Header Ads



ஐ.தே.க.யின் 6 எம்.பி.க்களுக்கு, பிரதியமைச்சுப் பதவிகள்

ஐக்கிய தேசிய கட்சியின் ஆறு பின் நிலைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதி அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் ஆகியோரால் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான தெரிவு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, அரச நிர்வாக முகாமைத்துவம், சட்டம் மற்றும் ஒழுங்கு, தோட்ட உட்கட்டமைப்பு, சுற்றுலா, கைத்தொழில் மற்றும் வணிக, மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சுக்களுக்கான பிரதி அமைச்சுக்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த அமைச்சுப் பொறுப்புக்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களான நலின் பண்டார, லக்கி ஜெயவர்தன, ரஞ்சித் அலுவிஹார, அஜித் மான்னப்பெரும, எட்வட் குணசேகர மற்றும் மேலுமொரு நாடாளுமன்ற உறுப்பினர் பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

No comments

Powered by Blogger.