Header Ads



தாதி­ உடை, முஸ்லிம்­க­ளுக்கு பாது­காப்­பானதல்ல - ஹக்கீம்

தாதி­மார்­க­ளுக்கு புதி­தாக வழங்­கப்­பட்­டுள்ள ஆடை மாதி­ரியில் முஸ்லிம் பெண்­க­ளுக்கு பாது­காப்­பான ஏற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. ஆகவே இது குறித்து சுகா­தார அமைச்சு உரிய நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் சபையில் கோரிக்கை விடுத்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை மகப்­பேற்று நன்­மைகள் திருத்தச் சட்­ட­மூ­லத்தின் மீதான விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள மகப்­பேற்று நன்­மைகள்‍ தொடர்­பான சட்­ட­மூ­லத்தில் தொழில்­பு­ரியும் கர்ப்­பிணி தாய்­மார்­க­ளுக்கு 84 நாட்கள் விடு­முறை வழங்­கு­வது உட்­பட இன்னும் பல சலு­கைகள் குறித்த சட்­டத்தின் ஊடாக வழங்­கப்­பட்­டுள்­ளது. 

குடும்ப நல­னுக்கு தடை­யாக இருக்­கின்­ற­வற்றை நீக்­கு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­கின்­றமை குறித்து பாராட்­டு­கின்றேன்.பொது­வாக வெளி­நா­டு­களில் பெண்­ணொ­ருவர் கர்ப்­பி­ணி­யாக இருக்கும் போது பெண்­க­ளுக்கு மாத்­தி­ர­மின்றி தந்தை என்ற வகையில் ஆண்­க­ளுக்கும் விடு­மு­றைகள் வழங்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.

தாதி­மார்­க­ளுக்கு புதி­தாக வழங்­கப்­பட்­டுள்ள ஆடை மாதி­ரியில் முஸ்லிம் பெண்­க­ளுக்கு பாது­காப்­பான ஏற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. முன்பு காணப்­பட்ட ஆடை மாதி­ரியில் முஸ்லிம் பெண்­க­ளுக்­கான ஏற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தன. என்­றாலும் புதிய முறை­மையில் நீண்ட காற்­சட்­டை­யுடன் கூடிய மாதிரி வழங்கப்பட்டாலும் எமது கலாசாரத்திற்கு ஏற்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படவில்லை. ஆகவே இது குறித்து சுகாதார அமைச்சு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

1 comment:

  1. தாதிகளுக்கல்ல.குடும்பநல உத்தியோகத்தர்காளுக்கு

    ReplyDelete

Powered by Blogger.