Header Ads



கம்பி எண்ணுவாரா ரஞ்சன்..?

சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, இந்நாட்டின் நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளில் பெரும்பான்மையானவர்கள் மோசடிகாரர்கள் என்று தெரிவித்திருப்பதன் ஊடாக, நீதிமன்றத்தை அவமதித்துள்ளார் என்பது சாதாரணமாக பார்க்கின்ற போதே தெரிகின்றது என சட்டமா அதிபர், உயர்நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.

நீதிமன்றத்தை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு, இன்று  (04) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, சட்டமா அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிலையில், அவ்வழக்கை எதிர்வரும் 18 ஆம் திகதியன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு உயர்நீதிமன்றம் தீர்மானித்தது.

3 comments:

  1. சரத் என் டி சில்வா, ராஜபக்சவின் சுனாமி வங்கி விடயமாக தான் அளித்த தீர்ப்புக்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டார். ஆக நீதி பதிகளும் சட்டமா அதிபர் திணைக்களமும் தேவ தூதர்களும் அல்ல, விமர்சனத்துக்குள்ளாக்காமல் இருப்பவர்களும் அல்ல. இந்த நாட்டின் சட்டம் ஒழுங்கு சரியாக நிலைநாட்டப்படாத சம்பவங்கள் பல உள்ளன. ஞானசாராவுக்கும், பலசேனாக்களுக்கும் சட்டமும், நீதியும் சரியாக இயங்களில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயமே. மிக் விமான கொள்முதல் சம்பந்தமாக கோத்தபாய ராஜபக்ச சம்பந்தமான வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள் 3 or 4 பேர் வழக்கில் இருந்து தாமாகவே விலகி உள்ளார்கள். இது அந்த வழக்கின் காலத்தை மேலும் அதிகப்படுத்துகிறது, யாவரும் அறிந்த விடயமாகும். மேன்முறையீடு, நீதி கொமிசன் போன்றவைகள் ஏன் உள்ளன; முறைகேடுகளும், அதிகார துஸ்பிரயோகங்களும், மோசடிகளும் நடந்தால் முறையிடுவதட்கு தானே. முடிந்தால் ரஞ்சனை கைது செய்யட்டும், ரஞ்சன் தனது பக்கத்து உண்மைகளை உலகுக்கு அறியப்படுத்தட்டும். பொறுத்திருந்து பாப்போம்.

    ReplyDelete
  2. சரத் என் டி சில்வா, ராஜபக்சவின் சுனாமி வங்கி விடயமாக தான் அளித்த தீர்ப்புக்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டார். ஆக நீதி பதிகளும் சட்டமா அதிபர் திணைக்களமும் தேவ தூதர்களும் அல்ல, விமர்சனத்துக்குள்ளாக்காமல் இருப்பவர்களும் அல்ல. இந்த நாட்டின் சட்டம் ஒழுங்கு சரியாக நிலைநாட்டப்படாத சம்பவங்கள் பல உள்ளன. ஞானசாராவுக்கும், பலசேனாக்களுக்கும் சட்டமும், நீதியும் சரியாக இயங்களில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயமே. மிக் விமான கொள்முதல் சம்பந்தமாக கோத்தபாய ராஜபக்ச சம்பந்தமான வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள் 3 or 4 பேர் வழக்கில் இருந்து தாமாகவே விலகி உள்ளார்கள். இது அந்த வழக்கின் காலத்தை மேலும் அதிகப்படுத்துகிறது, யாவரும் அறிந்த விடயமாகும். மேன்முறையீடு, நீதி கொமிசன் போன்றவைகள் ஏன் உள்ளன; முறைகேடுகளும், அதிகார துஸ்பிரயோகங்களும், மோசடிகளும் நடந்தால் முறையிடுவதட்கு தானே. முடிந்தால் ரஞ்சனை கைது செய்யட்டும், ரஞ்சன் தனது பக்கத்து உண்மைகளை உலகுக்கு அறியப்படுத்தட்டும். பொறுத்திருந்து பாப்போம்.

    ReplyDelete
  3. மிக சிறந்த உண்மையாளர் ரஞ்சன், அவர் சொன்னதிலும் அதை நியாயப்படுத்திய Kuruvi இன் கூற்றிலும் எந்த தவருமில்லை. 100% சரி. நாட்டில் நடக்கின்ற குற்றங்க்களுக்கு முதலில் தண்டிக்கபடவேண்டியவர்கள் நீதிபதிகளும் சட்டத்ரணிகளும் என்றால் மிகையாகாது. எல்லாமே காசுக்குத்தான்,காசு எப்பக்கம் கதிக்குமோ அப்பக்கமே நீதியும் கதிக்கும். உண்மையை பொய்யென்றும் பொய்யை உண்மையென்றும் நம்பவைப்பதும் அதன்படி தீர்ப்பெழுதுவதும் இவர்களன்றி வேறுயார்?

    ReplyDelete

Powered by Blogger.