Header Ads



ஞானசாரருக்கு 1 வருட கடூழியச் சிறை

குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஞானசார தேருக்கு கடுமையான உழைப்புடன் 01 வருட சிறைத் தண்டனை விதித்து ஹோமாகம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அத்துடன் அவருக்கு 50,000 ரூபா நட்ட ஈடும், 3000 ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 

ஹோமாகம பிரதான நீதவான் உதேஷ் சனசிங்க இன்று (14) இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார். 

ஒரு வருடத்துக்கான சிறைத் தண்டனை 06 மாதங்களில் நிறைவடையும் வகையில் அவருக்கான தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

காணமற்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவை அச்சுறுத்திய சம்பவத்தில் கடந்த மே மாதம் 24ம் திகதி ஞானசார தேரர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். 

2016 ஆண்டு ஜனவரி 25 ஆம் திகதி ஹோமாகம நீதவான் நீதிமன்ற வளாகத்தில் வைத்து சந்தியா எக்னெலிகொடவை அச்சுறுத்தியதாக ஞானசார தேரர் மீது குற்றம் சுமத்தப்பட்டு வழக்கு இடம்பெற்று வந்தது.

4 comments:

  1. கடூழிய சிறையா? பிக்குமாருக்கு தான் உடலால் எந்த வேலையும் செய்ய தெரியாதே (ஒன்றை தவிர). ஆனால் கடுமையாக பேசும் படி தண்டனை கொடுத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். அதை அவர் சிறப்பாக செய்து சிறையில் சாதனையும் செய்யக் கூடியவர்.

    ReplyDelete
  2. Brother my comment...
    It's difficult to hard understanding wt u said..
    Plz simplify it inoder to understand..

    ReplyDelete

Powered by Blogger.