Header Ads



பேரினவாதத்தின் கொடுமையில் உளன்றுகொண்டு, சிற்றினவாதத்தை உழிழ முற்படுவது தர்மமாகாது

-வை எல் எஸ் ஹமீட் -

பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் வடக்கு அபிவிருத்தி, மீள்குடியேற்ற மற்றும் இந்து சமய விவகார பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டதையிட்டு சில தமிழ் அரசியல்வாதிகள் எதிர்ப்புக்கொடி தூக்கியிருப்பது ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அளிக்கின்றது.

அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் அரசியலமைப்புச் சட்டப்படியே நியமிக்கப்படுகின்றார்கள். இங்கு இராஜாங்க அமைச்சருக்கும் பிரதியமைச்சருக்கும் ஒரு பிரதான வேறுபாடு இருக்கின்றது. அதாவது இராஜங்க அமைச்சருக்கு ஐனாதிபதி ஏதாவது விடயதானங்களை நேரடியாக வழங்கலாம்.  ஆனால் பிரதியமைச்சருக்கு அவ்வாறு வழங்கமுடியாது.

இருவகை அமைச்சர்களுக்கும் கபினட் அமைச்சர் பொறுப்புக்களை வர்த்தமானி மூலம் வழங்கலாம். இதன்மூலம் புரிந்துகொள்ளக்கூடியது என்னவென்றால் ராஜாங்க அமைச்சருக்கு ஜனாதிபதி நேரடியாக சில பொறுப்புக்களை வழங்கலாம். பிரதியமைச்சருக்கு அவ்வாறு வழங்க முடியாது. உரிய கபினட் அமைச்சர் விரும்பினால் மாத்திரம் அவர நேரடியாக அவ்வாறு வழங்கலாம். ஆனால் நடைமுறையில் அவ்வாறு ஒரு அமைச்சரும் வர்த்தமானி மூலம் பொறுப்புக்களை வழங்குவதில்லை.

மட்டுமல்லாமல் “ பிரதியமைச்சர்கள் உரிய அமைச்சர்களுக்கு துணைபுரிவதற்காகவே நியமிக்கப்படுகிறார்கள்”; என்று அரசியலமைப்புச் சட்டம் கூறுகின்றது. ஆனால் இராஜாங்க அமைச்சருடைய நியமனத்தில் அவ்வாறான வாசகம் அரசியலமைப்புச் சட்டத்தில் இல்லை. எனவே, இதன் சுருக்கம் பிரதியமைச்சர்களுக்கு என்று எந்த அதிகாரமும் கிடையாது. உரிய அமைச்சர்கள் அவர்களாக வழங்கினாலேயொழிய.

பதில் அமைச்சர் நியமனம்
———————————-
உரிய கபினட் அமைச்சர் தம் பணியைச் செய்யமுடியதவிடத்து ( உதாரணமாக வெளிநாடு சென்றால்) ஜனாதிபதி இன்னுமொரு பாராளுமன்ற உறுப்பினரை பதில் அமைச்சராக நியமிக்கலாம்; என்றுதான் அரசியலமைப்புச் சட்டம் சொல்கின்றதேதவிர பிரதியமைச்சரை நியமிக்கவேண்டும்; என்று சொல்லவில்லை. ( அந்தப் பாராளுமன்ற உறுப்பினர் இன்னுமொரு கபினட் அமைச்சராக இருக்கலாம், உரிய பிரதியமைச்சராக இருக்கலாம், யாராகவும் இருக்கலாம்; அவர் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருக்கவேண்டும்; அவ்வளவுதான் - நடைமுறையில் உரிய இராஜாங்க அமைச்சரோ, பிரதியமைச்சரோ நியமிக்கப்படுவது வேறுவிடயம். அதற்காக எப்பொழுதும் அவ்வாறு நடைபெறுவதுமில்லை).
காதர் மஸ்தான் ஏன் இந்துமதவிவகார பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டார்?
—————————————————
பிரதியமைச்சர் ஒருவர் ஜனாதிபதியினால் எதுவித அதிகாரமும் வழங்கப்படாமல் உரிய அமைச்சருக்கு துணைபுரிவதற்காகவே நியமிக்கப்படுவதால் உரிய அமைச்சரின் பதவிப்பெயர்  எவ்வாறு அமைகின்றதோ, அவ்வாறே உரிய பிரதி அமைச்சரின் பதவிப்பெயரும் வழமையாக அமைகின்றது. அந்தவகையில்தான் உரிய அமைச்சரின் பதவிப்பெயரில் இந்துமதவிவகாரம் இருப்பதால் பிரதியமைச்சரின் பதவிப்பெயரிலும் அது வந்திருக்கின்றது. இதேபோன்றுதான் பிரதியமைச்சர் துலிப் விஜேசேகரவின் பதவிப்பெயரும் “ தபால், தபால் சேவைகள் , முஸ்லிம் மதவிவகார பிரதியமைச்சர்” என வந்திருக்கின்றது.

