Header Ads



மதுகமயில் இனிமேல், மாட்டிறைச்சிக்கடை இல்லை - திரண்டுவந்த பிக்குமார்கள்

மதுகம பொதுச்சந்தையில் இயங்கி வந்த மாட்டிறைச்சிக் கடையை 2019 முதல் மூடிவிடுவதற்கு மதுகம பிரதேச சபையில் முன்வைக்கப்பட்ட தீர்மானம் 22 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது.

இது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (மொட்டு) வின்பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் நாரவில சமித்தவஞ்ச ஹிமி பிரேரணையை முன்வைத்தார். மதுகம பொதுச்சந்தையில் இயங்கும் மாட்டிறைச்சிக் கடைக்கு 2019 ஆம் ஆண்டுக்கான அனுமதியை வழங்குவதா இல்லையா என்பது தொடர்பில் அங்கத்தவர்களிடையே வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். இது தொடர்பிலான விவாதத்தின் பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது 28 பேர் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர். ஏ.எச்.எம்.ரம்ஸான் உட்பட மூன்று பேர் பிரேரணைக்கு எதிராக வாக்களித்ததோடு, மூன்று பேர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது தவிர்ந்திருந்தனர்.

இந்த வாக்கெடுப்பு நடைபெறும் வேளையில் பிரதேசத்தின் பெருந்தொகையான பௌத்த மத குருக்கள் பிரசன்னமாகி இருந்ததோடு, ஏராளமான பொதுமக்களும் பார்வையாளர்களாகக் கலந்து கொண்டனர்.

இந்தத் தீர்மானத்தின் காரணமாக மத்துகம பிரதேச சபைக்கு டென்டராகக் கிடைத்து வந்த 38 இலட்சம் ரூபா வருமானத்தை மத்துகம பிரதேச சபை இழக்கின்றது.

9 comments:

  1. Very good move
    must stop all beef stalls
    2 years later they will realize

    ReplyDelete
  2. beef stalls must be banned all over sri lanka. we can see the results after 5 years. also this is not a issue for muslims. so who cares ?

    ReplyDelete
  3. இலங்கையிலுள்ள சகல பிரதேச செயலகங்களிலும் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டால் 2020 இல் பல மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.

    ReplyDelete
  4. super. pls. do the same for all beef stalls.

    ReplyDelete
  5. நல்ல விடயம். அதே நேரம் பன்றிகளை அடித்து அவற்றை விற்பதன் மூலம் 38 இலட்சமல்ல 40 இலட்சம் தேடிக் கொள்வார்கள் போல. எவ்வாறிருப்பினும் முஸ்லிம்கள் தவிர்ந்த ஏனையோர் எந்தளவுக்கு பன்றி இறைச்சியை அதிகமாக சாப்பிடுகிறார்களோ அது இந்நாட்டு முஸ்லிம்களின் எதிர்காலத்துக்கு நன்மைபயக்கும் என்பது திண்ணம்.

    இதே போல் ஏனைய பிரதேசசபைகளும் இதனை கையாண்டால் முஸ்லிம்களுக்கு மேலும் நன்மை பயக்கும். முஸ்லிம்கள் தூரநோக்கோடு சிந்தித்து இந்நண்மையான காரியத்துக்கு ஒத்தாசையாக இருப்பது நல்லது.

    ReplyDelete
  6. உணவு சங்க்கிலி பற்றிய 5ஆம் தர கல்விகூட இல்லாத மோடயனுகள்.இதுக்குப்பின்னால் அப்படியுமொரு அரசாங்க்கம். கடவுளே!!

    ReplyDelete
  7. சிங்களவர்கள் தங்கள் பகுதிகளில் மாடு வெட்டுவதை தடைசெய்தால் yes-sir yes-sir என ஏற்றுக்கொள்ளுங்கள். ஆனால் இந்துக்கள் தங்கள் பகுதிகளில் இது பற்றி கதைத்தாலே போதும் லொள் லொள் என குலையுங்கள். நல்ல பொலிசீ தான், keep it up.

    ReplyDelete

Powered by Blogger.