Header Ads



ஜனாதிபதிக்கு கபீர் பதிலடி

- MM.Minhaj-

ராஜ­பக்ஷ ஆட்­சிக்கு எதி­ராக வெளி­யேறி வந்த அனை­வ­ரு­டனும் சேர்ந்தே 100 நாள் திட்­டத்தை தயா­ரித்தோம்.தற்­போது இல்லை என்று கூறு­வ­தனை ஏற்க முடி­யாது. இது தொடர்­பாக கேள்வி கேட்­ப­தாயின் ஜனா­தி­ப­தி­யிடம் கேட்க வேண்டும். இந்த திட்­டத்தில் மக்கள் நலன் சார்ந்த விட­யங்கள் பல உள்­ளன. ஆகவே இந்த திட்­டத்தை தயா­ரித்­த­மைக்­கான பொறுப்பை ஐக்­கிய தேசியக் கட்சி ஏற்­றுக்­கொள்­வ­தாக ஐக்­கிய தேசியக் கட்­சியின் தவி­சா­ளரும் அமைச்­ச­ரு­மான கபீர் ஹாஷிம் தெரி­வித்தார்.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் செயற்­குழுக் கூட்டம் நேற்று சிறி­கொத்தா கட்சி தலை­மை­ய­கத்தில் கூடி­யது. இந்த கூட்டம் நிறை­வ­டைந்த பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்கும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். இதன்­போது அமைச்­சர்­களும் இரா­ஜாங்க அமைச்­சர்­களும் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­வித்­தனர்.

இங்கு அமைச்சர் கபீர் ஹாஷிம் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கையில்,

கட்சி மறு­சீ­ர­மைப்­புக்­கான மாதாந்த செயற்­குழு கூடி­யது. எதிர்­வரும் காலங்­களில் எமது வேலைத்­திட்­டங்­களை உரிய முறையில் முன்­னெ­டுக்க உள்ளோம். நாம் நிய­மித்த குழுக்­களின் பிர­தி­ப­லன்கள் எத்­த­கை­யது என்­பது தொடர்பில் செயற்­கு­ழுவில் அதிக அவ­தானம் செலுத்­தப்­பட்­டது. தொகுதி அமைப்­பா­ளர்கள், புதிய பத­வி­க­ளுக்­கான ஆட்சி எதிர்­வரும் காலங்­களில் நிய­மிக்­க­வுள்ளோம்.

அத்­துடன் தற்­போது கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர் தொகு­தி­களின் நிலை மட்­டத்தை மீளாய்வு செய்து வரு­கின்றார். அதற்­கான அறிக்கை பூர்த்­தி­யான பின்னர் புதிய தொகுதி அமைப்­பா­ளர்கள் நிய­மிக்­கப்­ப­டுவர்.

மாகாண சபை­க­ளுக்­கான புதிய தேர்தல் முறைமை தொடர்பில் குழப்பம் உள்­ளது. இது தொடர்­பாக அனைத்து கட்சி தலை­வர்­க­ளுடன் பேசுவோம். அதன்­பின்னர் என்ன தேர்தல் முறை என்­ப­தனை தீர்­மா­னிப்போம். ஆகவே அதனை பிர­தமர் அறி­விப்பார்.

இதன்­போது ஊட­க­வி­ய­லா­ளர்­களின் கேள்­விக்கு அமைச்சர் பதி­ல­ளிக்கும் போது,

கேள்வி: -100 நாள் வேலைத்­திட்டம் தயா­ரித்­தமை தனக்கு தெரி­யா­தென்றும் அந்த வேலைத்­திட்டம் தொடர்­பாக ஜனா­தி­பதி அதி­ருப்தி வெளி­யிட்­டுள்­ளாரே?

