Header Ads



ஜனாதிபதியே முதல் குற்றவாளி, 500 மில்லியன் பணமும் பெற்றார் - மேர்வின் பரபரப்பு குற்றச்சாட்டு

ஜனாதிபதி தேர்தல் நேரத்தில், தேர்தல் செலவுகளுக்காக அலோசியஸ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரரிடம் 500 மில்லியன் ரூபா பணத்தை கொடுத்ததாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கியின் பிணை முறி விவகாரத்தில் ஜனாதிபதியே முதல் குற்றவாளி எனவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பு பார்க் வீதியில் உள்ள தனது வீட்டில் இன்று -11- நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் மேர்வின் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் காலங்களில் அரசியல்வாதிகளுக்கு பணம் கிடைக்கும். அந்த பணம் அரசியலுக்கு செலவிடப்படும். அதில் இலாபமும் உள்ளது. எனக்கும் இலாபம் கிடைத்துள்ளது.

எனக்கும் பணம் கிடைத்து. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேர்தலில் போட்டியிட்ட போது அவரது தம்பி டட்லி சிறிசேன, நான்கு செயலாளர்களை நியமித்து கொழும்பில் அலுவலகம் ஒன்றை திறந்திருந்தார்.

டட்லி சிறிசேனவுக்கு 500 மில்லியன் பணம் கிடைத்தது. ஒரே முறையில் அலோசியஸ் அந்த பணத்தை கொண்டு வந்து கொடுத்தார்.

தவறு அந்த இடத்தில் அல்ல. நாடாளுமன்றம் கலைக்கப்படும் முன்னர், மத்திய வங்கியில் கொள்ளை நடைபெறுகிறது என கோப் குழுவுக்கு முறைப்பாடு கிடைத்தது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி அப்போதே அதனை தடுத்து நிறுத்தியிருக்கலாம். அதனை நிறுத்தாது ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்தார்.

அவர்தான் இதில் முதல் குற்றவாளி. ஒன்றில் அவருக்கு நிறைவேற்று அதிகாரம் பற்றி தெரியாது அல்லது அதனை அமுல்படுத்தவில்லை. நிறைவேற்று அதிகாரத்தை எப்படி பயன்படுத்துவது என்று நான் ஜனாதிபதிக்கு பாடம் எடுக்கின்றேன்.

அல்லது சந்திரிக்கா அல்லது மகிந்த ராஜபக்சவிடம் செனறு கற்றுக் கொள்ளட்டும். ஜனாதிபதி மற்றவர்கள் மீது பழியை சுமத்தாது தனது அதிகாரத்தை பயன்படுத்தி அலோசியஸிடம் பணத்தை பெற்றவர்களின் பெயர்களை வெளியிடுமாறு கூறுங்கள். அப்படி செய்யாவிட்டால் அனைவரும் பிரச்சினை.

ஒரு மூட்டை பூச்சு கடித்து விட்டால், முழு படுக்கை மீதும் மூட்டை பூச்சியை கொள்ளும் மருந்தை தெளிப்பார்கள். ஒரு விசர் நாய் கடித்து விட்டது என்று அனைத்து நாய்களுக்கு ஊசி மருந்து போடுவார்கள்.

இல்லாவிட்டால் அனைத்து நாய்களையும் கொன்று விடுவார்கள். இது தவறு. ஜனாதிபதியால் மாத்திரமே இதனை செய்ய முடியும்.

ஜனாதிபதிக்கு முதுகெலும்பு இருக்குமாயின் நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி அனைத்து பெயர்களையும் வெளியிடுமாறு நான் கூறுகிறேன்.

பெயர்களை வெளியிடா விட்டால், ஜனாதிபதிக்கும் ஒரு தொகை கிடைத்திருக்கும். பெயர்களை வெளியிட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியிடம் அதிகாரம் இருக்கின்றது.

பிரதமரிடம் அதிகாரமில்லை. ஜனாதிபதி பெயர்களை வெளியிடா விட்டால் அவருக்கும் பணம் கிடைத்துள்ளது என்றே பொருள். இதனை நான் கூறியதாக ஜனாதிபதியிடம் கூறுங்கள்.

இல்லாவிட்டால் தற்காலிகமாக ஜனாதிபதி பதவியை என்னிடம் தர சொல்லுங்கள் என மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. நீண்ட நாட்களாக பதுங்கியிருந்து வௌிவந்துள்ள நச்சுப்புடையன் வாய் திறந்துள்ளது.அதன் விளைவுகள் இதன் பிறகுதான் தெரிந்து கொள்ளலாம்.

    ReplyDelete

Powered by Blogger.