Header Ads



ஞானசாரர் சிறையிலிருந்து விடுதலை, 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான 2 சரீர பிணைகள், வெளிநாடு செல்லவும் தடை


6 மாதகால கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, வெலிக்கடை சிறையில் தண்டனை அனுபவித்துவந்த கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

காணாமலாக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி, சந்தியா எக்னெலிகொடவை அச்சுறுத்தினார் மற்றும் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் செயல்பட்டார் என்றக் குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்டு, சிறைத்தண்டனை அனுபவித்துவரும் ஞானசார தேரரை,  ஹோமாகம நீதவான் நீதிமன்ற நீதவான் உதேஷ் ரணதுங்க இன்று -22- உத்தரவிட்டார்.

கடூழிய சிறைத்தண்டனை உத்தரவின் பிரகாரம், வெலிக்கடை சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும், பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு, ஹோமாகம நீதவான் நீதிமன்றில் இன்று (22) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போதே, நீதவான் மேற்படி உத்தரவைப் பிறப்பித்துள்ளா்ர.

ஹோமாகம மேல்நீதிமன்றத்தில் கடந்த 15 ஆம் திகதி இந்த மேன்முறையீட்டு மனுவை கலகொட அத்தே ஞானசார தேரரின் சட்டத்தரணி தாக்கல் செய்திருந்தார்.

கடந்த 19 ஆம் திகதி இந்த மேன்முறையீட்டு மனு விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போது  சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள் வருகைதராதன் காரணமாக குறித்த மனு இன்று 22 ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

10 comments:

  1. நல்லாட்சியின் அடுத்தடுத்த சாதனையில் இது லேடஸ்ட்

    ReplyDelete
  2. சுதந்திரமான நீதித்துறை; எந்த வித அரசியல் தலையீடுமே இல்லை; வாழ்க "கள்ள ஆட்சி"

    ReplyDelete
  3. ஆடிய நாடகம் அமைதியாய் முடிந்தது.

    ReplyDelete
  4. இது சட்ட விதிகளுக்கு உட்பட்டு கொடுக்கப்பட்டாலும், சட்டம் அழுத்தங்களுக்கும், அரசியல் அதிகாரத்துக்கும் அடிபணிந்து செயட்படுகிறதா என்ற சந்தேகத்தை பலருக்கு உட்படுத்துகிறது. ஆகவே ஞானசரருக்கு எதிராக இருக்கும் அனைத்து வழக்குகளும் விரைவு படுத்துவதோடு, எதிர்காலத்தில் அவரது எந்த நடவடிக்கையும் இந்த நாட்டின் சட்டத்துக்கு எதிராக இருக்குமானால் அவர் மீது உடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதை இந்த முஸ்லீம் சமூகம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். முஸ்லீம் சமூகமும், அரசியல் வாதிகளும் இந்த சிங்கள அரசாங்கத்துக்கும், மைத்திரிக்கும் மாபெரும் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

    ReplyDelete
  5. ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம் கள்ளத்தனமாக பயன்படுத்தப்பட்டுள்ளது... முஸ்லிம்களால் தாக்கல் செய்த வழக்கிற்கு தண்டனை கிடைக்கும் என்பது ஒரு பகல் கனவு... நிச்சயமாக இந்ந பொறம்போக்கு இனவாதியை இயக்குவது இந்த பொறம்போக்கு அரசாங்கமும் அதன் உறுப்பினர்களும்தான். இதில் எமது பொறம்போக்கு அரசியல்வாதிகளுக்கும் சம்பந்தம் உண்டு என்பதை நன்கு சிந்திக்கும் போது புரியும்...

    ReplyDelete
  6. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

    இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (அன்சாரிகளான) எங்களிடம்,

    'எனக்குப் பிறகு (ஆட்சியதிகாரத்தில் உங்களை விடப் பிறருக்கு) முன்னுரிமை வழங்கப்படுவதையும், நீங்கள் வெறுக்கிற சில விஷயங்களையும், பார்ப்பீர்கள்' என்றார்கள்.

    மக்கள், 'அப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று தாங்கள் கட்டளையிடுகிறீர்கள், இறைத்தூதர் அவர்களே?' என்று கேட்க,

    நபி(ஸல்) அவர்கள், '(ஆட்சியாளர்களான) அவர்களுக்கு அவர்களின் உரிமையை வழங்கிவிடுங்கள்; உங்கள் உரிமையை அல்லாஹ்விடம் கேளுங்கள்' என்றார்கள்.

    ஸஹீஹ் புகாரி ஹதீஸ் # 7052)
    www.tamililquran.com/hadhees

    ReplyDelete
  7. என்ன இலங்கையில் நீதி நிலைநாட்டப்பட்டு விடுமோ என்று பகல் கனவு கண்டேன் .

    ReplyDelete
  8. இறுதியில் தர்மம் வென்றுள்ளது

    ReplyDelete
  9. Gnasara there is a good friend of My3, so there is no surprise in his release. He is a protector of Buddhism and Buddhists.

    ReplyDelete

Powered by Blogger.