமன்றங்களின் தீர்ப்புக்கள் ஜனாதிபதி மாளிகையில் எழுதப்படுகிறது என்று அன்று மக்ந்தயை குற்றம் சாற்றிய நல்லாட்சி அதைவிட கேவளமான ஜாமினை வழங்கியுள்ளது. இப்படியொரு ஜாமின் கொடுக்கவா வருடக்கணக்கில் நீதிமன்றில் காலம் தாழ்த்தியது?
    எந்த குற்றத்திற்கும் முதல் குற்றவாளிகள் யாரெனில் நீதிபதிகளே! இவர்களை முதலில் தண்டித்தால் சட்டங்கள் தானாக இயங்கும், இதற்கு சுயநலமற்ற வீர சமுதாயம் வேண்டும், இதுவே இலங்கை யைப்பொருத்தமட்டில் எதிர்பார்க்க முடியாத சம்பவம், ஏனெனில் சுயகாலில் நிற்கும் வர்க்கத்தினர் மிகக்குறைவு.

    ReplyDelete

Powered by Blogger.