Header Ads



முஸ்­லிம்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட, வாக்­கு­று­திகளுக்கு என்னாச்சு..?

-A.J.M.Nilaam-

2015 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­த­லின்­போது சிங்­கள வாக்­குகள் மைத்­தி­ரிக்குக் குறை­வா­கவே இருந்­தன. எனவே அவர் வெற்­றி­பெற முழு­மை­யா­கவே சிறு­பான்­மை­களின் வாக்­கு­களைப் பெற­வேண்­டி­யி­ருந்­தது. பொது அபேட்­சகர் எனும் நிலைப்­பாடும் ஐக்­கிய தேசியக் கட்­சிக்­கு­ரிய வாக்­கு­களும் அதை சாத­க­மாக்­கின.

எனினும் சிறு­பான்­மை­க­ளோடு எவ்­வித உடன் படிக்­கை­க­ளையும் மைத்­திரி செய்து கொள்­ள­வில்லை காரணம் அதனால் தனக்குக் கிடைக்க விருக்கும் சிங்­கள வாக்­கு­களின் தொகை குறை­யலாம் எனும் அச்­ச­மே­யாகும். தமிழ் மக்கள் வடக்கு கிழக்கு பிரச்­சினை தீர மைத்­தி­ரி­யி­ட­மி­ருந்து வாக்­கு­று­தியைப் பெற்­றுக்­கொண்­ட­போதும் முஸ்­லிம்கள் எந்த நிபந்­த­னை­க­ளையும் விதிக்­காமல் 100 வீதம் ஆத­ரித்­தார்கள். காரணம் மஹிந்த அர­சில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராகத் தொடர் அட்­டூ­ழி­யங்கள் நிகழ்ந்­த­தே­யாகும். வழ­மை­யாக ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்கு முஸ்­லிம்­களின் வாக்­குகள் 25% வீதம் கிடைப்­ப­துண்டு இத்­தேர்­தலில் அந்த வாய்ப்பை அக்­கட்சி இழந்து விட்­டது. இதனால் முஸ்லிம் வாக்­குகள் 100% வீதம் மைத்­தி­ரிக்கே கிடைத்­தன. முடிவில் குறைந்த வாக்கு வித்­தி­யா­சத்­தி­லேயே மைத்­திரி மஹிந்­தவை வென்றார். முஸ்­லிம்கள் ஒட்டு மொத்­த­மாக மைத்­தி­ரிக்கே வாக்­க­ளிக்­கா­தி­ருந்­தி­ருப்­பார்­க­ளாயின் நிலைமை என்ன? அவர் தோற்­றே­யி­ருப்பார். அவ்­விதம் நிகழ்ந்­தி­ருக்­கு­மாயின் தனக்கு என்ன ஆபத்து நேர்ந்­தி­ருக்கும் என்­பது பற்றி அவரே பகி­ரங்­க­மாகச் சொல்­லிக்­காட்­டி­யி­ருந்தார்.

ஆக அன்று முஸ்­லிம்கள் அவ­ருக்குச் செய்த பேரு­த­வி­யால்தான் எல்லா வகை­யிலும் மீண்டு தற்­போது ஆளுமை செலுத்­திக்­கொண்­டி­ருக்­கிறார். தமக்கு நேர்ந்த அட்­டூ­ழி­யங்­களை இவர் விசா­ரித்துத் தண்­டனை வழங்கி நிவா­ர­ணமும் தந்து இனி அவ்­வாறு நிக­ழா­தி­ருக்கச் செய்வார் என்­ப­தற்­கா­கவே முஸ்­லிம்கள் ஒட்டு மொத்­த­மாக அவ­ருக்கு வாக்­க­ளித்­தி­ருந்­தார்கள்.
எனினும் இவ­ரது ஆட்­சி­யிலும் கூட மரத்­தி­லி­ருந்து விழுந்­த­வனை மாடு முட்­டி­யது போல் ஆகி­விட்­டது. வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறி­யது போல் எனும் உவ­மை­யையும் இங்கு குறிப்­பி­டலாம். 2015 ஆம் ஆண்டு மைத்­திரி முஸ்­லிம்­க­ளுக்கு வழங்­கிய பிர­சுரம் இப்­படி இருந்­தது.

2015 ஆம் ஆண்டு ஜனா­தி­பதித் தேர்­த­லின்­போது மைத்­தி­ரி­பால சிரி­சேன முஸ்­லிம்­களின் மீது பரிவு கொண்டு நடந்து கொண்­டி­ருக்கும் இந்த சர்­வ­தி­கார குடும்ப ஆட்­சியில் முஸ்­லிம்­க­ளுக்கு கிடைத்த பரி­சில்­களும் பயன்­களும் என ஒரு பிர­சு­ரத்தை வெளி­யிட்­டி­ருந்தார். இது மைத்­திரி தேசத்தின் சுபீட்சம் எனும் தலைப்பில் காணப்­பட்­டது. இதில் மஹிந்த ராஜ­ப­க்ஷவின் ஆட்சிக் காலத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு நிகழ்ந்த அநி­யா­யங்கள் விலா­வா­ரி­யாகக் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தன.

