Header Ads



‘உண்மையைக் கூறுவோம்’

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பொது வேட்பாளராக முன்னிறுத்தியது முதல், தற்போதைய நடவடிக்கைகள் வரையில் நாட்டு மக்களுக்கு உண்மையைக் கூறுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.

‘உண்மையைக் கூறுவோம்’ எனும் தொனிப்பொருளில், நாடளாவிய ரீதியில் பரப்புரை நடவடிக்கையை நடத்தும் வகையிலேயே இந்தத் திட்டத்தை ஐக்கிய தேசியக் கட்சி முன்னெடுக்கவுள்ளது.

இதன்போது, கடந்த ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்தியமை முதல் இன்று வரையிலும் ஐக்கிய தேசியக் கட்சியினால் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பில் மக்களுக்குத் தெளிவூட்டும் வகையிலேயே இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி அன்றிலிருந்து இன்று வரையிலும் செய்தவற்றை பலரும் இன்று மறந்து விட்டனர் என்றும் குறிப்பிட்டுள்ள அந்தக் கட்சி, அந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் பணி,பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால், கட்சியின் பரப்புரைச் செயலாளர் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு, கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று திங்கட்கிழமை ஆரம்பித்து வைக்கப்படும்.

இந்த வேலைத்திட்டத்தின் போது, நாட்டின் நிலைமை, அரசின் செயற்பாடு மற்றும் அபிவிருத்தி தொடர்பில் மக்களுக்கு தெளிவூட்டப்படும் என்றும் கட்சி தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.