Header Ads



பலஸ்தீன் தாதிப் பெண்ணின், ஜனாஸாவில் மக்கள் வெள்ளம்


காஸா எல்லைப் பகுதியில் மருத்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது இஸ்ரேல் இராணுவத்தினரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு கொலை செய்யப்பட்ட தாதிப் பெண்ணின்  இறுதிக் கிரியைகளில் ஆயிரக்கணக்கான பலஸ்தீனர்கள் கலந்து கொண்டனர்.

21 வயதான ரசான் அல் நஜர் என்ற தன்னார்வ தொண்டு நிறுவன தாதிப் பெண், சென்ற 01 ஆம் திகதி வௌ்ளிக்கிழமையன்று இஸ்ரேல் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

கடந்த வெள்ளிக்கிழமை காஸா பகுதியில் பலஸ்தீன் போராளிகளுக்கும் இஸ்ரேல் இராணுவத்துக்கும் இடையில் கடும் மோதல் இடம்பெற்றுள்ளது. இதன்போது காயமடைந்த பலஸ்தீனர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு களத்தில் ரசான் அல் நஜர் கடமையாற்றியுள்ளார். இதன்போது, இஸ்ரேல் இராணுவம் இப்பெண்ணின் மீதும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

3 comments:

  1. திருத்தம்: பலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேல் இராணுவத்தினருக்கும் இடையில் "கடும் மோதல்" நடைபெறவில்லை! மாறாக, பலஸ்தீனர்கள் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். அவர்களை இஸ்ரேல் ராணுவம் Sniper மூலம் கொன்று குவிக்கிறது! இதில் கொல்லப்பட்ட பெண்தான் Razan Al Najjar !

    ReplyDelete
  2. சரியா சொன்னீங்க... நம்ம முஸ்லீம் ஊடகங்களே பலஸ்தீன் நிலமையை தெளிவா சொல்ல தயங்குது. அந்நிய உடகங்களை பற்றி சொல்லவா வேண்டும்

    ReplyDelete

Powered by Blogger.