Header Ads



ஹிட்லருக்கும், கோத்தபாயவுக்கும் இடையில் 2 ஒற்றுமைகள்

ஜெர்மனிய முன்னாள் சர்வாதிகாரி ஹிட்லருக்கும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கும் பொதுவான இரண்டு ஒற்றுமைகள் இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரான அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இன்று -28- நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஹிட்லரும், கோத்தபாய ராஜபக்சவும் மாசமிச உணவை உண்ணாதவர்கள் என்பதுடன் இருவரும் நாட்டுக்கு வெளியில் ஒரு நாட்டின் குடியுரிமையை வைத்துக்கொண்டு ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட முயற்சித்தனர்.

கோத்தபாய ராஜபக்ச அமெரிக்க பிரஜை என்பது போல், ஹிட்லர் ஜெர்மனியின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினாலும் அவர் ஒஸ்ரியா நாட்டின் பிரஜை.

இதேவேளை, இலங்கை மீது உண்மையான அன்பும், பக்தியும் இருந்தால், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டாலும் போட்டியிடாவிட்டாலும் முடிந்தால் அமெரிக்க குடியுரிமையை கைவிட்டு காட்டுமாறு கோத்தபாய ராஜபக்சவுக்கு சவால் விடுப்பதாகவும் அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. மேலும் இரு ஒற்றுமைகள்:

    1.  இருவரதும் பிறந்த நாட்கள் ஒரே தினம்:

       20ம் திகதி

    2.  இருவரும் அரங்கேற்றிய ஹோலோகோஸ்ட்|முள்ளிவாய்க்கால்
    போன்றன ஒரே தன்மையன:

       கொத்துக் கொலைகள்

    ReplyDelete

Powered by Blogger.