1) அநு­ரா­த­பு­ரத்தை மல்­வத்து ஓயா பள்­ளி­வாசல் தாக்­கப்­பட்­டது.

2) இரத்­தி­ன­புரி 150 பௌத்த தேரர்­களைக் கொண்ட குழு ஜெய்­லானி பள்­ளி­வா­சலைத் தாக்­கு­வ­தற்­கான முயற்சி.

3) மாத்­தறை கந்­தர பள்­ளி­வாசல் தாக்­குதல்.
4) குரு­நாகல்– நாரம்­மல பள்­ளி­வா­ச­லுக்கு சுபஹ் தொழு­கைக்­காகச் சென்­றவர் தாக்­கப்­பட்டார்.

5) காலி ஹிரும்­புர முஹ்­யத்தின் ஜும்ஆ பள்­ளி­வாசல் தாக்­கப்­பட்­டது.

6) கேகாலை ஜும்ஆ பள்­ளி­வாசல் தாக்­கப்­பட்டு ஜன்­னல்கள் உடைக்­கப்­பட்­டன.

7) இரத்­தி­புரி ஓப­நா­யக்க பள்­ளி­வாசல் தாக்­கப்­பட்­டமை.

8) கம்­பஹா மஹர பள்­ளி­வாசல் தாக்­கப்­பட்­டமை.

9) கம்­பஹா மஹர பள்­ளி­வா­சலை மூடு­மாறு அமைச்சர் உத்­த­ரவு.

10) கொழும்பு பெபி­லி­யான பிர­தே­சத்தில் அமைந்­துள்ள பெஷன்பக் நிறு­வனம் தாக்­கப்­பட்­டது.

11) கம்­பளை நகரில் முஸ்லிம் சகோ­த­ர­ருக்குச் சொந்­த­மான லக்கி எம்­போ­ரியம் தாக்­கப்­பட்­டது.

12) மட்­டக்­க­ளப்பு நாவ­லடி மஸ்­ஜி­துன்நூர் பள்­ளி­வாசல் தாக்­கப்­பட்­டது.

13) கொழும்பு கிரேண்ட்பாஸ் பள்­ளி­வாசல் தாக்­கப்­பட்­டது.

14) திரு­கோ­ண­மலை புல்­மோட்டைப் பிர­தே­சத்தில் முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான 1500க்கு மேற்­பட்ட ஏக்கர் காணி­களை பௌத்த கோயில் அமைக்க சுவீ­க­ரிக்­கப்­பட்­டது.
15) மாத்­தறை இஸ்­ஸதீன் மாவத்­தையில் அமைந்­துள்ள மஸ்­ஜி­துத்­தக்வா பள்­ளி­வா­சலின் பதி­வினை புத்த சாசன அமைச்சு இரத்­தாக்­கி­யது.

16) அநு­ரா­த­புரம் கெக்­கி­ராவ A 9 வீதியில் அமைந்­துள்ள ஜும்ஆ பள்­ளி­வாசல் காடை­யர்­களால் தாக்­கப்­பட்­டது.

17) மொறட்­டுவ பல்­க­லைக்­க­ழ­கத்தில் முஸ்லிம் மாண­விகள் அபாயா அணிந்து வரு­வது தடை செய்­யப்­பட்­டது.

18) தெஹி­வளை பொலிஸ் நிலையம், தாருஷ்­ஷா­பிஈ பள்­ளி­வா­சலில் தொழுகை நடத்­தப்­ப­டு­வதை நிறுத்­து­மாறு உத்­த­ர­விட்­டது.

19) தெஹி­வளை, அத்­தி­டிய மாவத்­தையில் அமைந்­துள்ள ஹிபா பள்­ளி­வா­சலில் தொழுகை நடத்­து­வதை நிறுத்­து­மாறு கோரப்­பட்­டது.

20) கண்டி அம்­ப­தென்ன மஸ்­ஜிதுல் பலாஹ் பள்­ளி­வாசல் தாக்­கப்­பட்­டமை.

21) தம்­புள்ளைப் பள்­ளி­வா­சலைச் சுற்றி வாழ்ந்த சுமார் 107 முஸ்லிம் குடும்­பங்கள் வெளி­யேற்­றப்­பட்­டமை.
22) போதைப்­பொ­ருட்­களைக் கடத்­து­வ­தற்­காக முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தா பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது என BBS பகி­ரங்­க­மாக அறிக்­கை­யிட்­டது.

