Header Ads



ஹஜ் முகவர்கள், முஸ்லிம் திணைக்களம் மீது பழிசுமத்த சதித்திட்டம்


ஹஜ்ஜுக்கு செல்லவுள்ள முஸ்லிம்களிடமிருந்து பணத்தை அபகரிக்கும் நோக்குடன், முஸ்லிம் சமய விவகார திணைக்களம் மீது போலிக் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதற்கு முகவர்கள் சிலர் திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

முஸ்லிம் சமய விவகார அமைச்சும், அதன் திணைக்களமும் பொதுமக்களுக்கு வெளிப்படைத் தன்மையுடைய சேவையை வழங்கும் பொருட்டு, மக்களுக்கு பாதுகாப்பாகவும், சேவை மனப்பான்மையுடனும் ஹஜ் கோட்டாவை நிர்வகித்து வருகிறது.

எனினும் தமது முகவர் நிறுவனங்கள் பணம் சம்பாதிப்பது புதிய நடைமுறைகள் மூலம் தடைப்படலாம் என கருதும்  இந்த முகவர் நிறுவனங்கள், முஸ்லிம் சமய விவகார திணைக்களத்திற்கு எதிராக சிங்கள ஊடகவிலாளர்களை அழைத்தும், அவாகளுக்கு அன்பளிப்புப் பொருட்களை வழங்கியும் ஊடகவிலாளர் மாநாடொன்றை ஏற்பாடு செய்துள்ளதாகவும் அறியவருகிறது.

இந்நிலையில் குறித்த ஹஜ் நிறுவனங்கள் பற்றி, விப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

3 comments:

  1. Yaar antha mukawarkal? Athaiyum konjam sonnal aakkam poorthi aakum, illai endraal intha seithi Makkalukku pirayosanam illai.

    ReplyDelete
  2. இந்த சுரண்டல்கள் நடைபெறாமல் மக்கள் தங்களையும் தங்கள் பணம் பொருட்களைப் பாதுகாக்க முதலில் அவர்களுக்கிடையில் சிவில் குழுக்கள் இயங்க வேண்டும். அவை அரசியல், கட்சி சார்பற்ற வகையில் சுயமாக மக்களின் பாதுகாப்பை மாத்திரம் மையமாகக் கொண்டு இயங்கினால் மட்டும்தான் அவர்களையும் அவர்களின் உடைமைகளையும் பாதுகாத்துக் கொள்ள முடியும். அது தவிர்ந்த எந்த ஒரு அமைப்பினாலும் - அரசாங்க நிறுவனங்கள் உற்பட தங்களையோ தங்கள் பணத்தையோ பாதுகாக்கும் என நம்பினால் மண்குதிரையை நம்பி கடலில் இறங்கிய கதைதான்.

    ReplyDelete
  3. The quarrel on the sighting of the new moon is still not over, a further quarrel is now brewing on the on the Hajj issue. Cannot our community be without internal disputes.

    ReplyDelete

Powered by Blogger.