Header Ads



பள்ளிவாசல் நிர்வாகங்களுக்கு, ஏன் கரிசனை இல்லை

கடந்த மார்ச் மாதம் கண்டிப் பிர­தே­சத்தில் இடம்­பெற்ற வன்­செ­யல்­க­ளினால் பாதிக்­கப்­பட்­டுள்ள பள்­ளி­வா­சல்­களின் நிர்­வா­கங்கள் பல அர­சாங்­கத்­தினால் வழங்­கப்­படும் நஷ்­ட­ஈட்டுத் தொகையைப் பெற்றுக் பெற்றுக் கொள்வதில் கரிசனை காட்­டா­மையால் புனர்­வாழ்வு, அமைச்சு பல அசௌ­க­ரி­யங்­களுக்கு உள்­ளா­கி­யுள்­ள­தாக புனர்­வாழ்வு அமைச்சின் மேல­திக பணிப்­பாளர் எஸ்.எம். பதுர்தீன் தெரி­வித்தார்.

கண்டி வன்­செ­யல்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட பள்­ளி­வா­சல்­க­ளுக்­கான நஷ்­ட­ஈ­டுகள் தொடர்பில் வின­வி­ய­போதே அவர் இவ்­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் இது தொடர்பில் கருத்து தெரி­விக்­கையில்;

கண்டி மாவட்­டத்தின் 11 பிர­தேச செய­லா­ளர்கள் பிரி­வு­களில் உள்ள 18 பள்­ளி­வா­சல்கள் கடந்த மார்ச் மாதம் இடம்­பெற்ற வன்­செ­யல்­க­ளினால் பாதிக்­கப்­பட்­டன. இவற்றில் 9 பள்­ளி­வா­சல்­க­ளுக்­கான நஷ்­ட­ஈ­டு­களை புனர்­வாழ்வு வடக்கு அபி­வி­ருத்தி மீள் குடி­யேற்றம் மற்றும் இந்து சமய விவ­கா­ரங்கள் அமைச்சு ஏற்­க­னவே வழங்­கி­விட்­டது. பாதிக்­கப்­பட்ட பள்­ளி­வா­சல்­க­ளுக்கு முழு­மை­யான நஷ்­ட­ஈ­டுகள் வழங்­கப்­பட்­டுள்­ளன.

இதே­வேளை 9 பள்­ளி­வா­சல்கள் நஷ்­ட­ஈட்­டினைப் பெற்றுக் கொள்­வ­தற்குத் தேவை­யான ஆவ­ணங்­களை அமைச்­சுக்கு மூன்று மாதங்கள் கடந்தும் இது­வரை சமர்ப்­பிக்­க­வில்லை. விண்­ணப்­பங்­க­ளுடன் சமர்ப்­பிக்­கப்­பட வேண்­டிய பள்­ளி­வாசல் பதி­வி­லக்கம், வங்கிக் கணக்­கி­லக்கம் என்­பன சமர்ப்­பிக்­கப்­ப­ட­வில்லை. இந்த ஆவ­ணங்கள் இல்­லாத பள்­ளி­வா­சல்­க­ளுக்கு நஷ்­ட­ஈ­டுகள் வழங்க முடி­யாது. பள்­ளி­வாசல் நிர்­வா­கங்கள் அரச நஷ்­ட­ஈட்­டினைப் பெற்­றுக்­கொள்­வதில் அச­மந்தப் போக்­கினைக் கடைப்­பி­டித்து வரு­கின்­றன.

அமைச்சு பள்­ளி­வா­சல்­க­ளுக்­கான முழு­மை­யான நஷ்­ட­ஈட்­டினைப் பெற்றுக் கொடுப்­ப­தற்கு தயா­ரான நிலையில் உள்­ளது. குறிப்­பிட்ட ஆவ­ணங்கள் சமர்ப்­பிக்­கப்­பட்­டதன் பின்பே அமைச்­ச­ரவைப் பத்­தி­ர­மொன்று சமர்ப்­பிக்­கப்­பட்டு நஷ்­ட­ஈடு வழங்­கு­வ­தற்­காக அமைச்­ச­ர­வையின் அங்­கீ­கா­ரத்தைப் பெற்­றுக்­கொள்ள வேண்­டி­யுள்­ளது.

அமைச்சு குறிப்­பிட்ட 9 பள்­ளி­வா­சல்­களின் ஆவ­ணங்­களைக் கோரியும் இது­வரை அனுப்பி வைக்­கப்­ப­ட­வில்லை. இதனால் இந்தப் பள்­ளி­வா­சல்கள் தனியார் உத­வி­களைப் பெற்றுக் கொண்­டுள்­ள­தாக எண்ணத் தோன்­று­கி­றது என்றார்.

இது தொடர்பில் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் கண்டி கிளையின் செய­லா­ளரும் கண்டி உதவி மையத்தின் செய­லா­ள­ரு­மான மௌலவி ஏ.எல்.ஏ. கப்­பாரை தொடர்பு கொண்டு வின­வி­ய­போது அவர் பின்­வ­ரு­மாறு விடி வெள்­ளிக்குத் தெரி­வித்தார்.

சம்­பந்­தப்­பட்ட பள்­ளி­வா­சல்கள் சில பதிவு செய்­யப்­ப­ட­வில்லை என்­பதை அறி­கிறோம். அவற்றைப் பதிவு செய்து கொள்­ளு­மாறு நிர்­வா­கங்­க­ளுக்கு உலமா சபையும் கண்டி உதவி மையமும் பல தட­வைகள் அறி­விப்பு விடுத்­துள்­ளன என்றார்.

இது தொடர்பில் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள பணிப்­பாளர் எம். ஆர்.எம். மலிக் கருத்து தெரி­விக்­கையில்,

‘இரு பள்­ளி­வா­சல்கள் இது­வரை பதிவு செய்­யப்­ப­ட­வில்லை என எமக்கு அறியக் கிடைத்துள்ளது. குறிப்பிட்ட பள்ளிவாசல் நிர்வாகம் கோரினால் பதிவுக்கான விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்படும். பள்ளிவாசல்கள் பதிவு செய்யப்படுவது கட்டாயமாகும். பதிவு செய்யப்படாதுள்ள பள்ளிவாசல்கள் தொடர்பில் வக்பு சபை கவனம் செலுத்தும் என்றார்.                                         

No comments

Powered by Blogger.