Header Ads



பிறை குழப்பத்தை ஆராய 7 பேர் கொண்ட குழு - அகார் முஹம்மட், சட்டத்தரணி யாசினுக்கும் இடம்


-AA. Mohamed Anzir-

சவ்வால் மாத தலைப்பிறை தொடர்பில், எழுந்த பிரச்சினைகளை ஆராய்வதற்காக 7 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இன்று செவ்வாய்கிழமை-19- முஸ்லிம் சமய விவகார திணைக்களத்தில், நடைபெற்ற முக்கிய கலந்துரையாடலின் போது இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் கலந்துரையாடப்பட்ட சகல விடயங்களும் jaffna muslim இணையத்திற்கு கிடைத்தபோதும்,  அவற்றையெல்லாம் செய்தியாக வெளியிடுவதற்கான அனுமதி கிடைக்கவில்லை.

எனினும் முக்கிய பல, மாற்றங்கள் நிகழும் என நம்பப்படுகிறது.
குறிப்பாக சந்தேகத்திற்குரிய நாட்களில் மாலை 8 மணியுடன் பிறைக்குழு, தனது அலுவல்களை நிறுத்திக்கொள்ளக் கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பலநூறு பேரின் கருத்துக்கள் கிடைத்துள்ள நிலையில் அவற்றை ஆராயவும், இதுதொடர்பில் நிபுணர் குழுவொன்றை நியமிக்கவும், பிராந்திய அலுவலகங்களை அமைக்கவும் தீர்மானிக்ப்பட்டுள்ளது.

அத்துடன், சிறந்த கல்வியாளர்களை உள்ளீர்க்கவும், பிறைக்கலண்டரை  திணைக்களமே வெளியிடவும், அவசியப்படுமிடத்து பிறை தொடர்புடையவர்களை வெளிநாட்டுக்கு அனுப்பி பயிற்சிபெற வைக்கவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கடந்த சவ்வால் பிறை, சிக்கல்கள் பற்றி முழுமையாக ஆராந்து எதிர்காலத்தில் பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்ப்பதென இங்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. 

மேலும் அகார் முஹம்மத், சட்டத்தரணி யாசின், றிஸ்வி முப்தி, பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள்,  முஸ்லிம் சமய விவகார பணிப்பாளர் மலீக்,  உள்ளிட்ட 7 அடங்கிய குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவல்களை முஸ்லிம் சமய விவகார அமைச்சர் ஹலீம் jaffna muslim இணையத்திற்கு உறுதிப்படுத்தினார்.



1 comment:

  1. These people should be given training in methods of conflict resolution

    ReplyDelete

Powered by Blogger.