பிரதியமைச்சர் துலிப் விஜேசேகரவின் நியமனத்திற்கெதிராக முஸ்லிம்கள் எதுவித ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. ஆனால் வழமையான நடைமுறை என்பதனால் “ இந்துமதவிவகாரம்” என்ற ஒரு சொல் இணைக்கப்பட்டிருப்பதற்காக சில தமிழ்த்தலைவர்கள் இவ்வாறு கொடிதூக்குவது ஆச்சரியமாகவும் அதிர்ச்சியளிப்பதாகவும் உள்ளது.

வடபுல முஸ்லிம்களின் அவலநிலை
———————————————-
வடபுல மக்கள் யுத்த காலத்தில் இரு தசாப்தங்கள் இடம்பெயர்ந்து சொல்லொணாத்துயரங்களை அனுபவித்தார்கள். யுத்தம் நிறைவடைந்து அடுத்த தசாப்தம் நிறைவடையப் போகின்றது. இன்னும் பலர் மீள்குடியேறமுடியாத அவலம், குடியேறிவர்களில் பாதிப்பேருக்குக்கூட இன்னும் வீடுகள் இல்லை. உட்கட்டமைப்பு வசதிகள் இல்லை. அடிப்படைத் தேவைகள், தொழில்வாய்ப்பு என்று அவர்களது சோகக்கதை தொடர்வது ஒருபுறம், வெந்தபுண்ணில் வேல்பாய்ச்சுவதுபோல் அம்மக்கள் பரம்பரையாக வாழ்ந்த காணிகளில் பன்னிரண்டாயிரம் ஏக்கரை மஹிந்த பறித்தார்; பின்னால் வந்த மைத்திரி பன்னிரண்டாயிரம் போதுமா? என்று ஒரு லட்சம் ஏக்கரைப்பறித்த வேதனைக்கு விடைதெரியாமல் விசும்புவது மறுபுறம்; என்ற நிலையில் இந்த அரசு  மீள்குடியேற்ற அமைச்சையாவது முஸ்லிம் ஒருவருக்கு வழங்கியிருக்க வேண்டும்.

ஆகக்குறைந்தது அதிகாரமில்லாவிட்டாலும் பிரதியமைச்சையாவது, இவ்வரசின் இந்த இறுதிக்கட்டத்திலாவது அந்த மண்ணில் பிறந்து அந்த மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஒரு பிரதிநிதிக்குக் கொடுத்து அதன்மூலம் உரிய அமைச்சரின் ஒத்துழைப்போடு இந்த இன்னலுற்ற மக்களுக்கு எதையாவது அர்த்தமுள்ளதாக செய்யமுற்படும்போது வெறுமனே ஒரு சொல் ஒட்டிக்கொண்டது என்பதற்காக அதனைத் தூக்கிக்கொண்டு இனவாதம்பேசுவது சிற்றினவாதத்தின் கொடூரத்தைத்தான் காட்டுகின்றது.

