Header Ads



மகிந்தவை ஹிட்லரின் சகோதரர், என ரணில் வர்ணிப்பு

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனை மீள நாட்டுக்கு அழைத்து வர முடியாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களுடன் நடத்தப்பட்ட சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

மத்திய வங்கியின் ஆளுநர் பதவியிலிருந்து விலகியதனை தொடர்ந்து அர்ஜூன் மகேந்திரனுடன் எவ்வித தொடர்புகளையும் பேணவில்லை. எனவே அர்ஜூன் மகேந்திரனை மீளவும் நாட்டுக்கு அழைத்து வர முடியாத நிலைமை காணப்படுகின்றது.

மிக் விமான கொடுக்கல் வாங்கல் தொடர்பில் சர்வதேச பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டுள்ள ரஸ்யாவிற்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்கவுடன் இன்றும் ஹிட்லரின் சகோதரர் (மஹிந்த ராஜபக்ச) நெருங்கிய தெடர்பு பேணி வருகின்றார்.

எனவே ஹிட்லரின் சகோதருக்கு உதயங்கவை நாட்டுக்கு அழைத்து வருவது சிரமமானதாக இருக்காது.

ஹிட்லரின் சகோதரர் தலையீடு செய்து உதயங்கவை நாட்டுக்கு அழைத்து வராவிட்டாலும், அரசாங்கம் அவரை நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுத்துள்ளது.

சர்வதேச பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டவர்களுடன் ஹிட்லரின் சகோதரர் தொடர்பு பேணி வருகின்ற போதிலும், நான் அவ்வாறு தொடர்பு பேணுவதில்லை என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. A bulshit and irresponsible statement. Ranil is a ridiculous and mental case. How country people are suffering and this comedian makes such foolish statements only but no effective actions.

    ReplyDelete

Powered by Blogger.