23) முற்­று­மு­ழு­தாக ஹலால் முறை­யினை ஒழிக்க வேண்­டு­மென பத்­தி­ரி­கை­யாளர் மாநாடு நடத்­தப்­பட்­டது.

24) மாவத்­த­கம பள்­ளி­வா­ச­லுக்கு முன்னால் காணப்­பட்ட ‘அமைதி’ எனும் பலகை தீக்­கி­ரை­யாக்­கப்­பட்­டமை.

25) கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையில் அமைந்­தி­ருந்த முஸ்­லிம்­க­ளுக்­கான தொழுகை அறை மூடப்­பட்­டது.

26) கேகால்ல, மாவ­னெல்ல நகரில் ஹஸன் மாவத்த எனக் காணப்­பட்ட விளம்­பரப் பல­கையை அந­கா­ரிக தர்­ம­பால மாவத்தை என பல­வந்­த­மாக மாற்­றி­யமை.

27) தம்­புள்ளை நகர பள்­ளி­வா­ச­லுக்கு இரு கைக்­குண்டு வீசப்­பட்­டமை.

28) மன்னார் முஸ்­லிம்­களின் மீள் குடி­யேற்­றத்தை அச்­சு­றுத்தும் வகையில் BBS வில்பத்து சர­ணா­ல­யத்­துக்குச் சென்று முஸ்­லிம்­களை அச்­சு­றுத்­தி­யமை.

29) BBS அமைப்பு ரிஷாத்­ப­தி­யு­தீனின் அமைச்­சுக்குச் சென்று அட்­ட­காசம் புரிந்­தமை.
30) அளுத்­க­மை­யிலும் பேரு­வ­ளை­யிலும் இனக்­க­ல­வரம்.

31) மாவ­னெல்லை மஸ்ஜித் தாருல் ஹிக்­மாவை மூடு­மாறு இரண்டு தேரர்கள் உத்­த­ரவு.

32) பாணந்­தறை நோலிமிட் வர்த்­தக நிலையம் முற்­றாக தீக்­கி­ரை­யாக்­கப்­பட்­டமை.

33) தம்­புள்ளை நகர பள்­ளி­வாசல் மீது குண்டுத் தாக்­குதல்.

34) நோன்­பு­கா­லத்தில் கிறீஸ் யக்­காக்­களை முஸ்லிம் ஊர்­களில் உலாவ விட்டு பெண்­களை பய­மு­றுத்தி கிறீஸ் யக்­காக்­களை இரா­ணுவ முகாம்­களில் மறைத்து வைத்­தமை.
என்­றெல்லாம் அதில் காணப்­ப­டு­கின்­றன. இவற்றில் ஒரு வேடிக்கை ரிஷாத் பதி­யு­தீனின் விவ­கா­ர­மே­யாகும். அன்று மஹிந்த அரசு மன்னார் முஸ்­லிம்­களின் மீள்­கு­டி­யேற்­றத்தை அச்­சு­றுத்தும் வகையில் B.B.S வில்­பத்து சர­ணா­ல­யத்­திற்குச் சென்று முஸ்­லிம்­களை அச்­சு­றுத்­தி­ய­தா­கவும் B.B.S அமைப்பு ரிஷாத் பதி­யுதீனின் அமைச்­சுக்குச் சென்று அட்­ட­காசம் புரிந்­த­தா­கவும் கூறிய மைத்­தி­ரியே வெளி­நாடு சென்­றி­ருக்­கையில் வில்பத்து கல்வி சுவீ­க­ரிப்பில் கையெ­ழுத்­திட்­டி­ருந்த தாகும். அதே அமைச்­சரை இப்­போதும் வைத்­துக்­கொண்டு தான் அவர் இதைச் சாதித்துக் கொண்­டி­ருக்­கிறார்.

இதை விடவும் பெரிய ஆச்­ச­ரியம் என்­ன­வென்றால் மஹிந்­தவின் ஆட்­சியின் போது முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக நிகழ்ந்த அட்­டூ­ழி­யங்­களை விடவும் மைத்­தி­ரியின் இந்த ஆட்­சியில் அதி­க­மாக நிகழ்ந்­த­தே­யாகும். மஹிந்த ஆட்­சியின் இறுதிக் கால­கட்­டத்தில் தான் முஸ்­லிம்கள் வெறுத்­தார்கள். எனினும் முஸ்­லிம்கள் மைத்­திரி ஆட்­சி­யேற்ற ஆரம்­பத்­தி­லேயே வெறுக்கும் நிலை உரு­வா­கி­யி­ருக்கக் கூடாது.