பேரினவாதவாதமாக இருந்தால் என்ன, சிற்றினவாதமாக இருந்தால் என்ன; அவ்வினத்தைச் சேர்ந்த மொத்த மக்களும் அதனை ஆதரிப்பதில்லை. இதற்கு சிறந்த உதாரணம் திருமலை சண்முகா கல்லூரியின் அபாயா விவகாரத்திலும் கோப்பாப்புலவு சச்சிதானந்தத்தின் மாட்டிறைச்சி எதிர்ப்புக் கோசத்திலும் எத்தனையோ தமிழ் நல்லுள்ளங்கள் இந்த சிற்றனவாதத்திற்கெதிரா பலமாக குரல்கொடுத்ததை முஸ்லிம் சமூகம் நன்றியுடன் நிரைவுகூருகின்றது.

அதேநேரம் இனவாதம் சில அரசியல்வாதிகளாலும் மதவாதிகளாலும்தான் உருவாக்கப்படுகின்றது. பேரினவாதத்தின் கொடுமையை இன்னும் அனுபவித்துக்கொண்டிருக்கின்ற ஒரு சமூகத்தைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்றவர்கள் இன்னுமொரு சமூகத்தை நோக்கி இனவாதத்தை கக்க முற்படுவது தர்மமாகாது; என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

13 comments:

  1. இலங்கையில் தமிழர்களில் இனவாதம் அற்றோர் மிக அரிது

    ReplyDelete
  2. வடக்கு முஸ்லிம்களின் அபிவிருத்திட்கு தடையை ஏட்படுத்துவதுதான் இவர்களின் பிரதான நோக்கம்

    ReplyDelete
  3. கொஞ்ச நெஞ்ச தமிழர்களின் ஆதரவையும் முஸ்லிம்களிடம் இருந்து பிரிப்பதட்கான சதி அரங்கேறி வருகின்றது. எதோ ஒரு இனத்தை பாத்தி கட்டி அடிக்க முடிவு செயப்படுள்ளது. அதட்க்காக அவர்களை தனிமைப்படுத்தும் நாடகம் கச்சிதமாக நிறைவேறி கொண்டு இருக்கிறது. இனி அடி தாங்காமல் கதறினாலும் ஒரு ஈ காக்கா கூட கேக்காது என திட்டங்கள் வகுக்கப்படுள்ளது. இதட்கான முழு பொறுப்பையும் அவர்களின் சமூகம் சார்ந்த அரசியல் வாதிகளே ஏற்றுக்கொள்ள வேண்டும். மக்களே நீங்கள் தீர்மானித்து கொள்ளுங்கள் யாருக்கு என்ன என்ன நிகழப்போகின்றது என. பாக்கிஸ்தான் பங்களாதேஷ் பக்கம் காணிகளில் இப்பவே முதலிட்டால் பிறகு அதட்க்கான பலன்களை அனுபவிக்கலாம்.

    ReplyDelete
  4. முஸ்லிம் விவகாரங்களுக்கு நாளை ஒரு சிங்களவர் அல்லது தமிழர் நியமிக்கபடுவதற்க்கு முன்னோடியாகத்தான் இச்சம்பவத்தை உணர்கிறேன். தமிழர் மத்தியிலும் மலையகத் தமிழர் மத்தியிலும் ஏற்கனே எதிர்ப்பு ஆரம்பித்துவிட்டது. நண்பர் ஒருவர் உதவி அமைச்சுப் பதவிக்காக காதர் மஸ்தான் இந்துவாக மாறினால் ஏற்றுக்கொள்வோம் என்கிறார். இது தேவையா காதர் மஸ்தான்.

    ReplyDelete
  5. யதார்த்தமான உண்மை உங்களின் பதிவில் இருதியாக கூறினிர்கள் அதுதான் உண்மை அரசியல் வாதிகளும் மதவாதிகளும்தான் நாட்டுக்குல் குழப்பத்தை உண்டு பன்னுகின்றனர்.

    சந்திரிக்கா அரசாங்கத்தின் போது மூவின மத கலாச்சார அமைச்சராக இருந்தவர் ரத்ன சிறி விக்ரமநாயக்க,
    மகிந்த அரசாங்கத்திலும் மூவின மத கலாச்சார அமைச்சராக இருந்தது
    டீமு விஜயரட்ன,

    மக்களுக்காக கதைப்பவர்கள் எல்லோரும் அப்போதெல்லாம் எங்கே இருந்தார்கள்?அப்போதெல்லாம் ஏன் தட்டிக் கேட்கவில்லை ?