பதில்:- 100 நாள் வேலைத்­திட்­டத்தை அனைத்து கட்­சி­களும் ஒன்­றி­ணைந்தே தயா­ரித்­தனர். அப்­போது ஜன­நா­யத்தை நிலை­நாட்­டு­வ­தற்­காக எம்­முடன் ஒன்­றி­ணைந்த கட்­சி­களின் உத­வி­யுடன் இந்த திட்­டத்தை தயா­ரித்தோம். 100 நாள் வேலைத்­திட்­டத்தின் ஊடாக பொது மக்களுக்கு சிறந்த நலன் கிட்­டி­யது. சமுர்த்தி கொடுப்­ப­னவு அதி­க­ரிக்­கப்­பட்­டது. அரச மற்றும் தனியார் ஊழி­யர்­க­ளுக்­கான சம்­பளம் அதி­க­ரிக்­கப்­பட்­டது. அத்­தி­யா­வ­சிய பொருட்­களின் விலை குறைக்­கப்­பட்­டது. சமையல் எரி­வாயு விலை குறைக்­கப்­பட்­டது. அத்­துடன் எமது நாட்டு சட்­டத்தில் பார­தூ­ர­மா­ன­வற்றை திருத்தி சாத­க­மான சட்­டங்­களை நிறை­வேற்­றினோம். ஆகவே நூறு நாள் திட்­டத்தை அனைத்து கட்­சி­க­ளுடன் சேர்ந்து தயா­ரித்தோம். 100 நாள் திட்டத்தை தயா­ரித்­த­மைக்­கான பொறுப்பை ஐக்­கிய தேசியக் கட்சி ஏற்­றுக்­கொள்ளும்.

கேள்வி ஜனா­தி­பதி தனக்கு தெரி­யாது என்று கூறு­கின்­றாரே?

பதில்: -அதுதான் அதற்­கான பதி­லைதான் நான் கூறினேன். நாம் அனை­வரும் ஒன்று சேர்ந்தே தயா­ரித்தோம். தற்­போது இல்லை என்று கூறு­வ­தனை ஏற்க முடி­யாது. இந்த கேள்­வியை நீங்கள் ஜனா­தி­ப­தி­யிடம் கேட்க வேண்டும். ராஜ­பக் ஷ ஆட்­சிக்கு எதி­ராக வெளி­யேறி வந்த அனை­வ­ரு­டனும் சேர்ந்தே 100 நாள் திட்­டத்தை தயா­ரித்தோம் எனறார்.

திலிப் வெத­ஆ­ராச்சி

இதன்­போது இரா­ஜாங்க அமைச்சர் திலிப் வெத­ஆ­ராச்சி ஊட­கங்­க­ளுக்கு குறிப்­பி­டு­கையில்,

100 நாள் வேலைத்­திட்டம் தொடர்­பாக என்னால் எதுவும் கூற முடி­யாது. 100 நாள் வேலைத்­திட்­டத்தை ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் சேர்ந்தே தயா­ரித்­தனர். இந்­நி­லையில் தற்­போது எனக்கு தெரி­யாது என்று கூறும் கருத்தை நான் வன்­மை­யாக எதிர்­க்கின்றேன். நாங்­களே தெரிவு செய்­து­விட்டு நாமே திட்டும் வாங்­கு­கின்றோம். ஆகவே இந்தப் பிரச்­சி­னைக்கு தலை­வர்கள் இரு­வ­ருமே தீர்வு காண­வேண்டும் என்றார்.

ரஞ்ஜித் மத்­தும பண்­டார

இதன்­போது அமைச்சர் ரஞ்ஜித் மத்­தும பண்­டார குறிப்­பி­டு­கையில், ஜனா­தி­பதி விமர்­ச­னங்­க­ளுக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை. ஜனாதிபதியின் கூற்று அவரது கருத்தாகும். அது தொடர்பில் ஆராய வேண்டியதில்லை. இதற்கு பதில் கூற வேண்டியதில்லை என்றே பிரதமரும் கூறினார் என்றார்.

எரான் விக்கிரமரத்ன

இதன்போது நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்கிரமரத்ன கூறும் போது, 100 நாள் வேலைத்திட்டத்தை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்தே தயாரித்தோம். தனியாக இந்த திட்டம் தயாரிக்கப்படவில்லை. இந்த திட்டத்தின் ஊடாக பல நன்மையான விடயங்கள் நடந்துள்ளன என்றார்.

No comments

Powered by Blogger.