Header Ads



வஹாபிகள் பொதுபல சேனாவுக்கு, ஜம்பர் அணிவிக்க முயன்றனர் - ஞானசாரர்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு அப்போதே புரிந்த விடயம், இப்போது தான் எமக்குப் புரிந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார் பொது பலசேனாவின் பொதுச்செயலர் கலகொட அத்தே ஞானசார தேரர்.

இன்று -26- நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை ‘தந்திர நரி’ என்று விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் குறிப்பிட்டது முற்றிலும் உண்மையே.

பிரபாகரனுக்கு அப்போதே புரிந்த விடயம், தற்போது தான் எமக்கு புரிந்துள்ளது.

அரசியலில் இடம்பெறும் ஒவ்வொரு விடயங்களையும் பிரதமர் தமக்கு சாதகமான முறையில் மிகத் தந்திரமான முறையில் எவருக்கும் தெரியாத வகையில் பயன்படுத்திக் கொள்கின்றார்.

நாட்டு மக்களுக்கு அரசியல்தீர்வு பெற்றுத் தருவதாக கூறி அவரே, இனங்களுக்கிடையில் மறைமுகமாக வன்முறையை தோற்றுவிக்கின்றார்.

இனிவரும் காலங்களில் எந்த அரசியல் தரப்பினருக்கும் ஆதரவு வழங்க போவது கிடையாது. நாட்டு மக்கள் மகிந்தவையும் நம்ப வேண்டாம்  மைத்திரியையும் நம்ப வேண்டாம்.

சிறந்த அரசியல் தலைவரை  சிங்கள பௌத்த மக்கள் ஒன்றிணைந்து தெரிவு செய்ய வேண்டும்.

நாட்டின் அதிபரைத் தெரிவு செய்யும் போது தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் வாக்குகள் முக்கியமாக  உள்ளன.

ஆனால் இரண்டு பிரிவினரின் கோரிக்கைகளையும், கடந்த அரசாங்கமும், தற்போதைய அரசாங்கமும்  நிறைவேற்றவில்லை.

சிங்கள பௌத்த பெரும்பான்மை மக்கள் கடந்த காலங்களில் அரசியல் ரீதியில் விட்ட தவறுகளை இனிமேலும் தொடர வேண்டாம்” என்றும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை, சிறைச்சாலையில் தனக்கு காற்சட்டையை அணிவிக்க முயற்சிக்கப்பட்ட போதும், தான் அதனை அணியவில்லை என்றும் ஞானசார தேரர் கூறினார்.

சிறையில் இருந்த ஐந்து நாட்களும் தான், காவி உடையை கழற்றி வைத்து விட்டு, சாரமும் சட்டையும் அணிந்திருந்தேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

2

தன்னைச் சிறையில் போட்டதற்கான முழுப் பொறுப்பும் இந்த அரசாங்கத்துக்குரியது என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் முன்னணி அமைச்சர்கள் இருவரும் அதற்கு மேல் உள்ள இன்னும் ஒருவரும் சேர்ந்து விரைவாக ஞானசாரவுக்கு ஜம்பர் அணிவிக்க வேண்டும் என பேசியதாக தனக்கு தகவல் கிடைத்ததாகவும் தேரர் கூறினார்.
தூதரகங்களின் தேவைக்கு ஏற்ப, அறிக்கைகளை தயாரித்து அரச சார்பற்ற அமைப்புக்கள் செய்த சூழ்ச்சியின் வெளிப்பாடே தனக்கு எதிரான தீர்ப்பு எனவும் தேரர் தெளிவுபடுத்தினார்.
கடந்த 15 வருட காலமாக தன்னை சிறைப்படுத்தவும், ஜம்பர் அணிவிக்கவும் இந்த நாட்டின் சக்திகள் பல செயற்பட்டு வருவதாகவும், இன்றும் அது நடைபெறுவதாகவும் தேரர் சுட்டிக்காட்டினார்.
இந்த நாட்டிலுள்ள வஹாப் வாத அடிப்படை வாதிகளுக்கும் பொது பல சேனாவுக்கு ஜம்பர் அணிவிக்க வேண்டும் என்ற தேவை காணப்பட்டதாகவும் ஞானசார தேரர் மேலும் குறிப்பிட்டார்.
ராஜகிரியவில் உள்ள  பொதுபல சேனா தலைமையகத்தில் இன்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் தேரர் இதனைக் கூறினார்.   (

8 comments:

  1. I will give you 100,000 us $, if you. Tell me what Whahhabi is. Are yu ready? Publish it front of a Muslim,a Hindhu, and a Budhist. We will go from there.

    ReplyDelete
  2. @Sahul, இந்த மிக இலகுவான கேள்விக்கு $100K பரிசா??

    வஹாபிசம் (wahahabism) என்றால் “முஸ்லிம் அடிப்படைவாதம்”.
    Google பண்ணி பாருங்கள் சாரே.