    ReplyDelete
  6. இந்த காதர் மஸ்தான் ஒரு இனவாதி என இந்த கட்டுரை நிருப்பிக்கிறது

    ReplyDelete
  7. How can we expect reconciliation if the Reconciliation Minister fought against this appointment?

    ReplyDelete
  8. ஹமீத் அவர்களே, இந்த விடயம் சம்பந்தமாக இனவாதிகள் கூக்குரல் விடுவதும், ஆர்பரிப்பதும் ஒரு புறம் இருக்க, சாதாரணமாக எல்லா இந்துக்களுக்கும் ஒரு எதிர் பார்ப்பு இருக்குமே, அந்த எதிர்பார்ப்பு இங்கு புறந்தள்ளப்பட்டுள்ளது. அந்த விடயத்தை நாம் நிட்சயம் சுட்டிக் காட்டவும் வேண்டும். அந்த இந்து கலாச்சார பிரதி அமைச்சர் பதவி ஒரு இந்துவாக இருக்கும் ஒரு நபரிடம் கொடுப்பதுவே சிறந்ததாக இருக்கும் என்று சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இந்த விவகாரத்தை வைத்துக் கொண்டு குழம்பிய குட்டையில், நீங்கள் மீன்பிடிக்க விளைவது போல் தெரிகிறது. இதை தவிர்ந்து கொள்வது நல்லது என்பதையும் சுட்டி காட்ட விரும்புகிறோம். ஏனெனில் இதில் நிறைய உள்குத்து வெட்டுக்கள் உள்ளது. மைத்திரி ஆள், ரணில் ஆள், கூட்டணிக்கு பிடித்த ஆள் பிடிக்காத ஆள்...கொடுத்தவன் பெளத்தன், தேவையானவன் இந்து, கிடைத்தவன் முஸ்லீம்.... இவற்றுக்கிடையில் ஆளுக்கு ஆள் துவேசம் பேசுகிறார்கள்... ஆக இந்துக்கலாச்சார பிரதி அமைச்சராக ஒரு இந்து இருப்பதுவே ஒரு ஆரோக்கியமான, பண்பான விடயமாகும்.

    ReplyDelete
  9. இக்கட்டுரையில் தேவையற்ற வியாக்கியானங்கள் கூறப்படுகிறது. இலங்கையில் இரண்டாவது பெரிய சமூகமாக கூறப்பட்டு வரும் இந்து சமூகத்தில் அதனை பிரதிதித்துவப்படுத்த ஒருவர் இல்லாமலா ஒரு முஸ்லிமை நிறுத்தியது.

    இதனை பெற்றுக்கொண்ட மஸ்தானுக்கு அறிவென்பது கிடையாடு என்பது தெளிவாகிறது

    ReplyDelete
  10. இந்து மதத்தின் சிலை வழி பாடு புனிதமானது அது முஸ்லீம்களுக்கு பொருந்தாது. ஆகவே எமது மதத்தின்.:புனிததன்மையை காப்பது, இந்துக்களின் கடமை இதில்.: முஸ்லிம் ஒருவர் வருவது,எமது மதத்தின் புனித தன்மை. கெட்டு. விடும்

    ReplyDelete
  11. @Kuruvi, உங்கள் நடுநிலையான கருத்து சுப்பர்

    ReplyDelete
  12. Yes.. That ministry appointment is not fair
    we should be wise and understand other communities feelings

    ReplyDelete
  13. மகிந்தவின் காலத்தில் கலாசார அமைச்சு என்று ஒன்று மாத்திரம் வழங்கப்பட்டு சிங்கள அமைச்சரின் கீழ் இருந்தது. பணிப்பாளர்களும் சிங்களவர் இருந்த போது ஒன்றும் பேசாதவர்கள் முஸ்லிம் எனும் போது மாத்திரம் தமிழ் உணர்வு போங்குவது மகிழ்ச்சி. இதைவிட வட கிழக்கு இணைப்பு வேற.

    ReplyDelete

Powered by Blogger.