Header Ads



போக்குவரத்தின் போது 90 வீதமான பெண்கள், பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளாகிறார்கள்

இலங்கையில் பெண்கள் மற்றும் இளம் யுவதிகளில் 90 வீதமானவர்கள் பொது போக்குவரத்து சாதனங்களில் பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளாகி வருவதாக ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த நிலைமையானது பெண்கள் மற்றும் இளம் யுவதிகளின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதில் குறிப்பிடத்தக்களவு பாதிப்புகளை ஏற்படுத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக இளம் யுவதிகளின் கல்வி, தொழில் தொடர்பான விடயங்களில் பாதிப்புகளை ஏற்படுத்துவதாக ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியம் கூறியுள்ளது.

இலங்கை பொது போக்குவரத்து துறையில் காணப்படும் தரம் சம்பந்தமான பிரச்சினை இந்த நிலைமை அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது எனவும் ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஒழுங்குப்படுத்தப்பட்ட மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பை வழங்கும் பொது போக்குவரத்து கட்டமைப்பு ஒன்று இருப்பது நாட்டின் முன்னேற்றத்தில் காட்டப்படும் அடையாளமாகும்.

எனினும் இலங்கையில் அது இல்லை என்பதால், அதனை ஏற்படுத்த பொறுப்புக் கூறவேண்டியவர்கள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஐக்கிய நாடுகள் சனத் தொகை நிதியம் வலியுறுத்தியுள்ளது.

1 comment:

  1. Ur percentage is wrong actually 100 person should be b cos girls whering Dress all sexis just follow Islamic dress then u tell media how many percentage

    ReplyDelete

Powered by Blogger.