    ReplyDelete
  3. வ‌ஹ்ஹாபிச‌ம் என்றால் முஸ்லிம் அடிப்ப‌டைவாத‌ம் என்று பொருளாம். அப்ப‌டியாயின் இது ந‌ல்ல‌ அர்த்த‌ம்தானே. ஒவ்வொரு ச‌ம‌ய‌த்த‌வ‌னும் த‌ன‌து ம‌த‌த்தின் அடிப்ப‌டையைத்தானே ப‌ற்றிப்பிடிக்க‌ வேண்டும். அடிப்ப‌டையை விட்டு விட்டு கிளைக‌ளையா பிடிப்ப‌து?
    வ‌ஹ்ஹாபிச‌ம் என்றால் அடிப்ப‌டைவாத‌ன் என்றால் ஒவ்வொரு முஸ்லிமும் வ‌ஹ்ஹாபி ஆக‌ வேண்டும்.
    ஆனால் உண்மையில் வ‌ஹ்ஹாபிச‌ம் என்ற‌ ஒன்று இஸ்லாத்தில் இல்லை. இது முஸ்லிம் ச‌மூக‌த்தை பிள‌வு ப‌டுத்த‌ எதிரிக‌ளால் உருவாக்க‌ப்ப‌ட்ட‌ வார்த்தை. முஸ்லிம்க‌ள் அனைவ‌ரும் முஸ்லிம்க‌ளே.

    ReplyDelete
  4. The Noble Eightfold path to enlightenment consists of cultivating the following :
    (1) Right View,
    (2) Right Intention,
    (3) Right Speech,
    (4) Right Action,
    (5) Right Livelihood,
    (6) Right Effort,
    (7) Right Mindfulness, and
    (8) Right Concentration.

    In the Five Precepts Buddha advises abstinence (completely avoid)from:
    (1) harming living beings,
    (2) taking things not freely given,
    (3) sexual misconduct,
    (4) false speech, and
    (5) intoxicating drinks and drugs causing heedlessness

    Who is following Buddhism..?

    ReplyDelete
  5. @ Ajan, Then tell me what is fundamentalism?

    ReplyDelete
  6. ஐயா ஞான சாரரே!
    மகிந்தவும் வேண்டாம், மைத்திரியும் வேண்டாம் என்றீர், பேசாம ஒருதரம் ஜே.வி.பி க்கு ஆதரவு வைத்துப்பாருங்க்களேன், இதுவே இன்றையே தேவை, இவ்விரு பிரதான கட்சிகளையும் தோட்கடித்து நாட்டின் நலனுக்காக ஒருதடவை மாற்றத்தை நோக்கி நாம் அனைவரும் பயணிப்பது அவசியமாகியுள்ளது.

    ReplyDelete
  7. வஹ்ஹாபிகள் பொது பல சேனாவுக்கு ஜம்பர் அணிவிக்க விரும்பி இருக்கலாம்!

    ஆனால், ஓர் முஸ்லிம் இஸ்லாத்தின் அடிப்படைகளைக் குர்ஆன் ஊடாக  அதனை அருளிய அல்லாஹ்விடமிருந்தும் அவனது  தூதரிடம் இருந்தும் கற்று, தாம் கற்றவை போன்றே அத்தூதரை  எல்லா விடயங்களிலும் அடியொற்றிப் பின்பற்றியும் நடப்பான்.

    முஸ்லிம்களாகிய அவர்கள் தமக்கு மத்தியில் வஹ்ஹாபி, ஷீஆ, சுன்னி, சலபி, தப்லீகி, தவ்ஹீதி, போன்ற எந்த பிரிவினைப் பெயரையும் கொண்டு பிரிந்திருக்க விரும்ப மாட்டார்கள். 

    முஸ்லிம் என்ற ஒரே பெயரின் கீழ் இறை கட்டளைகளுக்கு அடிபணிந்து  மனித இனத்தையே ஒற்றுமைப் படுத்தும் நோக்கைக் கொண்டிருப்பர். 

    ஆடைகள் எனும்போது  ஜம்பர்களை அல்ல, அவ்விறைத் தூதர்கள் அணிந்தது போன்றே ஆண்கள் ஜிப்பாக்களையும் பெண்கள் முகமும் தம் இரு கரங்களும் தவிர ஏனையவை மறைந்ததாகவும் தாம் உட்பட சக மனிதர்களாகிய பொது பல சேனா போன்ற அனைவரும் அணிவதையே ஆசைப் படுபவர்களாக இருப்பர்!

    இதனால் மனிதர்களுக்கிடையில் சமத்துவம் அதனூடாக சமாதானம்,  நல்லிணக்கம் ஏற்பட வாய்ப்புகள் நிறையவே உள்ளன.

    இலங்கையில் JVP கட்சியினர் முயன்று கொண்டிருக்கும் அனைவருக்கும் நீதி சமாதானம் போன்ற இலக்குகளை அடைந்துகொள்ள இஸ்லாத்திலுள்ள இவ்வாறான  சிறப்பான அம்சங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இங்கு Unknown கருத்திட்டுள்ளது போன்று ஞானசாரர் இது விடயத்தை சாதகமாகப் பரிசீலித்தால் இந்த நாடும் அதன் மக்களும் அதிகம் நன்மை  பெறுவர்.

    ReplyDelete
  8. Wahabism means the people who are jealous about the people who are really follow islam. So wahabi cannot be a muslim and almost like jews or jealous non muslims say that they hide their body by skinny which espose their feature very nicely and lovely.

    ReplyDelete

Powered by Blogger.