June 26, 2018

6 வயது பிஞ்சு சிறுமியை, கொலை செய்தவனின் பரபரப்பு வாக்குமூலம்


" சிறுமியை மறைவான இடத்திற்கு கூட்டிச் சென்று என் கையை அந்தரங்கப் பகுதியில் கை வைத்தேன். அப்போது அவள் மயங்கிவிட்டால். அதன் பின்னர் கயிற்றால் கழுத்தை நெரித்தேன்" என  யாழ்ப்பாணம் சுளிபுரம் பகுதியில் ஆறு வயது சிறுமியை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர் பொலிஸாருக்கு வழங்கிய தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

நேற்று யாழ்ப்பாணம் சுளிபுரம் காட்டுப்புலம் பகுதியை சேர்ந்த ஆறு வயதான சிறுமியொருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் கிணற்றுக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார். 

சடலம் மீட்கப்பட்ட போது கழுத்து பகுதி நெரிக்கப்பட்ட காயங்கள் காணப்பட்டதுடன் கீழ் உள்ளாடை மாத்திரமே காணப்பட்டிருந்தது.

இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பாக ஊர் மக்கள் வழங்கிய தகவல்களுக்கு அமைய வட்டுக்கோட்டை பொலிஸாரால் நான்கு பேரை ஆரம்பத்தில் கைது செய்யப்பட்டிருந்தனர். 

இவர்களிடம் மிகத் தீவிரமான விசாரணைகளானது முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இவ்வாறான நிலையில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான அதே பகுதியை சேர்ந்த 21வயதான இளைஞன் தானே கொலை செய்ததாக ஒப்புக்கொண்டு அது தொடர்பான தனது வாக்குமூலத்தை பொலிஸாருக்கு வழங்கியுள்ளதாகவும் அவ் வாக்குமூலத்திலேயே மேற்படி தெரிவித்திருந்தாகவும் மூத்த பொலிஸ் உயர் அதிகாரியொருவர் எமது இணையத்தளத்திற்கு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அப் பொலிஸ் உயர் அதிகாரி மேலும் தெரிவித்திருப்பதாவது,

குறித்த இளைஞனது தாய் சிறுவயதிலேயே விட்டுச் சென்ற நிலையில் தந்தையுடனேயே வளந்துள்ளார். 

இவ்வாறான நிலையில் இவரே இக் கொலையை செய்துள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

சம்பவ தினமான நேற்று, அச் சிறுமி பாடசாலை விட்டு வீடு சென்ற போது அச் சிறுமியை புறா காட்டுவதாக கூறி அழைத்து சென்றுள்ளார். 

இவ்வாறு மறைவான இடமொன்றிற்கு அழைத்து சென்ற நிலையில் அவரது பாடசாலை சீருடையினை அகற்றி, சிறுமியை துஷ்பிரயோகப்படுத்தியுள்ளார்..

இதன்போது அச் சிறுமி மயக்கமடைந்துள்ளார். இதன் பின்னர் சிறுமியின் தோட்டை எடுத்துவிட்டு மாடு கட்டுவதற்கு பயன்படும் கயிற்றால் சிறுமியின் கழுத்தை நெரித்துள்ளார். 

இதன் பின்னரேயே குறித்த கிணற்றுக்குள் சிறுமியை தூக்கி வீசியுள்ளார்.

இக் குற்றச் செயலை செய்துவிட்டு குறித்த நபர் பிள்ளையை காணவில்லை என பெற்றோர் ஊர் மக்கள் தேடும் போது இவரும் சேர்ந்து தேடியுள்ளார்.

இந்நிலையில் இந் நபர் அப் பிரதேசத்தில் சம்பவம் இடம்பெற்ற அன்று நண்பகல் புறா இருக்கின்றதா என அப்பகுதியில் விசாரித்துள்ளார். 

இவ்வாறான நிலையில் அப் பகுதிக்கு பெரிதும் வந்திராத அவர் அன்று மாத்திரம் வந்திருந்தது ஏன் என இச் சம்பவம் இடம்பெற்ற பின்னர் ஊர்மக்கள் சிந்தித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியமையாலேயே இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

மேலும் குறித்த நபர் வழங்கிய வாக்கு மூலத்திற்கு அமைய மறைத்து வைக்கப்பட்டிருந்த அச் சிறுமியின் பாடசாலை சீருடை, புத்தக பை போன்றன மீட்கப்பட்டதுடன் அவற்றில் இரத்த கறைகள் காணப்பட்டமையும் அவதானிக்கப்பட்டிருந்ததாக அப் பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலதிக விசாரணைகளை தொடர்ந்து குறித்த நபரை மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அம் மூத்த பொலிஸ் உயரதிகாரி தெரிவித்துள்ளார்.

(ரி.விரூஷன்)

4 கருத்துரைகள்:

Where is our Hindu terrorist and Buddhist terrorist they will not open their dirty mouth on this matter because this child from low cast family for the Hindu terrorist and for the Buddhist terrorist she is from Tamil community so both terrorist will not care about it until their child abused by someone else.

Where is your Hindu Dharma?
Where is your Buddhist dharma?

Mr Sachchizanatham, where are you? Can't you raise your voice against such like incidents? Don't be bulshit anymore. You have more value for cow soul Rather than a kid's soul,

எவர் செய்திருந்தாலும் இதற்கு மதச்சாயம் பூசக்கூடது, ஏனெனில் இதுவொரு மனித இயற்கை, பிள்ளைகளை வளர்க்கும்போது தகுந்த கட்டுப்பாடுகளை, போதனைகளை சொல்லி வளர்த்து தகுந்த காலத்தில் அவர்களுக்கு திருமணத்தையும் கட்டிவைக்க வேண்டும். ஆனால், திருமணம் முடிக்க இன்று நம்மவருக்கு தேவை அரசாங்க தொழில் மட்டுமே. அரசாங்க தொழில் கிடைப்பதற்குல் ஒரு ஆண் இவ்வாரான தப்புக்களுக்கு ஆலாக அதிகம் நேருகிறது.
இக்குற்றவாளிக்கு தகுந்த தண்டனை வழங்க்கப்பட வேண்டுமென்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் நமக்கில்லை, நீதிமன்றில் காலம் தாழ்த்தாமல் அதையும் நேரகாலத்துடன் செய்துமுடித்தால் நன்று.

Unknow Says.. Says the truth.

Post a Comment