Header Ads



அரசாங்கத்திற்கான ஆதரவை, வாபஸ் பெற நேரிடும் - மன்சூர் எச்சரிக்கை

நல்லாட்சி அரசாங்கத்திற்கான ஆதரவை வாபஸ் பெற நேரிடும் என்று ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மன்சூர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் ஹலால் திணைக்கள சட்டமூலம் தொடர்பான விவாதத்தின் போது இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், அம்பாறை முஸ்லிம்களின் காணிப்பிரச்சினை தொடர்பாக அரசாங்கம் உரிய தீர்வொன்றைப் பெற்றுத் தர வேண்டும். அம்பாறை முஸ்லிம்களுக்கு நியாயமான முறையில் காணிப்பங்கீடு பெற்றுத் தரப்பட வேண்டும்.

அவ்வாறில்லாது போனால் இந்த அரசாங்கத்தில் தொடர்ந்தும் நீடித்திருப்பதில் அர்த்தமில்லை என்று கருதி அரசாங்கத்துக்கான ஆதரவை முஸ்லிம் காங்கிரஸ் வாபஸ் பெறும் நிலை ஏற்படலாம் என குறிப்பிட்டுள்ளார்.

4 comments:

  1. இப்படிபேசிப் பேசி 3.5 வருடங்களை கடத்திவிட்டீர்கள் இன்னும் 1.5 வருடங்கள் கடத்துவது பெரிய வேலையில்லையே. அதன் பிறது நீங்கள் ஆதரவை விலக்கினால் என்ன வழங்கினால் என்ன.

    தேர்தல் காலங்களில் மாத்திரம் மேடைகளில் முஸ்லிம்களின் உரிமைப் போராட்டம் என்று மார்தட்டி குமுறுவீர்களே கடந்த 3.5 வருடத்தில் என்ன உரிமையை எத்தனை உரிமைகளை பெற்றுக் கொடுத்தீர்கள்?

    உங்கள் தலைவன் சாணக்கியனுக்கு ஜால்ரா ஆடிப்பதை தவிர ஊருக்கு உங்களால் எந்த பிரயோசனமும் கிடைக்கவில்லயாம் என உங்கள் ஊர் காரர்களே கூறுகிறார்கள்.

    அதை என்னெண்டு பாருங்க, அதாவது பின்னுக்கு உதவும்.

    ReplyDelete
  2. mission impossible........

    ReplyDelete
  3. mission impossible........

    ReplyDelete
  4. ஆதரவை வாபஸ் பெற்று எதனை பிடுங்க போறீங்க

    ReplyDelete

Powered by Blogger.