Header Ads



ஜனாதிபதி வேட்பாளராக பீரிஸ்...? ராஜபக்சக்களின் குடும்ப மோதலால் முடிவு


அடுத்த அதிபர் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளராக, கட்சியின் தலைவராக உள்ள பேராசிரியர் ஜி.எல்.பீரிசை நிறுத்துவதற்கு, முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச முடிவு செய்துள்ளார்.

கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

அதிபர் வேட்பாளர் தொடர்பாக ராஜபக்ச குடும்பத்துக்குள் ஏற்பட்டுள்ள பனிப்போரை அடுத்தே, மகிந்த ராஜபக்ச இந்த முடிவை எடுத்துள்ளார் என்று, அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

அதிபர் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு, ராஜபக்ச குடும்பத்துக்குள் கோத்தாபய, பசில் ராஜபக்ச, சமல் ராஜபக்ச ஆகியோர், தமது ஆதரவாளர்களின் மூலம் பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையிலேயே பேராசிரியர் ஜி.எல்.பீரிசை அதிபர் தேர்தலில் நிறுத்த மகிந்த ராஜபக்ச முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

2 comments:

  1. அடிக்கடி ஞாபக மறதி கொண்டவர், ஒரு காது கேட்பதில்லை. மற்றொரு காது கேட்பதில் பலவீனம்.அவர் ராஜபக்ஸவின் பொம்மையானால் நிலைமை எப்படியிருக்கும்?

    ReplyDelete
  2. அப்படியென்றால் இவர் அதற்கு தகுதியர்வர், அங்கவீனர்கள் ஜனாதிபதியாக இருக்க முடியாது என்ற விதிமுறையும் உண்டு என்று நினைக்கின்றேன்...

    ReplyDelete

Powered by Blogger.