Header Ads



இலங்கையில் இப்படியும் ஒரு திருமணம்


இலங்கையில் நடைபெற்ற திருமணம் ஒன்று ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

திருமண செலவுகளை குறைத்து தான் படித்த பாடசாலைக்கு மைதான அரங்கு ஒன்றை மணமகன் அமைத்துக் கொடுத்துள்ளார்.

அஹுன்கல்ல, பத்திரஜாகம கிராமத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஆடம்பரம் இல்லாமல் திருமணத்த நடத்திய மஞ்சுள பிரதீப் என்ற இளைஞன், பாடசாலைக்கான மைதான அரங்கை அமைத்துக் கொடுத்துள்ளார்.

திருமணத்தன்று அரங்கத்தை திறந்து வைத்து அதனை பாடசாலை பயன்பாட்டிற்கு வழங்குவதற்கான நடவடிக்கையை மணமக்கள் மேற்கொண்டுள்ளனர்.

அஹுங்கல பத்திராஜகம பிரதேசத்தை சேர்ந்த மஞ்சுள பிரதீப் என்ற இளைஞனே இந்த சேவையை செய்துள்ளார்.

கொழும்பில் உள்ள தனியார் நிறுவனத்தில் சேவை செய்யும் மஞ்சுள காதலித்த பெண்ணை திருமணம் செய்துள்ளார். அதற்கமைய இருவரும் இணைந்து திருமண தினத்தன்று இந்த அரங்கத்தை திறந்து வைத்துள்ளனர்.

திருமணத்தில் மதுபான விருந்துகளை நிறுத்தி பாடசாலைக்கு மைதான அரங்கு அமைத்த முதல் இலங்கையராக அவர் வரலாற்றில் இடம்பிடி்த்துள்ளார்.

தற்போது மிகவும் ஆடம்பரமாக தமது கொண்டாட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், மஞ்சுள தம்பதியின் செயற்பாடு பலருக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறான நடவடிக்கை ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் ஒரு முன்னூதாரணமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. Very good example, we really appreciate Manchula couple and wish them a long happy life with expecting more and more such example from others.

    ReplyDelete

Powered by Blogger.