முன்பு தனது ஆட்­சியில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக பல்­வேறு அட்­டூ­ழி­யங்கள் நிகழ்ந்­ததை மஹிந்த தேர்­தலில் தோற்­ற­பின்பே உணர்ந்தார். எனினும் ஒப்­புக்­காக வருத்தம் மட்­டுமே பட்­டுக்­கொண்டார். முஸ்­லிம்­க­ளிடம் பகி­ரங்க மன்­னிப்பு கோர வேண்டும் என்று இது­வரை அவ­ருக்குத் தோன்­ற­வில்லை. தப்­பித்­த­வறி அவர் வென்­றி­ருந்தால் நிலைமை என்ன? ஒப்­புக்­கா­கவும் கூட அவர் வருந்­தி­யி­ருக்க மாட்டார் அல்­லவா?
தனது தரப்பு ஆளு­மையை அர­சி­யலில் மீண்டும் பெற­வேண்­டு­மாயின் ஜனா­தி­பதி தேர்­தலில் முழு நாடும் ஒரே தொகு­தி­யாக இருப்­பதால் சிங்­கள வாக்­கு­களால் மட்­டுமே முடி­யாது என்­பதை இவர் இப்­போது நன்­றாகப் புரிந்து கொண்டே முஸ்­லிம்­களை தாஜா செய்­கிறார். முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக மைத்­திரி ஆட்­சியில் நிகழும் அநி­யா­யங்­க­ளையே மஹிந்த சுட்­டிக்­காட்­டு­கிறார். ஆக புதி­யன புகு­தலும் பழை­யன கழி­த­லு­மாக இவை ஆகி­விட்­டி­ருக்­கின்­றன.

பழை­யன கழி­த­லுக்கு அடை­யா­ள­மா­கவே முன்பு பாதிக்­கப்­பட்ட சில முஸ்லிம் கிரா­மங்­களும் கூட மஹிந்த தரப்­புக்கு வர­வேற்பு வழங்­கு­கின்­றன. எதிர்­கா­லத்தில் மஹிந்­த­வை­விட்டு முஸ்­லிம்­களை அகற்­றவே திட்­ட­மிட்டு எதிர்த்­த­ரப்­பினர் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக அட்­டூ­ழியம் புரிந்­த­தாக மஹிந்த தரப்பு கூறும் வாய்ப்பு இருக்­கவே செய்­கி­றது.

நாம் குற்­ற­வா­ளி­க­ளாக இருப்பின் இது­வரை ஏன் எம்மை விசா­ரிக்­கவோ தண்­டிக்­கவோ இல்லை. பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு ஏன் இது­வரை நிவா­ரணம் வழங்­க­வில்லை. நாம் பொறுப்­பல்ல என்­ப­தா­லேயே எம்மை விட்டு வைத்­தி­ருக்­கி­றார்கள். இல்­லா­விட்டால் முஸ்­லிம்­க­ளுக்கு வழங்­கிய வாக்­கு­று­தியை இது­வரை ஏன் நிறை­வேற்­ற­வில்லை எனவும் கூறலாம்.
அது மட்டுமல்ல தனது அரசில் முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்ந்த அட்டூழியங்களையாவது இதுவரை மைத்திரி விசாரித்து தண்டனை வழங்கி பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்கியிருக்கின்றாரா? காலியிலும் அம்பாறையிலும் முஸ்லிம்கள் தாக்கப்பட்டது என்னவாயிற்று. திகனையில் கைது செய்யப்பட்ட அமித் தண்டிக்கப்படுவாரா அல்லது வழக்கம் போல் பிணை வழங்கப்படுமா? ஞானசார தேரர் முன்புபோல் நீதிமன்றத்துக்கு ஆஜராகாமலிருக்க விசேட சலுகை பெறுவாரா? என்றெல்லாம் இப்போது முஸ்லிம்கள் அவதானித்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஏனெனில் மீன்பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை என்பது போலதான் இதுவரை முஸ்லிம்களின் விடயத்தில் அனைத்தும் நிகழ்ந்திருக்கின்றன. சந்தியா எக்னெலி கொடவை நீதிமன்றத்தில் ஏசியதற்காகவே ஞானசாரர் குற்றவாளியாகிருக்கிறார். முஸ்லிம்களுக்கு இவர் செய்த அனைத்து அட்டூழியங்களுக்காகவும் அல்ல அந்தளவுக்குத்தான் முஸ்லிம்களுக்கான முக்கியத்துவம் காணப்படுகிறது.

2 comments:

  1. இறைவனிடம் கை ஏந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுது இல்லை

    ReplyDelete
  2. Besides these major planned attacks to Muslims
    There are unreported many incidences effect daily life of our brothers living with Singhalese area.
    Daily businesses all other daily activities and even waiting in the queue in government hospitals our people face problem for the only reason they are Muslims differently dressed
    No one look into this grave pathetic situation

    ReplyDelete

Powered by Blogger.